புதன், 6 ஜனவரி, 2021

ப.ஜீவானந்தத்தின் யாழ்ப்பாண தலைமறைவு வாழ்க்கை .. வல்வெட்டித்துறையிலிருந்து காரைக்காலுக்கு

Image may contain: 1 person, ocean and outdoor, text that says '500 भारत INDIA'
jaffnafashion.com : வல்வெட்டித்துறையிலிருந்து காரைக்காலுக்கு ரகசிய_பயணம்1948 ப.ஜீவானந்தத்தின் யாழ்ப்பாண தலைமறைவு வாழ்க்க . #முன்கதைச்சுருக்கம் அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன ராடார் கருவிகளும் இருந்தன. அதனை வல்வெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகுகள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் - தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது. அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகபட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் கச் சேரியைக் கேட்பதற்கும் , புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள். நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகனை வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள்.
#கேள்வி ப.ஜீவானந்தத்துடன் தாங்கள் சிலகாலம் யாழ்ப்பாணத்திலும் தங்கியிருந்ததாக அறிகிறோம். அக் காலத்தைய செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.
#கே_கணேஷ் : சென்னையில் அஞ்ஞாதவாசம் செய்த தமிழக மத்திய குழுவினர், ஜீவானந்தம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்துடனும் இலங்கையுடனும் நான் தொடர்புள்ளவன் என்ற காரணத்தினாலும், பேச்சுமொழி நடையுடை பாவனைகள் நான் இந்தியனாக இருந்தது எவருக்கும். சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தினாலும் என்னை ஜீவானந்தம் அவர்களை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி பணித்தனர். இதனைச் செய்யுமாறு பி. கந் தையா அவர்களே என்னைக் கேட்டுக்கொண்டார்.
வல்வெட்டித்துறையிலிருந்து அவரைத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆசிரியர், கார்த்திகேசு மாஸ்டர் ஆகியோரே இந்த ஏற்பாடுகளைச் செய்தனர். கார்த்திகேசு மாஸ்டர் வீட்டில நான் தங்கியிருந்தேன். ப.ஜீவானந்தம் அவர்கள் அப்போது திருநெல்வேலி ரி.துரைசிங்கம் வீட்டில் தங்கியிருக்க நான் அங்கு சென்று அவரை அழைத்துச் செலவதாக இருந்தது. இச்சந்தர்ப்பத்திலேதான் இந்தியாவில் ஹைதரபாத் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து கஜாக்கள் படை அமைத்துப் போராட்டம் நடத்தினர். இதனை அடக்க ராஜாஜி அவர்கள் கவர்னராகவும் வல்லவாய் படேல் உள்நாட்டு அமைச்சராகவும் இருந்து எடுக்கப்பட்ட பொலிஸ் அக்க்ஷன் காரணமாக கிளர்ச்சி அடங்கியது. அக்காலகட்டம் வரை நானும் ஜீவானந்தமும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தோம். ஹைதரபாத் கெடுபிடிகள் காரணமாக இந்திய கவர்னர் ஜெனரல் அவர் களது ப் படி கரையோரப்பகுதிகள் இந்திய கடற்படையினரது கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் எனது தங்குதல் நீண்டுவிட்டது. , ஜிவானந்தமும் நானும் நிலைமை சீரடையும் வரை *யாழ்நகரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் ஜிவானந்தம் பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அத்தோடு கம்யூனிஸம் என்ற நூலை துரைசிங்கம் வீட்டில் இருந்த காலத்தில் எழுதினார். அந்நூல் துரைசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. கார்த்திகேசு மாஸ்டர் இல்லத்திற்கு ப.ஜீவானந்தம் வரும்போது, டொமினிக் ஜீவா, எஸ்.பொ., தி.ராஜகோபால் போன்றவர்கள் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிட்டியது. ஜிவானந்தம் மீது கொண்ட பக்தியினால், டொமினிக் ஜீவா தனது பெயரை ஜீவா என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார்
#கேள்வி : பின்னர் எவ்வாறு ஜீவானந்தம் அவர்களை தமிழகத்திற்கு கொண் டு சென்று சேர்த்தீர்கள்?
#கே_கணேஷ் : ஜீவானந்தம் அவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு கொண்டு சேர்க்கவேண்டிய ( காலம் பொறுப்பு எனக்கிருந்ததன் காரணமாக நான் Air Ceylon வானூர்தி மூலம் சென்னைக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் விசா, பயணச்சீட்டு தடைகள் கிடையாது. ஆனால் வெளிநாடு செல்லும் இலங்கையர் அக்காலத்தில் வழக்கிலிருந்த தமது அரிசிக் கூப்பனை உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்துப் பெற்ற ரசீதைக் காட்டியே பயணச்சீட்டு பெறமுடியும். எனது அரிசிக்கூப்பன் அப்போது கையில் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் அப்போது சிறுபான்மையோர் இயக்கத் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய, எழுத்தாளர் எஸ்.பொ.வின் மைத்துனர் திரு சுப்பிரமணியம் ஆவார். அவர் தனது தந்தையாரான திரு ஐயாம்பிள்ளையின் அரிசிக்கூப்பனைக் கொடுத்து உதவினார். அதனை நான் பயன்படுத்திப் பயணித்தேன்.
சென்னையில் , மவுணி ட் ரோட் டிலி டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டடத்தில் முற்போக்கு இலக்கிய நூல் விற்பனை நிலையம் அமைந்திருந்தது. அங்கு, பிற்காலத்தில் சரஸ்வதி இதழ் நடத்திய கோவை எஸ்.விஜயபாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டின்படி சென்னை மரினா கடற்கரையில் ராஜஸ்தானிக் கல்லூரிக்கு எதிரே காந்தி சிலைக்கு அருகாமையில் நான் தினமணி இதழை கையில் அடையாளமாக வைத்தபடி அமர்ந்திருந்தேன். காக்கி ஜேர்னாப்பையுடன் ஒருவர் வந்து என்னுடன் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி, வந்தவர் என்னை அடையாளம் கண்டு குழுக்குறியைக் கூறியவுடன் ஏற்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்படி வல்வெட்டித்துறையில் இருந்து ஜீவானந்தம் புறப்பட்டு நாகபட்டினம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய மூன்று இறங்குதுறைகளில் ஏதாவது ஒன்றில் வந்து இறங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. இக் கரையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் வந்து இறங்குவது என்பதை தந்திமூலம் குழுக்குறியாக தெரிவிக்கவேண்டும். அதாவது அப்பொழுது இராஜப்பேட்டையில் பொலிஸ் ஸ்ரேசன் பின் புறத்திலே அமைந்த கட்டிடமொன்றில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த குயிலன், தமிழ் ஒளி ராஜகோபால் ஆகியவர்களுக்கு இங்குள்ள ஏஜெண்ட் தந்தி அனுப்புவதுபோல குழுக்குறியாக செய்த அனுப்ப வேணி டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறங்கு துறைகளுக்கு ஒவ்வொரு எணர் குழுக் குறியாக வைத்துக் கொணி டோம் . நாகபட்டினம் இறங்குதுறைக்கு 50 எனவும், காரைக்கால் இறங்குதுறைக்கு 100 எனவும், சிதம்பரம் இறங்கு துறைக்கு 150 எனவும் எண்ணிக்கையைக் குழுக்குறியாக அமைத்துக் கொண்டோம். நான் ஏற்பாடுகளை முடித்து இலங்கை திரும்பி வந்ததும் 1948இல் ஒருதினம் ஜீவானந்தத்துடன் அக்கரைக்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது. முன் ஏற்பாட்டின் படி, பத்திரிகை ஏஜெண்ட் தந்திகொடுப்பதுபோல, இத்தனையாவது இதழில் 50 பிரதிகள் கூடுதலாக அனுப்பவும் எனத் தந்திகொடுத்து, அக்கரையில் உள்ளவர்களுக்கு நாம் புறப்படும் திகதியையும், கரைசேரும் இறங்கு துறையையும் தெரிவித்துப் புறப்பட்டோம். ஜீவானந்தம் உயரமானவர், ஸ்டாலின் மீசை உடையவர், காது மந்தமுடையவர். இந்த அடையாளங்களை மாற்றுவதற்கு மீசையை மழித்து முஸ்லிம்போன்று சாரம் உடுத்து மாறுவேடத்தில் அழைத்துச் சென்றோம்
#கேள்வி : வல்வெட்டித்துறையிலிருந்து அக்கரைக்குச் செல்லும் உங்களது பயணம் எப்படி அமைந்தது
#கே_கணேஷ் : அக்காலத்தில் வல்வெட்டித்துறை கிராம முக்கியஸ்தராக இருந்த திரு திருப்பதி அவர்களுடன் மகாலிங்கம் மாஸ்ரர் தொடர்பு கொண்டு எமது பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி அவர் ஓரிரவில் கார்திகேசு மாஸ்டர் வீட்டிலிருந்த என்னையும் துரைசிங்கம் வீட்டிலிருந்த : ஜீவானந்தத்தையும் காரில் அழைத்துச்சென்று, கடற்கரையில் சுங்கப்பகுதி காரியாலயத்தின் அருகே இருந்து புறப்பட்ட விசைப்படகு ஒன்றில் எம்மை ஏற்றிவிட்டார்கள்.
அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன கருவி களும் இருந்தன. அதனை வல்லிவெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகுகள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது. அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகபட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் கச் சேரியைக் கேட்பதற்கும் , புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள். நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகனை வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள்.
அக்கரை செல்லும் வழியில் (காலம் பல படகுகள் எதிரே வந்தன. அவர்கள் கிராமபோன் குழாய் போன்ற அமைப்புள்ள குழாயை வாயில் பொருத்தி பலத்த சத்தத்தில் பரிபாஷையில் வள்ளங்களுக்கிடையே ஏதோ பேசிக்கொண்டார்கள். எதிரே சுங்கப் பகுதியினரின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறிச்சென்றார்கள். நாங்கள் சென்ற படகு அதிகாலை நேரத்தில் நாகள்பட்டின கடற்கரையிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டது. சுங்கப் பகுதியினரின் கண்ணோட்டத்திற்கு அகப்படாத முறையில் நாங்கள் கரையேற வேண்டியிருந்தது. அக்கரையில் இருந்து பாதுகாப்பான நேரம் என்பதை அறி விக்க ஒளிவிளக்குச் சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருந்தோம். கடலில் நங்கூரம் இடப்பட்டு பகல் முழுவதும் கடலில் தங்கியிருந்து மறுநாள் இரவு ஒளிவிளக்கு சமிக்ஞை கிடைத்ததும் புறப்பட்டோம். அங்கிருந்து நாகூர் தர்கா (பள்ளிவாசல்) தெரிந்தது. விசைப்படகில் இருந்து இறக்கப்பட்டு சிறு வள்ளங் களில் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் காரைக்கால் அருகில் உள்ள அதிராமப் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இறக்கப்பட்டோம் அங்கிருந்து ஒரு கோஷ்டியினர் வந்து மோட்டார் காரில் எம்மை அழைத்துச் ソ சென்று காரைக்கால் பாக்குவியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பரின் கடையில் எங்களைச் சேர்த்தனர். நாங்கள் திட்டமிட்டபடி போய்ச்சேரவேண்டிய இறங்கு துறையில் இறக்கப்படவில்லை. காரைக்கால் அப்போது ஆங்கில ஆட்சியில் இருக்க வில் லை? பிரான் ஸ் நாட் டு ஆதிக்கத்திலிருந்தது. அதனாலேயே அங்கு சென்று இறங்குவது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. காரைக்காலைச் சேர்ந்த கல்கி பீடி. வள்ளங்கள் இறங்குதுறையில் எம்மை வரவேற்க வேண்டியவர்கள் காந்திருந்தனர். அதனால் ஜீவானந்தத்தை அந்த முஸ்லிம் அன்பரின் கடையில் விட்டுவிட்டு நான்மட்டும் சென்று அவர்களைக் கண்டு அடையாளம் அறிந்து அவர்களிடம் ஜீவானந்தம் அவர்களைச் சேர்த்தேன். ஜீவானந்தம் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்று சிலகாலம் அங்கு தலைமறைவாக இருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
#நன்றி: காலம் இதழ். பழம்பெரும் எழுத்தாளர் கே. கணேஷ் அவர்களின் தி. ஜானசேகரனூடான உரையாடல்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக