புதன், 6 ஜனவரி, 2021

என்.ஆர்.ஐ.,க்களுக்கு தபால் ஓட்டு; வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்

dhinamalar :புதுடில்லி : என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள்,
தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 'வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகள் உள்ளன' என, தேர்தல் கமிஷன், கடந்த, நவ., 27ல், சட்டத் துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது.  இதை பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம், தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளது. இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக