வெள்ளி, 1 ஜூன், 2018

கேரளா ஜாதி ஆணவ கொலைக்கு துணை போன ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இரு தோழர்கள்

Savitha Munuswamy : கேரளாவில் காதல் திருமணம் செய்துக்கொண்ட கெவின்
என்ற இளைஞனை கடத்திக்கொண்டுபோய் இரு கண்களையும் நோண்டி கொடூரமாய் கொலைசெய்துவிட்டு ஏரியில் வீசிய பெண் வீட்டாருக்கு இச்சாதியாணவப் படுகொலைக்கு உதவி புரிந்தவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இருவர் என்றும் தெரியவந்துள்ளது..! ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் அரசியல்வாதிகளாகிவிடுகிறார்கள் சித்தாந்தங்களை மறந்து ....DYFI -- க்கு 'தோழர்'-என்ற சொல்லாடலின் பொருள் தெரியாதா..??! செல்ப் அக்கௌண்டபிலிட்டி அவசியம் டோலர்களே..!
இந்துமதம்தான் சாதியின் பிறப்பிடமாக உள்ளது , பிறப்பின் அடிப்படையில் வேற்றுமையை போதிக்கின்றது என்றெண்ணிதானே இம்மக்கள் சிலர் கிருத்தவத்தை தழுவினார்கள்..? கிருத்தவமும் சாதியினடிப்படையில் மனிதனை பிரித்தாளுகிறது , மீறுவோறையும் இப்படி கொன்றொழிக்கிறது..! த்தூ.  படம் :- சாதியாணவப் படுகொலை செய்யப்பட்ட கெவினின் குடும்பத்தார்..!
Raja Mohammad :இதில் அந்த பெண்ணின் தந்தை கத்தோலிக்க கிறித்தவர் தாயார் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது தாங்கள் மட்டும் காதல் திருமணம் செய்யலாம் மகள் காதல் திருமணம் செய்தால் மருமகனை கொலை செய்வார்களாம் முட்டாள்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக