சனி, 9 ஜனவரி, 2021

பாஜக கூட்டணி- சசிகலா: அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது!

 பாஜக கூட்டணி- சசிகலா:   அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது!

minnamblam : அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது.  ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.அந்த வகையில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.   பொதுக் குழுவை முன்னிட்டு பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு முறைப்படி தனித் தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட 3,500 பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வேண்டும், வழிகாட்டும் குழுவுக்கு ஒப்புதல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலாவின் விடுதலைக்கு இன்னும் 19 நாட்களே இருப்பதால் அவர் விடுதலைக்குப் பிறகு நடைபெறும் அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பொதுக் கூட்டத்தைப் போலவே கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுகவின் தலைவர்கள்

பாஜகவைப் பற்றி காரசாரமாக உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக