வியாழன், 31 மே, 2018

பாஜகவின் B team களை தெரிந்து கொள்ளுங்கள்

Shalin Maria Lawrence : கடந்த வாரம் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜகவிற்க்கு வெறும் 2 இடங்களே கிடைத்துள்ளன. மற்ற 9 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றியடைந்து உள்ளன.
இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதனின் எடுத்துக்காட்டு.
ஆனால்
திராவிடத்தால் வீழ்ந்தோம்
ரஜினி நல்லாட்சி தருவார்
ஈழ எதிரி கருணாநிதி
விசிக ஜாதி கட்சி
கமல் ஊழல் இல்லாத ஆட்சி தருவார்
சாகாயத்தை முதல்வராக்குவோம்
எம்ஜியார் இன்னும் சாகவில்லை
அம்மாவின் ஆட்சி பொற்கால ஆட்சி
கம்யூனிஸ்ட் எல்லாம் வேலைக்கு ஆகாதவர்கள்
தனி தமிழ்நாடு ஒன்றே தீர்வு
என்று மனநிலை பிழன்றோர் போல் அண்ணங்களுக்கும்,நோட்டாவுக்கும்,இரட்டை இலைக்கும் ,பாஜகவுக்கு ஒட்டு போடுவீர்களானால் நீங்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு மோடியின் ஷூவை நக்க தயாராய் இருங்கள்.
பெட்ரோல் விலை 200 ஆக உயரும்
ஒடுக்கப்பட்டவன் ,சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுவார்கள்.
தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிதி உதவிகள் ரத்து செய்யப்படும்.

விளைநிலங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்படும்.
உன் குலசாமிக்கு ஆடு படையல் போட தடை விதிக்கப்படும்.
மாட்டு மூத்திரம் குடிக்க நிர்ப்பந்திக்க படுவாய்.
உன் பிள்ளைகள் கடைசி வரை பெரிய படிப்பு படிக்க முடியாது.
உன் பேர குழந்தைக்கு தமிழ் என்றால் என்ன வென்று தெரியாமல் போகும்.
இந்தியாவின் பெண்கள் நடுத்தெருவில் சூறையாட படுவார்கள்.
அத்தனைக்கும் காரணம் உங்களின் ஜாதி உணர்வோ ,மத உணர்வோ கிடையாது.
அத்தனைக்கும் காரணமாக உங்களின் அரைகுறை அரசியல் அறிவாக இருக்கும்.
முன்னால் இருந்தவர்கள் தவறு செய்திருக்கலாம் ஆனால் இந்நாள் நடப்பதோ பேய் ஆட்சி.
தவறுகளை திருத்தி கொள்ளலாம் ஆனால் பேயை ஓட்டுவது கடினத்திலும் கடினம்.
பாஜகவின் B team களை தெரிந்து கொள்ளுங்கள் .பாஜகவிற்கு ஒட்டு போடுவதும் ஒன்றுதான் இவர்களுக்கு ஒட்டு போடுவதும் ஒன்றுதான் என்பதை மூளையில் உரக்க சொல்லி கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக