புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
nakkeeran : புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குச்
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருப்பதாக ராஜீவ் சூரி உள்ளிட்டோர்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு
இன்று (05/01/2021) உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான
அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது. அனைத்து வாதங்களையும் கேட்ட
பின்னர், இன்றே தீர்ப்பும் வழங்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல்
நாட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக