புதன், 22 ஜனவரி, 2020

1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார். .. ஜெயமணி கொடுத்த புகாரில் flashback

Kalai Selvi : இதுவும் பத்ரிகை செய்திதான் ... நாங்களும் பரட்டைதான் ...
எங்களுக்கும் சீப்பு இருக்குது
ரஜினியின் கைதுக்கு காரணமாக இருந்தவர் ஜெயமணி. வாரப் பத்திரிகை ஒன்றில், சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி, போலீஸில் அதிரடியாக அளித்த புகாரில்தான் ரஜினி கைதானார்.
''சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.'' என ஜெயமணி கொடுத்த புகாரில் 1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார்.
அப்போது ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் ஆகிய இருவரும்தான் ரஜினியை கைது செய்தவர்கள்.
ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலில் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நள்ளிரவு வரையில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இ.பி.கோ 506 (மிரட்டுதல்),

336 (மற்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய காரியத்தில் கவனக் குறைவாக ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது வாக்குமூலமும் கொடுத்திருந்தார் ரஜினி. ''கார் ஓட்ட எனக்கு லைசென்ஸ் இல்லை. டிரைவர் இல்லாததால் காரை நானே ஓட்டினேன். ஜெயமணி என்னை தாக்கி நிறைய செய்திகளை எழுதினார். வழியில் அவரைப் பார்த்ததும் இதுபற்றி கேள்வி கேட்க நினைத்து, காரை நிறுத்தி பின்னால் இயக்கினேன்.
மோதவில்லை.
அவரைக் கொலை செய்யும் நோக்கமும் எனக்கில்லை. காரைவிட்டு இறங்கியதும், ஜெயமணி செருப்பை கழற்றினார். அதனால் அவரின் சட்டையைப் பிடித்தேன். அவ்வளவுதான் நடந்தது. அவரை நான் மிரட்டவில்லை.'' என வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார்.
இந்த கைது ஐதராபாத்தில் நடந்தது.
இதுபற்றிய செய்தியை 'மாலை முரசு' பதிவு செய்திருக்கிறது.
அதில் வந்த செய்தி இதுதான்
'சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. ஜூன் 20-ம் தேதி சென்னை திரும்புவதற்காக இரவு 11 மணி விமானத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது ரஜினி மது அருந்தியிருந்தார். ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அங்கிருந்தவர்களுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த நண்பர்களிடமே ரஜினி சண்டை போட்டார்.
ஏர்போர்ட் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். அவரை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள் அதிகாரிகள். அங்கிருந்த கண்ணாடிகளை ரஜினி உடைத்தார். இதனால் போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவரது விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது' என்பது செய்தி தாள்களில் வெளிவந்து மக்களை முகம் சுழிக்க வைத்தது ..
இந்த வழக்கில் ரஜினி பான்பராக் போடும் பழக்கம் உள்ளவர்..அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டார்..
சிகிச்சை அளிக்க வேண்டியது இருப்பதால் ஜாமின் தர வேண்டும் என்று நீதிமன்றம் நாடி பெற்றது குறிப்பிட தக்கது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக