வியாழன், 23 ஜனவரி, 2020

சிவகாசி சிறுமி கொலை - அசாம் வாலிபர் கைது

மாலைமலர் : சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.  விருதுநகர்: சிவகாசி அருகே 8 வயது சிறுமி, காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
கொலையாளிகளைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் உத்தரவுப்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
வட மாநில வாலிபர்களுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதினர். அதன்பேரில் அப்பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் வடமாநில வாலிபர்கள் உள்பட 4 பேரை பிடித்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக