விகடன் - வெ.வித்யா காயத்ரி : 'சேரன் பாண்டியன்' படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. அதன்பிறகு 'நல்லெண்ணெய்' சித்ரா என்பது இவரது அடையாளமாக மாறியது.
80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா. 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்துவந்தவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்திருக்கிறார். இப்போது அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
கடந்த மே 21-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் சித்ரா. அதுகுறித்து ‘’21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது’’ என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார் சித்ரா. இப்போது அதே 21-ம் தேதி சித்ரா மரணமடைந்திருப்பது அவரது நண்பர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக