திங்கள், 20 ஜனவரி, 2020

அடித்து தூள் கிளப்பும் புதிய தமிழ் எழுத்தாளர்கள் .. சத்தம் போடாமல் வீசும் புயல் ..

Karthikeyan Fastura இன்றுதான் அமேசான் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை பார்த்தேன். எழுத்துலகில் ஒரு அற்புதமான கலகம் நடத்தப்பட்டிருக்கிறது. திராவிட சிந்தனை கொண்ட நண்பர்கள் பெருவாரியான இடங்களை பெற்றிருக்கிறார்கள். திரையுலகில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கோபி நயினார், மாரி செல்வராஜ் போன்றோர் சமீபத்தில் நிகழ்த்தி கொண்டிருக்கும் கலகத்திற்கு சற்றும் குறைவில்லாத கலகமே எழுத்துலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போட்டி முடிவுகள். அவர்களில் Sen Balan, பா.ச. பாலசிங் என் நண்பர்கள் எனும்போது இன்னும் கெத்தாக உணருகிறேன்.
சென்ற வருடம் Sen Balan தொடங்கிவைத்த இந்தக் கலகம் காட்டுத்தீ போல நம் நண்பர்களை தொற்றிக்கொண்டு பலரை எழுத ஊக்குவித்தது. இந்தியாவிலேயே அதிக அளவில் போட்டியில் பங்கேற்ற மொழியாக தமிழ் திகழ்கிறது.
இன்றைய பொழுதில் இந்த தேசத்தின் ஒவ்வொருவர் தலையிலும் கத்தி தொங்கவிடப் பட்டுள்ளது. பாசிஸம் இண்டுஇடுக்கெல்லாம் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஓரொரு பிரச்சனையை உருவாக்கி கொண்டே வருகிறார்கள். இன்று காவிரி டெல்டாவில் ஹைட்ரொகார்பன் எடுக்க புதிதாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மக்களிடம் எந்த கருத்து கேட்பதும் நடத்த வேண்டியதில்லை.

சுற்றுசூழல் அனுமதி வாங்கவேண்டியதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இலக்கியவாதிகள் என்ற பெயரில் எழுதிக் கிழிக்கும் எவரும் இதை பற்றி பேசவே மாட்டார்கள். இந்திய அளவில் மிக மிக சுரனையற்ற எழுத்தாள பிரபலங்களை கொண்டிருப்பது தமிழே. அதன் தாக்கம் எங்கும் வியாபித்திருக்கிறது. இந்த வீணாப் போன பர்னிச்சர்களை உடைத்தது தான் அமேசான் போட்டியின் மிகப் பெரிய வெற்றி. ஆசானும், அவரது சிஷ்யகோஷ்டிகளும் கத்தினார்கள், கதறினார்கள். அப்படி கதறும் நேரத்தில் உருப்படியா நாலு விஷயத்தை எழுதிருக்கலாம் என்று தோன்றாத மாக்கான்கள் தான் இவர்கள்.
இந்தப் பாசிசம் பபாஸியின் புத்தக திருவிழாவையும் விட்டு வைக்கவில்லை. அச்சில் ஏறினால் தான் புத்தகம், அதில் ஆயிரம் பிரதிகள் விற்றால்தான் எழுத்தாளர் என்ற நிலை இருந்தது. அதை முதலில் முகநூல் உடைத்தது இப்பொழுது அமேசான் கிண்டில் போட்டி முற்றிலுமாக உடைத்திருக்கிறது. அதனால் தனது சந்தையும் எழுத்தாளர் பிம்பமும் எங்கே சென்று விடுமோ என்று அஞ்சும் பாசிச, பார்ப்பனிய கூட்டம் கதறுகிறது. அதில் வியப்பொன்றுமில்லை.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் பற்ற வைத்த நெருப்பு இன்று படர்ந்து விரிந்து வியாபார கணக்குகளை உடைத்து, பதிப்பாளர்களின் பபாசி லாபிகளை உடைத்து தமிழ் கூறும் நல் உலகம் முழுக்க பரவிக்கொண்டு வருகிறது. யாரும் எழுதலாம், எதையும் எழுதலாம், எங்கும் விற்கலாம் என்ற நிலையை இது உருவாக்கியிருக்கிறது.
அமேசான் போட்டியில் பங்கேற்ற புதிய எழுத்தாளர்களை குறைகூறும் இலக்கியவாதிகள் ஏன் அந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை? உங்களுக்குத்தான் மிகப் பெரிய வாசகர் வட்டம் இருக்கிறதே?
அச்சம் அதானே? எங்கே புதியவர்களுடன் தோற்று விடுவோமோ என்ற அச்சம். புதியவர்களுக்கு அந்த அச்சமே கிடையாது. அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார்கள்.
பல சாஸ்திர மூட குப்பைகளை தன்னளவில் உடைத்துக் கொண்டிருக்கும் நண்பர் பா.ச. பாலசிங் இந்த போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது செம.
அதேபோல தோழர் எஸ் எஸ் சிவசங்கர், டான் அசோக், குரு புருனோ, கோவி லெனின், ரவிசங்கர் அய்யாக்கண்ணு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
இன்று இந்த போட்டியின் நடுவர்களாக இருப்பவர்களும் பார்ப்பன சிந்தனை கொண்டவர்களே. நாளை அந்த இடத்தையும் நமது தோழர்கள் கைப்பற்றுவார்கள். தகுதியான எழுத்துக்களுக்கு எந்த பாரபட்சம் பார்க்காமல் பரிசளிப்பார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக