புதன், 22 ஜனவரி, 2020

சத்துணவு முட்டை நிறுத்தப்படும் அபாயம் வருகிறது ?


Krishnavel T S : இனிமேல் இஸ்கானின் அட்சய பாத்திரம் என்ற அமைப்பு தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்தை எடுத்து நடத்தும் போல உள்ளது. இனிமேல் குழந்தைகளுக்கு சத்தான உணவாகிய முட்டை நிறுத்தப்படும், வெங்காயம் பூண்டு இருக்காது.
ஐஎஸ்ஓ தர சான்றிதல் பெற்ற சமையல் அறைகள் என்று அவாள் நடத்தும் சமையல் கூடங்கள் மூலம் எல்லா பள்ளிகளுக்கும் (எதையெல்லாம் எடப்பாடி அரசு மூடவில்லையோ) உணவு அனுப்பி வைக்கப்படும்.
சமூக நீதி என்று தாழ்த்தப்பட்டவரை சமையல் செய்ய நியமித்த கலைஞர் அவர்களது வேலைவாய்ப்பு திட்டம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும். கான்ட்ராக்ட் முறையில் சத்துணவு சமைப்பதற்கு இஸ்கான் அமைப்பிற்கு மாதாமாதம் பணம் கொடுக்கப்படும் அந்த பணத்தின் மூலம் இஸ்கான் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகளை பரப்பும் வேலையை செவ்வனே செய்யும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக