வெள்ளி, 8 ஜனவரி, 2021

கொரோனா தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு.

இது ஒரு நண்பரின் உண்மை   கதை . இவர் சில மாதங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றினால் காலமானார். இவர் காஞ்சி சங்கர மடத்திற்கு மிக .... மிக நெருக்கமானவர். இவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இசை ஈடுபாட்டால் உருவானது . நல்ல மனிதர் சனாதனத்தை முற்று முழுதாக நம்பி அதை தன்னால் முடிந்த அளவு பரப்பவுதற்கு முயன்றவர். அதன் காரணமாக அவருக்கு மத்தியிலும் எல்லா மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு இருந்தது . அந்த செல்வாக்கை தனிப்பட்ட விடயங்களுக்கு அவர் பயன்படுத்தவில்லை . மீண்டும் சொல்கிறேன் தனிப்பட்ட வாழ்வில் அவர் உண்மையிலேயே மிகவும் நல்லவர் .ஆனால் அவரது சிந்தனையில் தவறு இருந்தது. அது அவருக்கு புரியவே இல்லை .. அவரின் குடும்ப சூழ்நிலை எல்லாம் அதுதான் . எனவே அதுபற்றி குற்றம் கூற முடியாது. அவர் தஞ்சாவூரில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாளில் காலமானார் . இது சில மாதங்களுக்கு முன்பு நடந்தது .
அவரது உறவினர்கள் கேரளாவில் இருந்து வரமுடியவில்லை.
அவரது இறுதி கருமங்களை அரசே செய்து முடித்தது . அவரது இறுதி புகைப்படத்தையும் குடும்ப உறுப்பினர் வாட்சாப்பில் பெற்றுக்கொண்டனர் .
வெறும் பாலிதீன் பைகளால் சுற்றப்பட்ட ஒரு ... photo
எந்த வித சனாதன ஆசாரங்களும் வேத பராயணங்களும் இல்லாமல் எப்படி நடந்தது எங்கே நடந்தது என்ற வெறும் விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியான விபரங்களோடு மட்டுமே அது நடந்து முடிந்தது..
கொரோனா சூழ்நிலையின் காரணமாக .இதை அவரது குடும்பத்தினரோ வேறு யாருமோ எந்த விதமான விமர்சனங்களும் இன்றி இதை ஏற்று கொண்டனர்.
இதை இங்கே நான் குறிப்பிடும் காரணம் என்னவென்றால்.
இலங்கையில் தற்போது இறந்த இஸ்லாமியர்களின் உடலை புதைப்பதற்கு அரசாங்கம் மறுத்து எரிக்கிறது . இதை ஏற்று கொள்ள முடியாமல் சில இஸ்லாமிய அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றன.
இவர்களுக்கு நிலைமை இன்னும் புரியவில்லையா அல்லது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்களா என்று புரியவில்லை.
புதைப்பதில் தவறில்லை என்று பல நாடுகள் கூறுவதாக இவர்கள் கூறுகிறார்கள் .
அங்கேதான் சிக்கலே இருக்கிறது பல நாடுகளில் புதைப்பதற்கும் இலங்கை போன்ற நாடுகளில் புதைப்பதற்கு பெரிய வித்தியாசம் இருக்கிறது.
இலங்கையில் சில காலத்திற்கு முன்பு புதைத்த உடல்கள் வெள்ளத்தில் மிதந்த வரலாறு எல்லாம் உண்டு.
புதைத்த உடல்களால் தொற்று ஏற்படாது என்பதற்கு நூறு வீதம் உத்தரவாதம் இல்லை என்று கருதுகிறேன் . புதைக்கும் இடம் பரவலாக இலங்கை முழுவதும் இருக்கிறது பல இடங்களை சுற்றி குடியிருப்புக்களும் உள்ளன.
மதம் சார்ந்த நம்பிக்கையை விஞ்ஞான கோட்பாடுகளோடு எப்படி ஒப்பிட முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக