வெள்ளி, 1 ஜூன், 2018

அம்போவான கிம்போ.. நிறுவனத்தின் இணையதளமும் .kimbho.com தற்போது முடங்கி உள்ளது.

savukkuonline.com Jeevanand Rajendran":
இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர்.
ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி.


அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி.
நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம்.
பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகையில், அதை மார்க்கெட்டிங் செய்ய பல கோடிகளை செலவு செய்யும்.  நுகர்வோரின் விருப்பங்கள் என்ன.  ஒரு பொருள், என்ன நிறத்தில் என்ன தன்மையில் இருந்தால் அதை நுகர்வோர் விரும்புவார்கள்.   எந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டும்.  எந்த பொருளாதாரப் பிரிவை இந்த பொருள் சென்று சேர வேண்டும்.  சந்தையில் இந்தப் பொருளுக்கான போட்டியாளர்கள் யார்.  அவர்களின் பொருளை விட, இந்தப் பொருள் எந்த வகையில் வேறுபட்டுள்ளது என்பன உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கென்று மட்டும் பல கோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் செலவு செய்யும். இத்தனை செலவுகளுக்குப் பிறகும், புதிதாக அறிமுகப்படுத்தும் ஒரு பொருள் சந்தையில் தோற்றுப் போகலாம்.
ஆனால் பதஞ்சலிக்கு அது போன்ற எந்த சிக்கலும் கிடையாது.  நுகர்வோர் பழக்க வழக்கங்கள் (behaviour) தொடர்பாக எந்த செலவுகளையும் செய்தது கிடையாது.   பதஞ்சலி நிறுவனத்துக்கு ஒரே அடிப்படைதான்.  பன்னாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள். பதஞ்சலி பொருட்கள், இயற்கை முறையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.  இது சுதேசி பொருள்.  இது மட்டுமே பதஞ்சலியின் தாரக மந்திரம்.
மோடி தும்மினால் கூட அதை தேசபக்தித் தும்மல் என்று பெருமை பேசித் திரியும் கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம்தான் பதஞ்சலியின் இலக்கே.   அந்த கண்மூடித்தனமான மோடி பக்தி மற்றும் தேசபக்தியை அடிப்படையாக வைத்து, களமிறங்கியதுதான் பதஞ்சலி நிறுவனம்.
ஆனால், எல்லா மனிதர்களையும் போலத்தானே பாபா ராம்தேவும் ?   சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பலவீனங்களை விட, ப்ராடு சாமியார்களுக்கு பலவீனங்கள் அதிகமாக இருப்பது இயல்புதானே ?  அந்த இயல்பான பலவீனமான பேராசை பாபா ராம்தேவுக்கும் பதஞ்சலிக்கும் தலை தூக்கியது.  அதன் விளைவுதான், வாட்ஸப் செயலிக்கு போட்டியாக, பதஞ்சலி களமிறக்கிய புதிய செயலி கிம்போ.
வாட்ஸப், இன்று செல்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவிகித்ததினரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டதை நாம் அனைவரும் அறிவோம்.    வாட்ஸப் நிறுவனம் தனி நிறுவனமாக இருந்தபோது இருந்தததை விட, ஃபேஸ்புக் நிறுவனம் அதை வாங்கிய பிறகு, அதன் தொழில்நுட்பமும், பாதுகாப்பு அம்சங்களும் பல மடங்கு மேம்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அந்த வாட்ஸப்புக்கு போட்டியாக கிம்போ செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி.   அதன் டேக் லைனாக, இந்தியா பேசுகிறது என்ற வாசகத்தையும் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி.


தேசபக்தி பேசும் பல காவி ஊடகங்களை வைத்து, கிம்போ இந்தியாவை புரட்டிப் போடும் ஒரு செயலி என்று செய்திகளும் வெளியிட வைக்கப்பட்டன.
Paytm நிறுவனம் தனிநபர்  தகவல்களை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு அளித்ததாக கோப்ரா போஸ்ட் நிறுவனம் செய்திவெளியிட்டு அந்த சூடு ஆறும் முன், பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான நபர் அதுவும் பொதுத்தேர்தல் வருவதற்க்கு 1 வருடம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு செயலியை தயாரித்ததற்கு உள்நோக்கம் இருக்குமா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மிகுந்த படோடாபத்தோடு கிம்போ அறிமுகம் செய்யப்பட்டது.  ஆனால், பாபா ராம்தேவ், இணையத்தின் வீச்சை அறியாத ஒரு மூடன் என்பது ஒரு சில மணி நேரங்களிலேயே அம்பலமானது.
கிம்போ செயலியின் தொழில்நுட்ப அம்சங்கள், அதன் வரலாறு, எங்கிருந்து திருடப்பபட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அடுத்தடுத்து எடுத்து வெளியிட்டார்கள் இணையவாசிகள்.
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டாரில் பதஞ்சலி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட, iOS ஆப் ஸ்டோரில் Appdios Inc என்ற பெயரில் பதிவேற்றப்பட்டு உள்ளது.



யார் இந்த Appdios என்று பார்த்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் என்பது தெரிய வருகிறது, சுதேசி என்பது வெறும் மார்க்கெட்டிங் யுக்தி மட்டுமே. iPhoneஇல் இருந்து சுதேசி பொருளை மட்டுமே வாங்கவும் என்று ட்வீட் போடுவதும், nike ஷூ அணிந்து கொண்டு சுதேசி வசனம் பேசுவதும் வேறு வேறல்ல.
இந்த தகவல்களை இணையவாசிகள் ட்விட்டரில் பாபா ராம்தேவை டேக் செய்து அடுத்தடுத்து அம்பலப்படுத்தினர். கூகிள் ப்ளே ஸ்டோருக்கு புகாரும் அனுப்பினர். கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி, அம்போவென தூக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் இணையதளமும் www.kimbho.com தற்போது முடங்கி உள்ளது.
Appdios அந்த நிறுவனத்தை அதித்தி கமல் மற்றும் சுமித் குமார் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் 2012 ஆம் ஆண்டு நிறுவி, 2016 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக