சனி, 9 ஜனவரி, 2021

யாழ்ப்பாண பல்கலை கழகமும் புலிகளும் .. சமூகவலைதளங்களில் என்னதான் பேசப்படுகிறது?

Sugan Paris : யாழ்ப்பாண மக்களுக்கான எஞ்சியிருக்கும் ஒரு இறுதிக் கல்வி ஆலயம் ..   அது ஒன்றும் பொற்கோவிலல்ல, பிந்ரன் வாலேக்கள் ஒளிந்துகொள்ள வாய்ப்பான இடமல்ல அது. மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ் மண்ணில் இன்னும் ஏதோ நல்லது இருக்குமெனில் அது யாழ் பல்கலைக்கழகம்தான்.

Sugan Paris : புலிகள் என்பது ஒரு மனக் கட்டமைப்பு. நாஸிகள் அழிந்தாலும் அதன் மிச்சங்கள் நாஸி மனநிலைகள்இன்றும் இருக்கின்றன. 

அவ்வாறே இதுவும். புலிகளுக்கு எப்போதும் ஒரு தந்திர மனம் உண்டு. பொது நிறுவனங்கள் ,பொது அமைப்புகளை சுதந்திரமாக இயங்கவிடாது ,             இவற்றில் தம்மைத் திணித்து அல்லது அவற்றைப் பலிக்கடாக்களாக ஆக்கிச் சீரழித்து தம்மை அதிலிருந்து தற்காத்துக்கொண்டு தப்பிக்கொண்டு அப்பாவி மக்களை முன்தள்ளி பலியிடுவது,

அதனாலேயே அவர்களுக்காக நியாயம் சொல்ல இன்று ஒரு வெகுசன அமைப்புக்கூட இல்லை.
உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்களைக் கடத்தியதிலிருந்து தொடங்கியது அவர்கள் தலையீடு.
பின் பல்கலைக்கழக மாணவர் பேரவை இதில் தொடர்ந்த தலையீடு. பின்னணியில் இரு மாணவர் தலைவர்கள் ,கலாநிதி ராஜினி கொல்லப்பட்டது ,
இப்படியாக ...எதுவும் ஆக்கபூர்வமாக இயங்கினால் அவர்களுக்குப் பொறுக்காது.
உடனே தலையிட்டு அழித்துமுடித்தபின் வேறு அழிவு வேலைகளில் திட்டமிடுவார்கள்.
இந்த மனநிலையே முள்ளிவாய்க்கால் வரை அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது.
மக்களைப் பலியிட்டு பிரபாகரன் உட்பட அரசிடம் சரணடைந்து தங்களைத் தற்காத்துக்கொண்டதும் இந்த மனக்கட்டமைப்பின் இயல்புதான். 
போராளி என்பவன் /ள் தன்னைத் தியாகித்துத் தன் மக்களைக் காப்பவர்.
இங்கே எப்போதும் போகோ தியறிதான்.
மக்கள்மேல் அரச வன்முறையை ஏவிவிடுவது, அந்த அரச ஒடுக்குதலில் மக்கள் அரசில் வெறுப்படைவார்கள். இதை ஆதாயப்படுத்திக்கொள்வது.
இப்பொழுது நடைபெறுவதும் அதுதான்.
மக்களின் இயல்புநிலை சாகசவாதிகளுக்கு பிடிப்பதில்லை.
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவுத்தூபியை அரசு அழித்ததாக இப்போது பரப்புரைக்கிறார்கள்.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தேர்தல் நேரங்களில் இப்போதும் அங்கு ஓத் ( சத்யப்ரமாணம் )எடுக்கிறார்கள்.
அத்தோடு அதை மறந்துவிடுகிறார்கள். அந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப்பப்பட்டு எஞ்சிய மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் அதில் பிரமாணம் எடுத்த எவரும் ஈடுபட்டதாக பதிவுகள் இல்லை.
உண்மையான முள்ளிவாய்க்கால் முற்றமும் நினைவுத் தூபியின் நிலையும் இவ்வாறுதான் இருக்கின்றது. அரசு எவ்வளவு காலத்திற்கு இந்த முற்றத்தின் நினைவை விட்டுவைக்கும் என்பது கேள்வி.
தமிழ்த்தரப்பு அதைக் கையாள்வதைப் பொறுத்தது.
"கவனமாக நினைவுகூர்ந்து கவனமாகத் தவிர்ப்பவர்கள் இவர்கள்".
ஆனால் யாழ்ப்பாணத்தில் அது அமையவேண்டுமாயிருந்தால் யாழ் பஸ் நிலையத்தில் அல்லது யாழ் மாநகரசபை முன்றலில் இவர்கள் முயன்றால் அமைக்கலாம். வல்வெட்டித்துறையில் பிரபாகரன் உருவச் சிலையைக்கூடத் திறக்கலாம்.
பல்கலைக்கழகம் அதற்கு ஒரு தந்திரக் களம் ஆக இயங்கினால் பாதிப்பு யாழ் மக்களுக்குத்தான். கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவ / மாணவிகளுக்குத்தான்.
மூன்று குறிப்பான எதிர்வினைகள் இதையொட்டி வந்தன.
 
1)சிறிசற்குணராஜா பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் முன்னின்று உழைத்தவர்,மாணவர்களின் ஆதரவையும் பெற்றவர்.நல்லாட்சியில் இவரின் பெயரும் சிறிசேனாவிடம் பரிந்துரைக்கு சென்றபோது மேற்கண்டகாரணத்திற்காக (அப்போதும் அவர் பெயர்தான் முன்னிலையில் இருந்தது.) அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு விக்கினேஸ்வரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.இப்போ கோத்தபாய அரசில் அவருக்கு அந்த பதவிவழங்கப்பட்டு,கோத்தபாய விரும்பியதை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.அவ்வளவும்தான் வரலாறு.
(அல்லை சிறீ )
 
2)
முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு புலிகளே பொறுப்பேற்கவேண்டும். புலிகள் மக்களை தற்காத்துகொள்ள அனுமதி வழங்கியிருந்தால் அத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது.தம்மைப் பாதுகாக்க மக்களைக் கேடயமாக்கிய புலிகளை இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.
கொலைகளுக்கான பழிகளை அரச படையினர்மீது போட்டு புலிகளை நிரபராதிகளாக்க முயல்கின்றனர்.அதுதான் முள்ளிவாய்க்கால் நாடகம்.அரச படைகளின் நடவடிக்கை சரியானதே
(விஜய பாஸ்கரன் )
 
3)
யாழ் பல்கலைகழக துணைவேந்தரை அதிகாரத்தின் நாக்கு , அதிகாரத்துக்கு துணைபோகிறார், பதவி ஆசை பிடித்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இவர் புலிகள் அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களுடன் ஒத்தூதியவர்( அப்போ அவர் துணை வேந்தர் அல்ல ) புலிகள் செய்த அனைத்து அடாவடித்தனத்தையும் ஆதரித்தவர் . புலிகளுக்கு தகவல் கொடுக்கும் வேலையை செய்தவர் என்றும் ஊர்ஜிதமாகாத தகவல். அப்போ அவரது இவ்வாறான நடவடிக்கைகளை பெரும்பாலும் எவரும் கேள்வி கேட்கவில்லை
(ராகவன் )

 

Thirunavukkarasu Gopahan உங்களது புலிகள் மீதான விமர்சனங்களை நாங்கள் கேள்வி கேட்கவில்லை தோழர். ஆனால் நம் இரவில் உடைத்தழிக்கப்ட்டது அரச பயங்கரவாதமன்றி வேறென்ன??? முள்ளிவாய்க்கால் மனித பேரளிவிற்கு புலிகள் காரணம்தானெனில் அந்த மக்களின் மரணங்களை நினைவு கூரும் செயற்பாடு ஏன் அரசுக்கு அரிப்பை ஏற்படுத்துகிறது?? Sugan Paris Thirunavukkarasu Gopahan உடைப்பிற்கும் அதன் நிறுவுதலுக்கும் முன்னாள் ,இந்நாள் யாழ் பல்கலைக்கழக நிர்வாகங்களே காரணம். துணைவேந்தர் சற்குணராசாவின் ஒப்புதலைக் கருத்திலெடுங்கள். அடுத்த மாவீரர் தினத்திற்கு அங்குள்ள மாவீரர் தூபியில் கூடி அஞ்சலி செலுத்திவிட்டுப் போய்விடலாம். அதனால் உபத்திரவத்தை அடைவது நிர்வாகம்தான். யாழ் பல்கலைக் கழகத்தை காலவரையறையின்றி அரசு மூடினால் என்னவாகும்.? ஏன் அங்குதான் அமையவேண்டுமென அடம்பிடிக்கிறார்கள்? உங்களுக்கு என்னதான் வேண்டும் ? Thirunavukkarasu Gopahan Sugan Paris நினைவு கூரும் உரிமை தொடர்பான விடயம் இது. ஏன் பல்கலைக்கழகத்தில் நினைவு கூர கூடாது??? Sugan Paris Thirunavukkarasu Gopahan யாழ்ப்பாண மக்களுக்கான எஞ்சியிருக்கும் ஒரு இறுதிக் கல்வி ஆலயம் , அது ஒன்றும் பொற்கோவிலல்ல, பிந்ரன் வாலேக்கள் ஒளிந்துகொள்ள வாய்ப்பான இடமல்ல அது. மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ் மண்ணில் இன்னும் ஏதோ நல்லது இருக்குமெனில் அது யாழ் பல்கலைக்கழகம்தான். நினைவுத் தூபியை நல்லூரிலும் நிறுவலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக