சனி, 9 ஜனவரி, 2021
திருவிதாங்கூர் மன்னர் நிலங்களை சட்ட விரோதமாக விற்ற வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல்! – மன்னர் குடும்ப வாரிசுகளுக்கு சம்மன்!
BBC :கன்னியாகுமரி கடற்கரை கடைகளில் பயங்கர தீ: 66 கடைகள் நாசம்
சுமார் 3 மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கபட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் பல்கலை நினைவு தூபி தகர்த்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை! – அமைச்சர் சரத் வீரசேகர
Metronews :யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத்தினரோ, பொலிஸாரோ இடித்தழிக்கவில்லை. இதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தை காரணம் காட்டி பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. ஆகவே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை
யாழ்ப்பாண பல்கலை கழகமும் புலிகளும் .. சமூகவலைதளங்களில் என்னதான் பேசப்படுகிறது?
Sugan Paris : புலிகள் என்பது ஒரு மனக் கட்டமைப்பு. நாஸிகள் அழிந்தாலும் அதன் மிச்சங்கள் நாஸி மனநிலைகள்இன்றும் இருக்கின்றன.
அவ்வாறே இதுவும். புலிகளுக்கு எப்போதும் ஒரு தந்திர மனம் உண்டு. பொது நிறுவனங்கள் ,பொது அமைப்புகளை சுதந்திரமாக இயங்கவிடாது , இவற்றில் தம்மைத் திணித்து அல்லது அவற்றைப் பலிக்கடாக்களாக ஆக்கிச் சீரழித்து தம்மை அதிலிருந்து தற்காத்துக்கொண்டு தப்பிக்கொண்டு அப்பாவி மக்களை முன்தள்ளி பலியிடுவது,
மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன!
malaimalar :பண்டாரா: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. 7 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் தெரிவித்தார். ..
>தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பண்டாராவில் நிகழ்ந்த, இதயத்தை நொறுக்கும் துயரமான சம்பவத்தில், நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்று கூறி உள்ளார்.
பார் கவுன்சில் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்! சட்டப்படிப்பையும் எட்டாக் கனியாக்க திட்டமா?” -
kalaignarseithigal.com : முதுநிலை சட்டப் படிப்பிற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.“முதுநிலை சட்டப் படிப்பிற்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “முதுநிலை சட்டப் படிப்பிற்கு (எல்.எல்.எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு” என இந்திய பார்கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்து விட்ட மத்திய பா.ஜ.க அரசு இப்போது, “இந்திய பார் கவுன்சில்” மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப் புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து- அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும்- கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.
பாஜக கூட்டணி- சசிகலா: அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது!
minnamblam : அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.அந்த வகையில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுக் குழுவை முன்னிட்டு பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு முறைப்படி தனித் தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட 3,500 பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்... காதல் திருமணம்…
Piddu Kaur (31) என்ற பெண்ணுக்கும், நபர் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ம ன க்க சப்பு ஏற்பட்டு Piddu Kaur கணவரை வி வா க ரத்து செய்தார். பின்னர் தனது பள்ளிகால நண்பர்களான Speetie Sing (36) மற்றும் அவர் மனைவி Sunny-ஐ Piddu சந்தித்துள்ளார். தங்கள் வீட்டில் வந்து ஒருவாரம் தங்கும்படி த ம் பதி Piddu-யிடம் கூற அவரும் வந்து தங்கினார் . அப்போது Speetieக்கும் Pidduக்கும் இடையே கா த ல் ஏற்பட்ட நிலையில் ஒருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இதன்பின்னர் நடந்த சம்பவம் தான் ஆச்சரியம்! அதாவது Speetie,Sunny மற்றும் Piddu உடன் சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்தார்.
தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னட செம்மொழி அந்தஸ்து ஆதார ஆவணங்களை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது
சொந்தமா எழுத்துருவே (Alphabet) இல்லாத சமஸ்கிருதத்திற்கு எப்படி செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியும் என்று அடுத்து ஒரு வழக்கு போட்டு கேட்கணும்!
Sivakumar Shivas : தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் காந்தி, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இதில், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த தகுதிகள் இல்லாத காரணத்தால், உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்குக்கூட செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்நிலையில், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005ஆம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013ஆம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கி இருக்கிறது. மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந்த ஒரு தகுதியும் இல்லாத மொழிகளுக்கு எல்லாம் தன் விருப்பப்படி மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி வருகிறது. அதனால் இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என தெரிவித்தார்.
வெள்ளி, 8 ஜனவரி, 2021
மேற்கு வங்க சட்டப்பேரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்!
நாகை: கோயிலில் வைத்து பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து தனது இரு மகள்களுக்காகச் சித்தாள் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கூடுதல் காட்சி- முதலமைச்சர் அறிவிப்பு
பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் .. Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்
காங்கிரசில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை! -ஆனந்த் சீனிவாசன் ஆவேசம்
Panneerselvam Natesapillai : காங்கிரஸ் கட்சியில் யாரும் உழைப்பதில்லை. கட்சியில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். தேர்தல் வரும் போது மட்டும் கட்சி இருப்பதை பதிவு செய்கிறார்கள். சென்னையை விட்டு வெளியே வருவதில்லை. கீழே இறங்கி வேலை செய்வதில்லை. பின்னர் கட்சி எப்படி வளரும்? இதை ஏன் அவர்கள் யோசித்து கூட பார்ப்பதில்லை?
Swamy : உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்காத காங்கிரஸ் கட்சி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க முடியும். ஆனந்த சீனிவாசன் போன்ற காங்கிரஸ் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை மற்றும் நல்ல பதவி கொடுத்து கெளரவிக்க வேண்டும். Jahir Hussain : காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் ராகுல் காந்தி யும் TWEETER அரசியல் தான் செய்கிறார் களத்தில் இறங்கவேண்டும் மக்களோடு இருக்கவேண்டும் காங்கிரஸ் யில் இருக்கும் பார்ப்பான்கள் கட்சிக்காக வேலை செய்யாமல் வெற்றி பெற்றவுடன் அதிகாரத்துக்கு வரும் பார்ப்பனர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் காங்கிரஸ் யில் இருக்கும் உழைக்கும் தலைவர்களுக்கு பதவி கொடுத்தால் காங்கிரஸ் நிச்சயமாக பெரிய தாக வளரும் பார்ப்பனர்கள காங்கிரஸில் இருந்துக்கொண்டு BJP யின் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள் ஒருசில பார்ப்பனர்கள் தான் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார்கள் ஆனந்த சினீவாசன் அவர்களை போல்
வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை!
அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு நடந்ததற்கு பின், அதிபர் பதவியை, ஜோ பைடனுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில், அதிகார மாற்றத்துக்கு, டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். 'பாப்புலர் வோட்' எனப்படும், மக்களின் நேரடி ஓட்டுகளில், 70 லட்சம் வித்தியாசத்தில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்பை, அவர் வென்றார். 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணப் பிரதிநிதிகளின் ஓட்டுகளில், 306 - 232 என்ற அடிப்படையிலும், பைடன்
வென்றார். வரும், 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை, அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி... நேற்று நடந்தது ஒத்திகைதான்.. விவசாயிகள் அதிரடி!
கொரோனா தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு.
எளிமைக்கு பின்னே ஒழிந்திருக்கும் சமூக நோய்
கொள்ளப்பட்டிருக்கிறது மேற்கு நாடுகளில் இந்த பருப்பு வேகாது. தனிப்பட்ட ரீதியில் ஒருவர் சட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே பெரிதும் எதிர்பார்ப்பார்கள் ஒருவர் ஏழையாக இருந்தால் அவர் ஏன் அரசியலில் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறார்? முதலில் தனது வாழ்வை வளம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்பது போன்று சிந்திப்பார்கள் மேலும் ஒருவர் உண்மையாகவே நேர்மையானவராக எளிமையானவராக இருந்தாலும் அவர் சமூக பிரச்சனைகளில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதையே அளவுகோலாக கருதுவார்கள்
குஜராத் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலும், அந்த கொலைகாரர்கள் உலக அரங்கில் தப்பிவிட உதவி புரிந்தாலும் மறைந்த அப்துல் கலாம் அய்யா ரொம்ப எளிமையானவர் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையானவர் என்று கூறினால் காறி உமிழ்வார்கள் .
இதுதான் இந்திய சமூகத்தில் புரையோடி இருக்கும் தவறான சிந்தனை என்று எண்ணுகிறேன்.
Intaxseva மூலமாக Income Tax தாக்கல் செய்த... நிம்மதியான மகிழ்ச்சியான Feel வரும்பாருங்க!
BPCL to vedanta 9 லட்சம் கோடி சொத்தும் 8 ஆயிரம் வருட வருமானமும் உள்ள பாரத் பெட்ரோலியத்தை 75 ஆயிரம் கோடி அடிமாட்டு விலைக்கு பாஜக அரசு..
வியாழன், 7 ஜனவரி, 2021
கரூரில் இளைஞர் ஆணவ கொலை பெண்ணின் தந்தை கைது
dhinakaran: கரூர்: கரூரில் வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞர் ஹரிஹரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணின் தந்தை வேலன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன். இவர் அதே பகுதியில் உள்ள வேலன் என்வரது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஹரிஹரன் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலித்த பெண்ணின் பெற்றோர் ஹரிஹரனிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளனர். எனினும் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் உறவினர்கள் நேற்று பட்டப்பகலில் கரூர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் ஹரிஹரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
ஜன.10- கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம்; கடைசி நபர் கைதாகும் வரை திமுக ஓயாது: ஸ்டாலின்
ஏனோ தானோவென இருந்துவிட்டார். திமுக சார்பில் பல போராட்டங்கள் குறிப்பாக, மகளிரணியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, தமிழகத்தின் தாய்மார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த குரல் எழுப்பிய பிறகு, முதலில் சிபிசிஐடிக்கும் - பிறகு சிபிஐக்கும் இந்தப் புகாரை மாற்றினார்.
BBC : அமெரிக்காவில் ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு உடன்பட்டார் டிரம்ப் - அடுத்தடுத்த திருப்பங்கள்
அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டிரம்பின் சார்பில் 60க்கும் அதிகமான வழக்குகள் பல்வேறு மாகாணங்களில் தொடரப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் டிரம்புக்கு தோல்வியே மிஞ்சியது.
அழகிரி : நான் மைக்க புடிச்சி ஏதாவது பேசினா மட்டும் லைன்ல வருவீங்களா?
நான் நீக்கப்பட்ட பிறகு கலைஞரை சந்தித்தபோது, ‘என்னை எப்போது சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். ‘இரு அவர்களின் ஆட்டம் அடங்கட்டும்’ என்று சொன்னார். ஆனால் அதன் பின் அவர் படுத்துவிட்டார். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான். ஸ்டாலின் இந்தத் தேர்தலில் முதல்வர் ஆகவே முடியாது. நானும் என் ஆதரவாளர்களும் விடமாட்டோம்" என்று மிகக் கடுமையாகப் பேசியிருந்தார்.
BJP 117 + Admk 117 ? பாஜகவுக்கு பாதி தொகுதிகள் வேண்டுமாம் .. கூட்டணி ஆட்சியாக வேறு இருக்கவேண்டுமாம் .
தி.மு.க. கூட்டணி கட்சிகள் திடீர் குழப்பம்! ம.தி.மு.க., - வி.சி., - ஐ.ஜே.கே. தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை...
தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வரும் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளன. அதற்கு, தனி சின்னத்தில் போட்டியிட வேண்டியதும் அவசியம். பிடிவாதம்.... இந்த காரணத்திற்காக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை, குறைந்தபட்சம் தலா, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க., கூட்டணியில் பிடிவாதம் பிடிக்கின்றன. ஆனால், இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கி, தனி சின்னத்தில், இக்கட்சிகள் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என, தி.மு.க., கருதுகிறது.மேலும், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், அந்த தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும், தி.மு.க., நம்புகிறது.
உருவாகிறாரா 'இளைய வீரபாண்டியார்?'... கண்ணீர் விட்ட மூதாட்டி... கவலை தீர்த்த டாக்டர் பிரபு வீரபாண்டி!
இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதி மூலம் பிறந்த டாக்டர் பிரபு, சேலத்திலேயே நிரந்தரமாக குடியேறினார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். அதுவரை கட்சியில் சாதாரண உறுப்பினராக இருந்த அவரை, தி.மு.க. தலைமை திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தது.
மருத்துவத்துறை சீரழியவில்லை ! அரசுடமை , தனியார்மயம் குறித்த பதிவு!
வெள்ளை மாளிகை முற்றுகை: டிரம்ப் ஆதரவாளர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; பெண் உயிரிழப்பு
ட்ரம்புகளின் கையிலிருந்து மீண்ட அமெரிக்கா .. மோடிகளின் கையிலிருந்து இந்தியா மீள்வது எளிதல்ல .. காத்திருக்கிறது பெரும் ....
சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Rajes Bala - . London Thiruvalluvar |
அமெரிக்க கேப்பிட்டல் கட்டிடத்தை சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்கள்! உள்ளே பூட்டப்பட்ட எம்.பிக்கள்
துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அதிக ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, தேர்தல் முறைகேடு வழக்குகள் பலவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன....
குருமூர்த்தி : நான் வச்சிருக்கிறதே கறுப்பு பணம் .. பணம் எனக்காக வச்சிருக்கறதில்ல.. பெரியவாளுக்கு கொடுக்கிறதுக்காக..
இந்திய இலங்கை மீனவர்கள் மற்றும் இதர பிரச்சனை... அமைச்சர் ஜெய்சங்கர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு விபரம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அமைச்சர் ஜெய்சங்கர் |
அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை - கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் - மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்!
இலங்ககை - இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடார்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிகார அமைச்சருக்கம் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இன்று(06.01.2021 நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதன், 6 ஜனவரி, 2021
பொள்ளாச்சியில் களத்திலிருக்கும் பெண்கள் : அரசியல் பின்புலத்தோட இருக்கிறவங்க காப்பாத்தப்படுறாங்களா?'
நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு, மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2019-ம் வருடம் பிப்ரவரி மாதம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த ஒரு புகார், தமிழகத்தையே அதிர வைத்தது. அந்தப் பாலியல் புகார் விசாரணையின் அடுத்தடுத்த நகர்வுகளில், அவரைப்போல பல இளம் பெண்களும் கல்லூரிப் பெண்களும் குற்றம் சுமத்தப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதும், அந்தக் குற்றங்களில் அரசியல் பின்புலம் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெரோன் பால் (29), பைக்பாபு என்கிற பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் - சிம்பு - தமிழக அரசு பேராசைக்கு நாங்கள் இரையாகனுமா? ... மருத்துவ பணியாளர்கள் கடும் கண்டனம்
தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ்: அரசு உத்தரவு!
புதுச்சேரி: திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் காங்கிரசின் பலவீனத்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கிடைத்த தகவல்களால்... புதுச்சேரியில் தனித்தே நிற்கலாமென்ற முடிவுக்கு வந்திருக்கிறது திமுக.இதுகுறித்து, திமுக காங்கிரஸ் உறவு முறிவு என்ற தலைப்பில் டிசம்பர் 16 ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதியில்லை: மத்திய அரசு உத்தரவு!
தென் ஆப்பிரிக்கா (தமிழர் ) யகநாதன் பிள்ளை சுட்டுக்கொலை ! சமூக சேவையாளர்? நிழல் உலக தாதா?
maalaimalar : ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிழலுலக தாதாவாக விளங்கி வந்தார். சட்ட விரோதமாக பணம் ஈட்டிய போதிலும் தனது சமூகம் சார்ந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் யாகநாதன் பிள்ளை
வீட்டில் தனது மகளுடன் இருந்தார். அப்போது 2 பேர் அவர் வீட்டின் கதவை
தட்டினர். இதையடுத்து யாகநாதன் பிள்ளை வீட்டின் கதவை திறந்தார். அப்போது
வாசலில் நின்று கொண்டிருந்ததால் மர்மநபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால்
சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே
துடிதுடித்து இறந்தார். இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும்
அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது - சிபிஐ
Jeyalakshmi - tamil.oneindia.com : கோவை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்.ஆர்.ஐ.,க்களுக்கு தபால் ஓட்டு; வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்
தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 'வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகள் உள்ளன' என, தேர்தல் கமிஷன், கடந்த, நவ., 27ல், சட்டத் துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதை பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம், தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளது. இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
ப.ஜீவானந்தத்தின் யாழ்ப்பாண தலைமறைவு வாழ்க்கை .. வல்வெட்டித்துறையிலிருந்து காரைக்காலுக்கு
56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு.. தனியார்மயமாகும் BEML!
நீங்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் நான் இறந்திருக்கமாட்டேன்!" - எஸ்.பி. அலுவலகத்தை அதிரவைத்த கடிதம்!
அந்த கடிதத்தில், "2013ஆம் ஆண்டு ஆயுதப்படைக்கு தான் காவலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு சென்னைக்கு மாறுதலாகிச் சென்று, மீண்டும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு வந்து சேர்ந்துவிட்டேன். இதனால், தன்னுடைய பணியின் முன்னுரிமை மாறிவிட்டது. என்னுடன் பணியில் சேர்ந்த சக போலீசார் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய், 5 ஜனவரி, 2021
வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!.. சந்தேகம் வருமா வராதா?
செல்லபுரம் வள்ளியம்மை: வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்! வடலூர் ராமலிங்க சுவாமிகள் காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார். வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்! நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் . இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை. எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கொட்டி தீர்த்த கனமழை
திரையரங்கில் 100% பார்வையாளர்கள் இருப்பது தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்: அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசு,
நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். காவல் அதிகாரிகள் சோர்வடைந்து விட்டனர். சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர்.
அழகிரி -ஸ்டாலின்: உள்ளுக்குள் நடக்கும் உண்மைகள்!
கடந்த தீபாவளி அன்று காலை தனது ஆதரவாளர்கள் பலருக்கும் போன் செய்த முக அழகிரி... "இன்னும் சில வாரங்களில் நாம செயல்வீரர்கள் கூட்டம் நடத்தணும். அதற்கான ஏற்பாடுகள்ல இறங்குங்க"என்று சொன்னதை அடுத்து நீண்ட நாட்களாக அரசியல் செய்ய முடியாமல் வெம்பி கிடந்த அழகிரி ஆதரவாளர்கள் வெடித்து கிளம்பினார்கள்.
அழகிரி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் என்றதும் வழக்கம்போல அவர் கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கப் போகிறார் என்று தகவல்கள் பறந்தன. ஆனாலும் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆலோசனை கூட்டத்தில் தான் முடிவு செய்வேன் என்றும் பாஜகவில் சேரப் போவதாக சொல்வது காமெடி என்றும் தெரிவித்து வந்தார் அழகிரி.
இலங்கை பேராதனையில் தலிபானிசம் வளர்வதற்கு இடமளிக்கக் கூடாது.
Rishvin Ismath : · இது சஹ்ரான் நியமித்த NTJ யின் நிர்வாகக் குழு என்று நினைத்துவிட வேண்டாம், மாறாக இது இலங்கையின் முதன்மை நிலை அரச பல்கலைக் கழகமான பேராதனை பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் நிவாகக் குழு, அதுவும் 2021 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு. பெண்களின் முகத்தைக் கூட காட்ட முடியாத அளவிற்கு பலமான நிலையில் சஹ்ரானிஸம் பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கின்றது என்பது ஆபத்தானது. இந்த சஹ்ரானிஸத்தை நியாயப் படுத்துவதற்காக "குறித்த பெண்கள் விரும்பாததால் தான் அவர்களின் புகைப்படங்களை போடவில்லை" என்று இலகுவான நொண்டிச் சாட்டை சொல்லிவிடக் கூடும், பெண்களில் ஒருவர் கூட தமது புகைப்படத்தை வெளியிட விரும்பாத அளவிற்கு அவர்களின் மனிநிலை மாற்றப் பட்டு இருக்கின்றது என்றால், அது மிகவும் திட்டமிடப்பட்ட ரீதியான அடிமைத்தனாமகவே இருக்க வேண்டும். ஒரு சஹ்ரான் மரணித்து விட்டான், ஆனால் சஹ்ரானிஸம் இன்னுமும் உயிருடன் இருக்கின்றது, வளர்கின்றது.
இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி;விரைவில் யார் யாருக்கு என்ற பட்டியல்
புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
முழு நீலகிரி மாவட்டத்திலும் சிலோன் அகதிகள் என்ற மலையக மக்களின் போராட்டங்களினால் சிவா நிபந்தனையின்றி ....
*டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்.. ஆந்திராவில்
Maha Laxmi : · *டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்* டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தியின் வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக கூறியுள்ள ஷியாம் சுந்தர், தனக்கு இது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம் என்றும், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் அவர் பெருமிதம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ஜெஸ்ஸி பிரசாந்தியும், தனக்கு இது பெருமையான நிகழ்வே எனக் கூறியுள்ளார்
தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழா!' டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கிவைத்தார்!
nakkeeran - சக்தி : தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இந்த களப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். தேனி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் களப்பணி நடத்தினர். இதன் விளைவாக தமிழகத்தில் மரங்களில் விளம்பரப் பதாகைகள் இல்லாத முதல் நகராட்சியாக தேனி நகராட்சியை மாற்றினர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து ஆணிகளைப் பிடுங்கியுள்ளனர். தேனி மாவட்ட தன்னார்வலர்களின் 'ஆணி பிடுங்கும் திருவிழா' தொடக்க நிகழ்ச்சியை திண்டுக்கல் மற்றும் தேனி சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.