Asiriyar K Veeramani : மாநிலப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் - பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?
மாநில அரசும் - எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து கருவிலேயே இதனை முறியடிக்க வேண்டியது அவசியம்!அவசரம்!!
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன், முதல் வேலையாக நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு இந்தியாவுக்கே ஒரே தேர்வு முறைதான்; அதைக் கூட மெடிக்கல் கவுன்சில் என்ற அமைப்பினால் உருவாக்கப்படும் ஒரு குழுதான் நடத்தும் என்று கூறி, இதற்கு உச்சநீதிமன்றத்தின் - மறுசீராய்வு மனுவின் தீர்ப்பை தங்கள் திட்டத்திற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
மேல் நடவடிக்கை என்ன?
மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்து ஊழல் செய்தார் என்பதற்காக வெளியேற்றப்பட்ட கேத்தன் தேசாய் என்பவரின் வீடு, அலுவலகங்களில், வருமான வரித் துறை மற்றும் சி.பி.அய். போன்ற அமைப்புகளால் சோதனையிடப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் அங்கிருந்து கைப்பற்றிய செய்திகள் வந்தன. ஆனால், எந்த மேல் நடவடிக்கையும் தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
அவருடைய திட்டம்தான் மருத்துவக் கல்லூரிக்கான ‘‘நீட்’’ தேர்வுத் திட்டம்!
‘பார்கவுன்சில்’ வழக்குரைஞர்களை ஒழுங்குபடுத்தி அங்கீகரிக்கும் வழக்குரைஞர்கள் குழுவா - சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்துகிறது? இல்லையே!
இந்த கேத்தன் தேசாய்தான் இதன் மூலவர்; இதை ஒரு உலக வர்த்தக அமைப்பிற்கு (மருத்துவப் பட்ட படிப்புக்கு) கதவு திறந்துவிட்டுள்ளார்!
இதுவே கொடுமை; பல படித்தவர்களுக்குத் தெரியாத ஒரு ‘புதிர்.’
நிலையான பார்ப்பனரின் மேலாண்மை!
‘கார்ப்பரேட்டுகளின்’ கொள்ளை ஒருபுறம்; பார்ப்பனரின் மேலாண்மைக்கான ஏகபோகமும் ‘நீட்’ தேர்வின்மூலம் நிலை பெற்ற கொடுமை இன்னொருபுறம்!