சனி, 2 ஜூன், 2018

கைராணா இடைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு உணர்த்தும் செய்தி என்ன ?

சவுக்கு : பத்து  மாநிலங்களில் பரந்து அமைந்துள்ள  நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை இடங்களுக்கான  தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வரும்  பெரிய பாடம் என்னவெனில், பாரதீய ஜனதா கட்சியின் சரிவு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம், அதே கதைதான். சில மாதங்களுக்கு முன்புவரை பாஜகவின் கோட்டை என கருதப்பட்ட தொகுதிகளில் இப்போது விரிசல்கள், உடைப்புகள் ஏற்பட்டுள்ளன..
பாஜக-வின் கவலை மிகப்பெரியது. ஏனெனில், கைரானா போன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த தொகுதிகளில் மட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் மகேஷ்தலா போன்ற சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் நெருக்கடியை தீவிரமாக எதிர்த்து சமாளித்து, நாடாளுமன்ற தேர்தலில் மாநிலங்களில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை  பாஜக நம்பியிருந்தது. இரண்டாவது இடத்தில் இருப்பது பாஜகவுக்கு ஆறுதலானது அல்ல.
ஏனெனில், மேற்கு வங்கத்தில் அதன் அரசியல் உடனடி ஆதாயங்களைப் பெறுவதே, நீண்டகால இருப்பை குறிப்பதற்கல்ல.
அதன் கூட்டாளிகளுடனான தொடர் சச்சரவுகள்தான் அதற்கு ஒரு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.  பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான பாஜகவின் நட்பு தொடர்ந்து “அவசர சிகிச்சைப் பிரிவில்“ இருக்கிறது. வளர்ந்துவரும் அதிருப்தியடைந்த கூட்டாளிகளின் பட்டியலில் மற்றொரு கூட்டாளியை பாஜக சேர்த்திருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சில்லி மற்றும் கோமியா ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்க கட்சி பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது. அதன் விளைவாக அவ்விரு தொகுதிகளையும் பாஜக இழந்தது. 2014 ஆம் ஆண்டில், பா.ஜ.க. கோமியாவில் போட்டியிட்டது, மற்றொன்றை அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்க கட்சிக்கு விட்டுக் கொடுத்தது.  ஆனால், இந்த முறை முறை பா.ஜ.க இரு இடங்களிலும் போட்டியிட ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தது. இதையடுத்து, பாஜகவின் முடிவால் கடுப்பான பிராந்திய கட்சியான அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம் அதன் வேட்பாளர்களை நிறுத்தியது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மறந்து விடுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிளுக்குள்ளேயே பாஜக ஒரு நல்லிணக்கத்தை உறுதிசெய்ய முடியாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிற நிலையில், இது ஆளும் கட்சிக்கு நல்லதல்ல.
பாஜகவின் வளரும் இறுமாப்பு அதன் கூட்டணிக் கட்சிகளை கோபடையச் செய்துள்ள அறிகுறிகள் தென்படுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு என்ற ஒரு முக்கியமான கூட்டாளியை பாஜக ஏற்கெனவே இழந்து விட்டது. இந்த இடைத் தேர்தல் முடிவுகள், மேலும் கூட்டணிக் கட்சிகளை பாஜக பக்கம் இழுக்காது.   மேலும், ”கூட்டணிக் கட்சிகளை கவர்ந்திழுக்க வேண்டியதில்லை. நம்முடைய  வெற்றி வாய்ப்பு உயர்ந்த நிலையில் இருக்கிறபோது அவர்களாகவே வருகின்றனர்,” என பிரதமர் மோடி இக் கட்டுரையாளரிடம் 2012 ஆம் ஆண்டு தெரிவித்தார். தொட்டதெல்லாம் பொன்னாகும் சக்தியை மோடி இழந்துவரும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அணிவகுத்து பாஜகவை தேடிவரும் வாய்ப்புகள் குறைந்துவிடும்.
அனேகமாக, கைரானாவில் அதன் துருப்புச் சீட்டுகளின்  தோல்விதான் பாஜகவுக்கு இன்னும் கவலையளிப்பதாக உள்ளது. சந்தேகத்துக்கிடமின்றி இந்த சுற்றில், அதி முக்கியமான கைராணா தொகுதியில் பாஜகவின் பிரச்சாரம் முழுவதும் வகுப்புவாத வன்முறையின் குரலை கொண்டிருந்தது. மறுபுறத்தில், ஒருங்கிணைப்பின் முன்முயற்சியாக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் முடிவு உண்மையில் அரசியல் ரீதியாக ஒரு துணிச்சலான முடிவாக இருந்தது.
அதிக முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் மதரீதியாக பிளவுபடுத்துதல் தந்திரத்தின்  மூலம் பாஜக பலனடைவதற்கு சாத்தியக்கூறு இருந்தது. கைராணாவில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்துக்கு அதிகம் ஆகும். மேலும், பாஜக வேட்பாளர் மிருகன்கா சிங் இந்து நவீனவாதிகளின் பிரதிநிதி ஆவார். “கைரானாவை காஷ்மீர் ஆக அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி சர்ச்சைக்குள்ளான  ஹுக்கும் சிங்-கின் மகள் ஆவார்.
ஒரு வசதிடைத்த தந்தை அவரது மகளை கைரானாவின் பின் தங்கிய சமூக மற்றும் கல்விப் பின்னணியிலிருந்து தப்பிக்கச் செய்து, அஜ்மீரின் புகழ்பெற்ற சோஃபியா கல்லூரியில் படிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், பல தசாப்தங்களுக்கு பின்னர், குடும்பம் மற்றும் கட்சியில் வழிவழியாக வந்த பிரிவினை கோஷங்கள் மற்றும் பேச்சுக்களை திரும்ப ஒப்பிக்க தயாரான ஒரு தனியார் கல்வியாளராக அவரை மாநிலத்துக்கு அழைத்து வந்தார். 2017ஆம் ஆண்டு பாஜக இழந்த ஒரே ஒரு தொகுதியான கைரானாவில் மிருகன்கா சிங் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  2017 தேர்தலில் பாஜக தோல்வியடைந்த ஒரே சட்டப்பேரவை தொகுதியான கைராணாவில் மிருகங்கா சிங் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.  இதனால் இந்த இடைத் தேர்தலுக்கு இயல்பான தேர்வாக பாஜகவுக்கு அவர் அமைந்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மிருகங்கா சிங்
கைரானாவிலோ அல்லது பிஜ்னூரில்  சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் இழந்த நூர்புர் சட்டமன்ற தொகுதியிலோ  “இந்துத்துவா கார்டு“ வேலை செய்யவில்லை என்பதால் பாஜக கவலைப்பட வேண்டும். இந்த ஆண்டு துவக்கத்தில் கோரக்பூரில் வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடுவதில் தோல்வியுற்றதோடு சேர்ந்து, அக்கட்சியினுடைய இந்துத்வா உத்தி குறைவான பலன்களை தருவதையும் காண முடிகிறது.
சமுதாயத்தில் பெரும்பான்மை உணர்வுகளை அதிகரித்து, அதை ஒருங்கிணைப்பதை, கைராணாவுக்கு பிறகு பாஜக எப்படிக் கையாளப் போகிறது என்பதை  எதிர்க்கட்சிகள் கூர்மையாக கவனித்து எதிர்கொள்ள வேண்டும். ஆனால், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக, பாக்பட் (Baghpat) –டில் கிழக்கு அதிவேக சாலை (Eastern Peripheral Expressway) தொடக்க விழாவை திட்டமிட்ட அவரது சாதுரியத்தின் தோல்வி பாஜகவுக்கு உண்மையான கவலையாக இருக்கும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக மீறவில்லை என்றாலும், நெறிமுறைப்படி, இது பிரதமர் பதவியில் இருப்பவர் ஏற்படுத்துகிற முன்னுதாரணம் அல்ல. கைரானாவையும், அடுத்த நாளே வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் உள்ளிட்ட மாவட்டதிலிருந்து கொண்டு வரப்படும் மக்களையும் பாக்பட் சேர்க்கிறது. இந்த கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வந்தவர்கள் மோடியின் தீவிர, அரசியல்ரீதியாக பேசிய பேச்சின் சிறப்பம்சங்களை வெளியிட்டிருப்பார்கள். இது நேரடி பிரச்சாரம் அல்ல என்றால், வேறு என்ன என்று தெரியவில்லை.
மேலும், மோடியின் பேச்சு தீவிரமான அரசியல் ரீதியானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தனது கட்சியையும் அரசாங்கத்தையும் திறம்பட செயல்படுவதைத் தடுப்பதையும் இலக்காக கொண்டது. அதிகாரப்பூர்வ காலக்கெடுவை தாண்டி, அரசு விழா மேடையை அரசியல் ரீதியான பேச்சுக்களை பேச பயன்பத்திய மோடியின் கேள்விக்குரிய இந்த உபாயங்கள் அவர் எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் நிம்மதியாக இருந்திருக்க வேண்டும். மோடியை அளவுக்கதிமாக வெளிப்படுத்தியது எதிர் வினையாகிவிட்டது என்பதை இது நிரூபிக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் முன் வைக்கப்படும் வேலை – 543  மக்களவை தொகுதிகளிலும் கைரானா மாதிரியை முன்வைத்து முடிந்தவரை அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதே. காங்கிரஸுக்கு எதிரான விரோதப்போக்கை கொண்டுள்ள ஒரு வலுவான பிராந்திய கட்சி உள்ள மாநிலங்களில் அதிக சவால் இருக்கும். ஒடிசா போன்ற மாநிலங்கள் இவைகளில் அடங்கும். அங்கே பாஜக ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. அங்கே மோடிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உணர்வுகள் உள்ளன.
அத்தகைய உணர்வுகள் பிளவுண்ட மாநிலத்தில், யதார்த்தமாக இருப்பது பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு  புத்திசாலித்தனம் ஆகும். முந்தைய காலங்களில் “தொகுதி உடன்பாடு“ என்றழைக்கப்பட்டதை கருத்தில் கொள்ளவேண்டும். 1989-ல் காங்கிரஸை பதவியிலிருந்து வெளியேற்ற, இடதுசாரிகளும் பாஜகவும் வி.பி.சிங் மற்றும் ஜனதா தளத்துடன் ஒரு அரசியல் உறவை உருவாக்க முடிந்தது. இப்போது பாஜகவை பதவியிலிருந்து வெளியேற்ற அதுபோன்ற உறவை எதிர்க்கட்சிகள் கருத்தில்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் புதிய சுறுசுறுப்பை சந்திக்க, மோடியும் பாஜகவும் கீறல் விழுந்த இசைத்தட்டு போல  கத்திக் கொண்டிருக்கிறார்கள். இடைத் தேர்தல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த கூச்சல் இன்னும் அதிகரிக்கும். 2013-14ஆம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியிடமிருந்து, ஆட்சி நழுவிச் சென்றதைப் போலவே, மோடியின் கைகளில் இருந்தும் தற்போது ஆட்சி நழுவுவதைப் போல அவரது அடுத்த நடவடிக்கைகளை கவனமாக பார்க்கப்பட வேண்டும்.  மோடி தோல்வியை எளிதாக எடுத்துக் கொள்பவர் அல்ல.  வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்.
நிலஞ்சன் முக்கோபாத்யாய்
நன்றி தி வயர் இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக