வியாழன், 31 மே, 2018

பா.ரஞ்சித்துக்கு முட்டு கொடுக்கும் தலித் மேதாவிகள் ஆ.ராசாவை கண்டுகொள்ளாதது ஏன்?


LR Jagadheesan : ரஞ்சித்துக்காக ிபற்றுக்கு சொறிந்துகொடுக்கிறது. அதனால் ரஜினி மாதிரி ஒரு facist உடன் கைகோர்த்தாலும் ரஞ்சித் உங்களுக்கு தலித் icon. அப்படியான உங்களின் ஜாதி அரசியலுக்கு பயன்படாத ஆ ராசாவை நீங்கள் கண்டுகொள்ள மறுப்பீர்கள். ராசாவை கடைசிவரை பாதுகாத்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாலைபோட்டு வரவேற்ற கருணாநிதிக்காக நீங்கள் ஒருநாளும் இப்படி களமாடியதில்லை. ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புமே சேர்ந்து நின்று மூர்க்கமாக எதிர்த்தபோது அதை அவர்கள் வகுத்த ஆட்டக்களத்தில் அவர்கள் வரையறை செய்த விதிகளுக்கு உட்பட்டு ஆடி வென்று திரும்பிய ஆ ராசாவை நீங்கள் என்றாவது கொண்டாடியதுண்டா? அவரைப்போன்ற நிஜ உலக போராளிகள் பல்லாயிரம் பேரை உருவாக்கி பாதுகாத்த திமுகவை அதன் தாய் அமைப்பான திராவிடர் இயக்கத்தை ஆண்டைகளின் அமைப்பு சூத்திர இயக்கம் தலித் விரோதிகள் என்று முத்திரை குத்திய மூடர் கூடம் அட்டைக்கத்தி ரஞ்சித்துக்காக ரஜினிக்கு காவடி எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆண்டி முத்து ராசாக்களை உருவாக்கி பாதுகாக்கவல்ல ஒரு இயக்கத்துக்கு அசல் எது போலி எது என்றும் தெரியும். உண்மைப்போராளி யார் நிழலுலக அட்டைக்கத்தி எது என்றும் தெரியும். சினிமா ரசிக கும்பல் சினிமாக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. அரசியலில் வந்து உங்கள் மொன்னையான அட்டைக்கத்திகளை சுழற்ற வேண்டாம். அதுவும் ரஜினிமாதிரி ஒரு காலிப்பயலுக்காக.

ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் தலித்திய
மேதாவிகள் யாரும் ஆ ராசாவுக்காக கருணாநிதிக்கு இப்படி முட்டுக்கொடுத்ததில்லையே ஏன்? ஆ ராசாவைவிட ரஞ்சித் மேதாவி என்பதாலா? அல்லது கருணாநிதியைவிட ரஜினி தலித்துகளுக்கு அதிக நன்மைகள் செய்ததாலா? தலித் அரசியல் என்கிற பெயரில் ரஞ்சித் முன்னுறுத்துவது ஆண்டபரம்பரை templateஐ அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து உல்டாவாக்கி சுயஜாதி பெருமை பேசும் ஒற்றை ஜாதி heroism. திட்டமிட்ட திராவிட இயக்க நிராகரிப்பு மற்றும் இருட்டடிப்பு. அது உங்களின் சுயஜாத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக