நக்கீரன் - ராஜ்ப்ரியன் :
'நீட்
தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்களை எங்கள் கல்லூரியில்
சேர்க்கமாட்டோம்' என உச்சநீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்துகிறது
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி. கடந்த வாரம், குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த் சி.எம்.சி.யின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு
பெருமைப்படுத்திய நிலையில், அதனை நோக்கி சர்ச்சைகளும் சுழல்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக சி.எம்.சி. போட்ட வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தமிழக நிர்வாகி திருப்பதி நாராயணன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "நீட் தேர்வு முறையால் தங்களுடைய கல்லூரியில் படிப்பதற்கு தகுதியும் பொருத்தமும் உள்ள மாணவர்களை மட்டுமே சி.எம்.சி. தேர்வு செய்கிறது.