வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கார்த்தகீனியா -18 சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா...??? கானா (Ghana)

No photo description available.

Seetha Ravi Suresh   கார்த்தகீனியா -18   சேர சோழர்கள் ஆப்ரிக்கர்களா?
கானா (Ghana)
   கானாவில் முதல் இஸ்லாமிய அரசனாக பட்டத்துக்கு வந்தவன் Mansa musa keita கிபி 1400. இவனது காலத்தில் அட்லான்டிக்கின் கடற்பயணத்தை மேற்கொண்டது மாலியின் கடற்படை. முதல் கட்டமாக 400 கப்பல்களுடன் பயணம் புறப்பட்டது கடற்படை உலகத்தின் அனைத்து பகுதிகளையும் வெல்ல வேண்டும் என்கிற
 முசா கேதனின் ஆசையினால் அட்லான்டிக்கில் விடப்பட்ட மாலியின் படைகள் திரும்ப வரவேயில்லை.
          இதன்பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டாயிரம் கப்பல்களுடன் கடற்படையினர் அட்லான்டிக்கில் விடப்பட்டனர். ஆனால் அவர்களும் நாடு திரும்பாதலால் மாலியின் கடல்கடந்த ராஜ்ஜியம் அமைக்கும் முயற்ச்சிகள் முடிவுக்கு வந்தன. "Canoes of the coast of africa ready to sail" போர்ச்சுகீசிய கடற்பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். கொலம்பஸ் தனது 3rd voyage ல் கூறுவதாவது. தலையில் நீலநிற தலைப்பாகை அணிந்த கறுப்பு நிற மனிதர்களை வட அமெரிக்காவின் ஜமைக்கா மற்றும் கரீபியன்  கடற்கரைகளில் கண்டதாக குறிப்பிடுகிறார்.

          கொலம்பஸ் கண்ட நீக்ரோக்கள், வெஸ்புகி கண்ட நீக்ரோக்கள் கண்டிப்பாக மன்ச மூசாவின் கடற்படை வீரர்களாக இருக்கும் என்கிற கருத்து வரலாற்றியலாளர்களால் ஆணித்தரமாக முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் தலைமுடியில் தங்கத்துகள்களை பூசிக்கொள்ளும் கலாச்சாரம் மற்றும் வாய் கீழ்தாடையை துணியால் மறைக்கும் கலாச்சாரம் அன்றைய மாலியர்களிடம் மட்டுமே இருந்தது அதனால் கொலம்பஸ் கண்டது சோனின்கே நீக்ரோக்களைத்தான் என்பது நிருபணமாகிறது.
             16 ம் நூற்றாண்டின் ஐரோப்பியர் வரவுக்கு பின்னர் சோனகர்களும் மண்டன்களும் செல்வாக்கிழந்து தோற்கடிக்கப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவுக்கு Atlantic slave trade மூலமாக ஏற்றுமதியாகும் நிலைக்குள்ளாயினர். மாலியின் Cholof, serer,mandike,nago,fulani,tukalur,mano, seracule,songhai,zarma,hausa,mandara, gonja,kanuri,baguirmi,baman,bamilake, sara,nupe,arma,mauri,tuareg,borgu,gur, zongo,pepel ஆகிய இனத்தினர் வேட்டையாடப்பட்டு கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டனர். இது கண்கண் கேதன், வங்காரி கேதன், பெண்பா காந்தன் ஆகியோர் காலத்திலும் தொடர்ந்து நடைபெறலாயிற்று.
            சோனின்கேயினரின் வாங்கரா பிரிவு Serekole சேரகோல், Sereculeh சேரகுல, Serehuli சேரகுலி எனவும் அழைக்கப்பட்டு வந்தது. மாலியினரால் தோற்கடிக்கப்பட்ட கிபி 1235 லிருந்து கானாவின் சோனின்கேயினர் மேற்கின் அட்லான்டிக் கரையோர பகுதிகளான செனகல்,மௌரிட்டானியா,காம்பியா, பர்கினோபாஸோ,கினியா,பிசாவு ஆகிய பகுதிகளில் குடியேறிவிட்டனர். இதனால் சேரர் குடிகளும், சோழர் குடிகளும் பலம்பெற்றனர். மாலியை எதிர்த்து கிபி 1350 ல் சேரர்களும்,1415ல் சோழர்களும் தனியரசாக உருவெடுத்தனர்.
              வரலாற்றில் சோனகர்களாகிய சோனின்கேயினர் அறியப்படுவது 4000 வருடங்களாக கிமு 2000 முதல் இவர்கள் கடைபிடித்து வரும் சாதியடுக்கு முறைகளால்தான்.
1, Horon ஹோரன், ஹரன் என்பது உயர்சாதியாகும். நிலவுடமையாளர்கள் இதில் கிளைகள்...
(A) Tunkalemmu துங்கலம்மு(அரசன்)
(😎 Mangu மாங்கு (மந்திரிகள்)
(C) Kuralemme குறளம்மே (படை வீரர்கள்)
(D) Modinu மோடிநு (பூசாரிகள்)
2, Naxamala நக்சமாலா இரண்டாம் நிலை சாதியாகும். இவர்கள் உயர்சாதியினரை அண்டிப்பிழைக்க வேண்டும். அதாவது தொழிலாளர் குடிகளாகும். கிளைகளின் சாதி தொழில்வாரியானது.
(A) Tago தாகோ (கொல்லர்)
(😎 sakko சாக்கோ ( மர ஆசாரி)
(C) jaroo சாரூ (கணியன், புலவன்,பாணன்)
(D) garanke காரங்கி ( தோல் தொழில்)
3, Komo கோமோ அடிமைகள்.
                 இந்த சாதிமுறைமைகளில் தவறுபவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். கிளை சாதியில் கூட கலப்புத்திருமணம் தடைசெய்யப்பட்டது. நிலவுடமையாளன் உயர்சாதியானதால் மன்னனும் மதிக்கும் நிலையிலிருந்தான். அடிமைகளே விவசாயத்தொழிலாளராக இருந்தனர்.
அடுத்து மரக்கா சோனகர்களை பார்க்கலாம்.
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக