சனி, 24 ஜூன், 2017

மகளை எரித்துக் கொன்ற தந்தை! காதல் வெறுப்பு...

Family members lament after woman was burnt alive by her father. ... her in kerosene and burnt her to death in Uttar Pradesh's Moradabad
மின்னம்பலம் : உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே எரித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஷ்ரஃப் ரஸா கான். இவர் மகள் குல்ஃபஷா பீ (22). குல்ஃபஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜூன்,23) மதியம் 2 மணி அளவில் முஷ்ரஃப் ரஸா கான் தன் மகள் குல்ஃபஷா வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், குல்ஃபஷா அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது குல்ஃபஷாவின் தந்தையும் உறவினர்களும் குழந்தையை அவரிடமிருந்து பிரித்துவிட்டு, அவரைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பின்னர், மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர். வலியால் குல்ஃபஷா அலறி துடித்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குல்ஃபஷா இறந்துள்ளார்.

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!


இந்தி எதிர்ப்பு என்றாலே தமிழ்நாடுதான் என்று இந்திய வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டில் 1937ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அதற்கு அடுத்து 1963 - 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் இந்தியை வேர்பிடிக்கவிட முடியாமல் செய்துவிட்டது. இன்று தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டாலும் இன்னும் இந்தி தமிழகத்தில் பரவாமல் முக்கியத்துவமற்ற மொழியாகவே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழக மக்களின் தமிழ் மொழிப்பற்றுதான்.
மத்திய அரசு அவ்வப்போது நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறும்போதெல்லாம் இந்தியாவின் தென்கோடியில் இந்தி எதிர்ப்பு என்று குரல் ஓங்கி ஒலிக்கும். அந்தக் குரல் தமிழ்நாட்டின் குரல். இந்தி மொழி விஷயத்தில் எப்போதும் மத்திய அரசுக்கு தமிழகம் தலைவலிதான். ஆனால், சில ஆண்டுகளாக இந்த இந்தி எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய பல மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது பிரிவினைக் குரல் என்று பார்க்காமல் மாநில மொழி பேசும் மக்களின் உரிமைக் குரலாகவே பார்க்க வேண்டும்.

கலாம் சாட்’டுக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர்!

‘கலாம் சாட்’டுக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர்!
உலகிலேயே குட்டி செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18. இவர் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை 4 கியூபிக் செமீ அளவில் 64 கிராம் எடையில் வடிவமைத்துள்ளார். முகமது ரிஃபாத் ஷாரூக், கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 750 தான். ஆனால் அவர் செய்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் யாரும் வடிவமைக்காத அளவுக்குச் சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார்.
நாசா மற்றும் டூடுல் லியர்நிங் நடத்திய கியூப்ஸ் இன் ஸ்பேஷ் என்ற போட்டியில் கலந்து கொண்ட ஷாருக் 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.

TN மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 85% மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு!

AdmkFailss:  "தமிழக மாணவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக 85% இடங்கள், மாநில பாடதிட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும்; 15% இடங்கள் சிபிஎஸ்சி பாடதிட்டம் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கும் வகையிலான அரசானை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இந்த முறையின்படி மாணவர்களுக்கு கலந்தாய்வு 17ம் தேதி துவங்கும்!" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சட்டசபையில் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் வெறும் 1% கூட கிடையாது. ஆனால் அவர்களுக்கு 15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காரணம் அப்படி ஒதுக்கவில்லையென்றால், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்றால் பெரும்பாலான இடங்களை சிபிஎஸ்ஈ மாணவர்களே இடம்பிடிப்பார்கள்! 50% மேற்பட்ட இடங்களை சிபிஎஸ்ஈ மாணவர்கள் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்களுடைய பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தினால் அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பதில் ஒன்று அதிசயம் இல்லை!!
மிகப்பெரிய சமூக அநீதியில் இருந்து தப்பிப்பதற்காக ஒப்பீட்டளவில் சிறிய சமூக அநீதியை சட்டமாக்கியிருக்கிறது மாநில அரசு.

+2 தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர்கள் கூட நீட் தேர்வில் கோவிந்தா.... தமிழ் மாணவர்களை விற்ற அதிமுக .






Eliud Rajkumar Simon தமிழகத்தில் வடநாட்டவர்கள் கால்உண்ற ஏதுவாக தமிழக அரசே நடந்து கொள்வதுதான் வேதனை.இன்று வரையில் கல்வியின் தரத்தில் தமிழகத்தில் குறை இல்லை .போட்டித் தேர்வுகளில் பாடபிரிவுகளை ஒட்டி கேள்வி கேட்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தபால்துறை போட்டித்தேர்வில் தமிழில் ஒருவார்த்தைக்கூட சரியாக பேசத் தெரியாத ஹரியானா மாணவர் தமிழ் தேர்வில் முதலில் வந்தது எப்படி?
ஐ.சி.எப் ல் பத்து வருடங்களாக அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 85%வடநாட்டுமாணவர்கள் தேர்வானது எப்படி?
3 phaseக்கும் single phaseக்கும் வித்தியாசம் தெரியாமல் railwayல் electrical departmentல் வடநாட்டு மாணவர்கள் தேர்வாவது எப்படி? நாம் தொடர்ந்து நம்மையே குற்றம் குறை சொல்லிக் கொண்டு இருந்தால் இலங்கைக்கு அப்பால் நம்மை தள்ளி விடுவார்கள்.இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருங்கள்.....

சீனாவில் நிலசரிவு 100 பேருக்கு மேல் உயிரோடு புதைவு .. China landslide leaves 100 missing in Sichuan - BBC News

veerakumaran. பீஜிங்: சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.< இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது tamilone india

டயனா மரணம் ஒரு ஆணவ கொலை / கௌரவ கொலை !

stanley.rajan. இங்கிலாந்து இளவரசி டயானவினை நாங்கள் தான் கொன்றோம்,
நாட்டுக்காகவும் அரச குடும்பத்திற்காகவும் கொன்றோம் ; பிரிட்டன் உளவுதுறை தலைவர்
டயானா இறந்து கிட்டதட்ட 20 வருடம் ஆகின்றது, உலக மக்களிடம் பெரும் அபிமானம் பெற்றிருந்த டயானா, இங்கிலாந்து மக்களாலும் நிரம்ப நேசிக்கபட்டார். அவரது விபத்து ஆரம்பம் முதலே சர்ச்சை, இப்பொழுது உளவுதுறை தலைவரே அரச குடும்பத்திற்காக கொன்றதாக‌ ஒப்புகொண்டிருக்கின்றார், ஆக டயானா கொல்லபட்டிருக்கின்றார் எவ்வளவு பெரும் அபிமானம் பெற்றவர் டயானா? ஆனால் எங்காவது இந்த விஷயம் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை
பிரிட்டனிலும் அறவே இல்லை, ஏன்?
பிரிட்டானியருக்கு டயானா பிடிக்கும், ஆனால் அரச குடும்பத்தின் மீதான மரியாதை அதனை விட அதிகம்
டயானா தேவசேனைதான், ஆனால் ராணி எலிசபெத் சிவகாமி தேவி, அந்த ராஜ குடும்பத்தின் மீதான மக்கள் அபிமானம் அப்படி
எப்படியோ பிரிட்டனின் இளவரசி ஒரு எகிப்து இஸ்லாமியனை திருமணம் செய்வதை விட செத்துபோகலாம் என கொல்லபட்டிருக்கின்றார்
கவுரவ கொலை உலகில் எல்லா இடங்களிலும் நடக்கின்றது

தளபதி ஸ்டாலின் Vs தளபதி விஜய் .... தளபதி பட்டத்துக்கு விஜய் உரிமை கோருகிறார்?

கடந்த 25 வருடங்களாக திரையுலகில் 'இளையதளபதி' என்ற பட்டத்துடன் வலம் வந்த விஜய், 'மெர்சல்' படம் மூலம் திடீரென தளபதியாக மாறிவிட்டார். சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட ரசிகர்கள் கொடுத்த 'இளையதளபதி' என்ற பட்டம் தான் தனக்கு பெரிது என்று விழா ஒன்றில் கூறிய விஜய், தற்போது 'தளபதி'யாக மாறுவதற்கு ஒரு பழிவாங்கல் இருப்பதாக கூறப்படுகிறது. 'சுறா', 'வேட்டைக்காரன்' என விஜய் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் உரிமையை பெற்ற சன் மூவீஸ் நிறுவனம் வேண்டுமென்றே அந்த படங்களை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒருமுறை எஸ்.ஏ.சி, சன் மூவீஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு 'தளபதி' ரொம்ப வருத்தத்தில் இருக்கின்றார், உடனே படத்தை திரையிடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு அந்த பக்கத்தில் இருந்து வந்த பதில், 'எங்களுக்கு தெரிந்து ஒரே தளபதி ஸ்டாலின் தான், அவர் ஒன்றும் வருத்தப்பட மாட்டார்' என்று கூறி போனை வைத்துவிட்டார்களாம்

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியாவை அனுமதிக்க சீனா மறுப்பு!

இந்தியாவுக்கு அனுமதியில்லை: சீனா! அணுசக்தி  விநியோகக் குழுவில் இந்தியாவை உறுப்பினராக அனுமதிக்க முடியாது’ என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அணுசக்தி பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் 48 நாடுகளை உறுப்பினராகக்கொண்டுள்ள அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆர்வம்காட்டி வருகிறது. அதற்காக, தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளிடம் இந்தியா ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல் மற்றும் அணுசக்தி துறை போன்றவைகளில் வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கிற காரணத்தால், இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் சீன அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா.. FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன் என்று  சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை அளிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 8 கேள்விகளை எழுப்பியிருந்தார்.அதில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம்,  பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர  பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்  என்று வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

வெள்ளி, 23 ஜூன், 2017

ஷாலின் :திமுக ஒரு கட்சியாக upgrade /update செய்துகொள்ள வேண்டி உள்ளதை தோழர் ஸ்டாலின் ..

Shalin Maria Lawrence எனக்கு 5 எனக்கு வயாதாகும்போதிருந்தே நான் திமுகவை
பற்றி அறிந்திருக்கிறேன் .என்னை மடியில் போட்டுகொண்டு என் தாய் திமுகவை பற்றி பேசியதெல்லாம் எனக்கு இப்பொழுதும் காதில் கேட்டுக்கொண்டிருந்தது .1991 இல் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது என் குடும்பத்தினரோடு சேர்ந்து என்னவென்று தெரியாமல் கூடவே நானும் அழுது இருக்கிறேன் . திமுகவின் வரலாறு என்ன ,திமுகவின் எண்ணிலடங்கா சாதனைகள் என்ன அனைத்தும் அறிந்திருக்கிறேன் .நான் ஒரு திமுக விசுவாசி .எனக்கு கலைஞர் என்றால் மிகவும் ...மிகவும்...பிடிக்கும் .
திமுக தலைவர்கள் மீது தனி நபர் தாக்குதல்கள் நடக்கும்போது நான் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன் .அதே போல் திமுக மீது பொய் பழிகளை போடும்போதும் நான் கருத்தியல் ரீதியாக மோதி இருக்கிறேன் .எனக்கு தெரிந்து தமிழகத்தின் விடிவுகாலம் திமுகவின் கையில்தான் உள்ளது .

வெங்காய நாயுடு :விவசாய கடன் தள்ளுபடி ஒரு பேஷனாகி விட்டது ... சொல்லுவேடா சொல்லுவே ... இதுவாடா பாஷன்?

கார்போரேட்டு கம்பெனிக்கு ...கடன் கொடுத்து வராக்கடன் என்ற லிஸ்ட்டில் வைத்து அதை முறையாக தெளிவாக விரைவாக வசூலிக்காமல், மக்கள் மேல் அளவில்லா தினுசு தினுசான வரிகளை போட்டு அவாளுக்கு (கார்பொரேட்) மறைமுகமாக உதவி மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கோ வெங்காயம் ...
மும்பை : ''கடன் தள்ளுபடி செய்வது தற்போது, 'பேஷன்' ஆகிவிட்டது. மிக மிக இக்கட்டான சூழலில் மட்டுமே இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னைக்கு கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வாகாது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற
வளர்ச்சித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு பேசியதாவது: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. எனினும், கடன் தள்ளுபடியால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழலில், கடன் தள்ளுபடி அறிவிப்பு ஒரு பேஷன் ஆகிவிட்டது. மிக மிக இக்கட்டான சூழலில் மட்டுமே, கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
 கர்நாடகாவில், கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற கடன் தொகையில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக, காங்., கட்சியை சேர்ந்த, அந்த மாநில முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் ... தமிழகத்துக்கு மரண அடி .. முதல் 25 இடத்தில ஒருவர் கூட கிடையாது. திட்டம் போட்டு படு குழி ..

நீட் தேர்வு
விகடன் : தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.
இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு.
நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம், இந்தி தவிர்த்து, குஜராத்தியில் 47,853 மாணவர்களும், பெங்காலியில் 34,417 மாணவர்களும் தேர்வை எழுதினார்கள்.

காலக்கூத்து மதுரை பெண் தன்சிகாவுக்கு காதலிக்க நேரமே இல்லையாம்

தனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதலிக்க நேரமில்லை என்று தன்ஷிகா
கூறியுள்ளார். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்துவரும் தன்ஷிகா கூறும்போது, ‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த குழுவினரும் பணியாற்றினோம். சண்டைக்காட்சிகளில் இயக்குனர் விருப்பப்படி நானே நடித்தேன். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.
அடுத்து.. ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். நாகராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.

அதிமுகவின் 3 அணிகளும் பாஜகவின் அங்கத்துவ அட்டை பெற முடிவு! .. முழுவதும் கற்பனை... அல்ல ..

Babu Vmk ஆளும் அதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு
தருகிறது.
சரி, ஆதரவு தருவதற்கு ஒரே ஒரு நல்ல காரணத்தை அதிமுகவால் தமிழக மக்களுக்கு சொல்ல முடியுமா...??
இது குறித்து எந்த ஊடகங்களாவது கேள்வி கேட்கவோ விவாதிக்கவோ முன்வந்துள்ளதா...?
👎காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது...,
👎நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது...,
👎மழை வெள்ள நிவாரண நிதியை தர முடியாது...,
👎ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட முடியாது...,
👎விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது...,
👎வறட்சி நிவாரண நிதி தர முடியாது..,
👎புதிய ரயில்வே திட்டங்கள் தர முடியாது...,
👎சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட முடியாது...,
👎எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட முடியாது
 இப்படி எண்ணற்ற முடியாது; கொடுத்த பாஜகவுக்கு தான் ஆதரவு தர முடிவு செய்துள்ளது அடிமை அதிமுக

எம்ஜி... யார் ? எமெர்ஜென்சி மிசா சட்டத்தை கட்சி பொதுக்குழுவில் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே இந்திய தலைவர்

மிசா (எமெர்ஜென்சி) சட்டத்தை ஆதரித்து கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் போட்ட ஒரே வீராதிவீரர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் மட்டும்தான். இந்திராகாந்தி புலிகளுக்கு பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தவரைக்கும் அதே புலிகளுக்கு தண்ணி வைத்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுள்ள ராஜீவ் வந்ததும் அமெரிக்க ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்தசாரதிக்கு புலிகளை திட்டி பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர். பாஜகவின் கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் தான் ஜெயலலிதா. இன்று அந்த பாரம்பரியம் அதிமுகவில் தொடர்கிறது.
என்ன ஜெ நீட் போன்ற தமிழகத்தில் அவர் செல்வாக்கை பாதிக்கும் விஷயங்களிலாவது கொஞ்சம் இறுக்கமாக இருந்தார். இப்போதிருக்கும் அடிமைகள் ஒட்டுமொத்தமாக படுத்தே விட்டார்கள்.

மற்றபடி அதிமுக என்பதே டெல்லி முதலாளிகளால் திமுகவை காலி செய்ய ஆரம்பிக்க வைக்கப்பட்டதுதான். ஆனால் அந்தக் கணக்கு தப்பாகப் போய் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்பதால் அதிமுக எனும் அடியாள் இங்கு முதலாளி ஆகிவிட்டார். மற்றபடி அதிமுக தலைமை யார் மாறினாலும் டெல்லியிடம் இருக்கும் பழைய பயமும், விசுவாசமும் அப்படியேதான் இருக்கும்.  நன்றி கிளிமூக்கு அரக்கன்

இளவரசி டயனா கொல்லப்பட்டார் ... கொலையாளி வாக்குமூலம் .. மரணப்படுக்கையில் வாய்திறந்தார்


Gajalakshmi லண்டன் : நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தன்னுடைய உயிர் பிரியாது என்று பிரிட்டிஷ் உளவு அமைப்பின் முன்னாள் ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டயானா அந்த அளவிற்கு அழகுப் பதுமையாக இருந்தார்.

கிரண்பேடி .... புதுச்சேரி அரசுடான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாம்..

Krthikeyan புதுச்சேரி: எனக்கும் புதுச்சேரி அரசுக்கும் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. இதனிடையே முதல்வர் நாரயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் கிரண்பேடி. இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிரண்பேடி செயல்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி நேற்று குற்றம்சாட்டியிருந்தார். முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

ஆம் அவர்கள் (ஆரியர்கள்) குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
ரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில் நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார்.

ரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் !

எத்தனையோ ரஜினி படத்துல சோறு ஆக்கி போட்டிருக்கோம். அந்த ஆளு
சாப்பிட்ட தட்டை கூட நாங்க தான் எடுக்குறோம். எங்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணாதவன். அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான். ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க “ஆளப் பார்த்த அழகு, பூ**** பார்த்த சொத்த” அதான் ரஜினி!
ஜினி அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தலைப்பு செய்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி வகையறாக்களின் திட்டமும் அதுவே. மாலை நேர தொலைக்காட்சி விவாதங்களோ இல்லை தந்தி டி.வி முன்வைத்த கருத்துத் திணிப்போ எல்லாம் ரஜினியை தமிழகத்தின் அடுத்த ரட்சகராக மக்கள் கருதுவதாக முன்வைத்தன. உண்மையில் ரஜினியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள திட்டமிட்டோம். முதலில் ரஜினியை நேரடியாக அறிந்த அவரது திரையுலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதறிய சில சினிமாத் தொழிலாளிகளை சந்தித்தோம்.
சென்னையின் அதிகாலை ஐந்து மணி, வடபழனி பேருந்து நிலையம் அருகே சினிமா தொழிலாளிகளை ஏற்றிசெல்லும் ஃபெட்போர்டு வண்டியின் வருகைக்காக காத்திருந்த புரடெக்சன் தொழிலாளி செல்வத்திடம் ஆரம்பித்தோம்.

"ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்">1

ராம் நாத் கோவிந்து, தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார்.
வினவு : பிரதமர் மோடியுடன் ராம்நாத் கோவிந். பீகாரின் ஆளுநர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 20-ம் தேதியன்று இராஜினாமா செய்த ராம்நாத் கோவிந்தின் தற்போதைய அடையாளம், “இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக-வால் முன் நிறுத்தப்பட்டுள்ள ‘தலித்’ வேட்பாளர்” என்பது தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்களை பாஜக தொடர்ந்து நிகழ்த்தியுள்ளது. உனா தாக்குதல், ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை மற்றும் ரோகித் வெமுலா ‘கொலை’ ஆகியவையே இதற்குச் சான்று.
இப்பேற்பட்ட சங்கபரிவாரக் கும்பல், தனது தலித் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள, தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.-சின் பல்வேறு பிரிவுகளில் பல ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கும் இராம்நாத் கோவிந்தை களமிறக்கியுள்ளது.

NASA : தமிழக மாணவனின் உலகின் எடை குறைந்த செயற்கைகோளை நாசா அனுப்பியது ... இந்தியாவில் யாருக்குமே தெரியாது!

Vinayaga Murugan ரிஃபாத் ஷரூக் ( Rifath Shaarook ) என்ற தமிழக மாணவர்
உருவாக்கிய உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் நாசா அமைப்பின் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட தகவல் எந்த வடநாட்டு செய்தி ஊடகங்களிலாவது முதன்மை செய்தியாக வந்துள்ளதா? இந்த கேடுகெட்ட அரசின் , அதன் கைப்பாவையாக செயல்படும் ஊடகங்களின் கள்ளமவுனம் எதை காட்டுகிறது? இஸ்லாமியராக இல்லாமல் இவர் ஒரு பிராமணராக பிறந்திருந்தால் இவரை நாடே கொண்டாடியிருக்கும். இந்தியாவின் முதல் சுதந்திரப்போரை தொடங்கிவைத்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள் என்று பல கலை,கலாச்சார நவீனங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மகத்தானது. இப்போதும் ஓர் இஸ்லாமிய பெயர் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளது. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எண்ணற்ற பிராமணர்கள் அமெரிக்கா சென்றார்கள். அடுத்த பத்தாண்டுகளில் கல்விகற்ற மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் பின்னாலேயே அங்கு சென்றார்கள். இப்போதெல்லாம் அங்கு பிராமணர்களுக்கும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும்தான் கடும்போட்டி. திறமைக்கோ, அறிவுக்கோ பிறப்போ,குலமோ ஒரு காரணம் இல்லை. எந்த ஜாதியில் பிறந்தவனும் அறிவில், திறமையில் ஜொலிக்கலாம். இதை பிராமணர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ அமெரிக்கர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

மேட்டுர் அணை வரலாறு நமக்கு அறிந்ததும் அறியாததும் :

A.Somasundaram:  மேட்டுர் அணை வரலாறு : நமக்கும் நம்தலைமுறைக்கும்
சம்பந்தமே இல்லாதமண் இது என்று தெரிந்தும் ஒருவர்தமிழகம் செழிக்கும் வண்ணம்பிரம்மாண்டமான மேட்டூர் அணையை
கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல்என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்கொட்டினால் கூட கட்டமுடியாதபிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு 4 கோடியே 80லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி
முடித்துள்ளனர்.
மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும்மதி நுட்பம். மேட்டூர் அணையைஇதுவரை இரண்டு முறை மின்னல்தாக்கியது.

கனிமொழி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் .. கூவத்தூர், ஆர் கே,நகர் ...

மின்னம்பலம் : கூவத்தூரில் எம்.எல்.ஏ.-க்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாகவும்
மற்றும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த போது பணப்பட்டுவாடா தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த, விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக வெளிவந்த வீடியோ விவகாரம் குறித்தும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் 9-பக்க புகார் மனுவை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஜூன் 23-ஆம் தேதி(இன்று) அளித்தார்.

ஸ்மார்ட் சிட்டியில் 4 தமிழக நகரங்கள்!

ஸ்மார்ட் சிட்டியில் 4 தமிழக நகரங்கள்!பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டமும் ஒன்று. மத்திய அரசின் நகர அபிவிருத்தி அமைச்சகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 100 முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 60 இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு தேர்வு செய்தது. அதில் தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
இந்நிலையில் மேலும் 30 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு இன்று(ஜூன்-23) தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதலாவதாகத் திருவனந்தபுரம், இரண்டாவதாக நயாராய்பூரும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. விரைவில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் விஷ்வமாயா  நகர் என்று சமஸ்கிருத பெயராக...  ?

கீழடி : தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கீழடி :  தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மின்னம்பலம் : கீழடி அகழாய்வு தலைவர் அமர்நாத் பணியிடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று ஜூன் 23ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால தமிழர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், அணிகலன்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் என்று சுமார் 5000க்கு மேல் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இங்கு நெசவு தொழில் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் பெரிய அளவில் சாயப்பட்டறை இருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கீழடி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிடக் கூடிய அளவில் உள்ளது வரலாற்றாய்வாளர்கள் விவாதிக்கின்றனர். இதன் மூலம் சங்க இலக்கியங்களில் காணப்படும் பழங்காலத் தமிழர் நாகரிகம் இன்று தொல்லியல் சான்றுகளுடன் வெளிப்பட்டுள்ளது என்று தமிழ் ஆர்வலர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

3 அதிமுக எம் எல் ஏக்கள் ஸ்டாலினை சந்தித்தனர் .. கருணாஸ்,அன்சாரி,தனியரசு ...

அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ், தனியரசு ஆகியோருடன் தமிமுன் அன்சாரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையின் அவையிலேயே வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பகிர்ந்துகொண்ட தமிமுன் அன்சாரி, 14 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசினேன். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

அரசியல் வேறுபாடு இல்லாமல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அந்த அடிப்படையில் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோருடன் அவையில் அனைவரும் இருக்குபோது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தோம். ஸ்டாலின் சப்போர்ட் செய்வதாக கூறினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு மன்னிப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் 7 பேரின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டு நடவடிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றது. அவர் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூப்பித்து காட்ட வேண்டும் என கவர்னர் வித்யாசாகர்ராவ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடத்தப்பட்டது. அன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசினார்கள். அப்போது சட்டசபையில் கடும் ரகளை ஏற்பட்டது. நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அதனை ஏற்கவில்லை. இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Enter the Meira Kumar... குடியரசு தலைவர் தேர்தலில் 17 எதிர்கட்சிகள் ஒரே அணியில்!

Specialcorrespo/ காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமை தாங்கிய இந்த ஆசாத்,
மல்லிகாஜூர்ன கார்கே, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான சரத்பவார், மாயாவதி, மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி
மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பியுமான பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பின.
மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மற்றும் மாநிலங்களவை எம்.பி. பாலசந்திர முங்கேகர் ஆகியோரது பெயரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மீரா குமாருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால் பின் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நாக்கு துண்டிப்பவருக்கு 10 லட்சம் பரிசு ... கிரிகெட் .. பாகிஸ்தான் வெற்றியை கொண்டடியவ்ரின்

BJP leader here announced a Rs 10 lakh reward today for anyone who cuts the tongue of separatist leader Mirwaiz Umar Farooq, who hailed Pakistan’s victory over India in the Champions Trophy final.
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் நாக்கை துண்டித்தால் ரூ.10 லட்சம் பரிசு பா.ஜனதா பிரமுகர் அறிவித்துள்ளார்.
போபால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. அதற்காக பாகிஸ்தான் அணிக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் கஜ்ராஜ் ஜாதவ், மீர்வைசின் நாக்கை துண்டிப்பவருக்கு பரிசு அறிவித்துள்ளார். இவர், பா.ஜனதாவில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும், இவருடைய மனைவி பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார்

மீராகுமார் ஆதரவு . நிதீஷ்குமாரை லாலு வலுயுறுத்தல்... பீகார் ஆட்சி நீடிக்குமா?

பாட்னா: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு, பீஹாரில் ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்., வேட்பா ளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக, நிதிஷ் குமாருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கும், கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.தன் மகன்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், லாலு, மிகவும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், ஜனாதிபதி தேர்த லில், பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணி, பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை, வேட்பாளராக அறிவித்துள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தை ஆதரிக்கப் போவதாக, ஐக்கிய ஜனதா தளம் அறிவித் துள்ளது; இது, லாலு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் சார் பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாரை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, நிதிஷ் - லாலு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும்
நிலையில்,ஐக்கிய ஜனதாதளத்தின் இந்த முடிவால், பீஹாரில் கூட்டணி உடையுமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மக்களை ஒட்டச் சுரண்ட ஜி.எஸ்.டி : தமிழக அரசு ஒப்புதல்

மிழக சட்டப்பேரவையில், எடப்பாடி அரசு, கடந்த 19-06-2017 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றியது. மக்களின் மீது பெரும் வரிச் சுமையாக விழும் இம்மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அனைத்து எதிர்ப்புகளையும் துச்சமாகப் புறந்தள்ளி இம்மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது பாஜகவின் எடுபிடி அரசு.
வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும் ஜி.எஸ்.டி. வரியின் மூலம் உணவுப் பொருட்களின் விலை சுமார் 42% வரை உயர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசியமான 1,211 பொருட்களுக்கு இதுவரை தமிழகத்தில் விதிக்கப்பட்டு வந்த 5% மதிப்புக் கூட்டு வரி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. மூலம் சுமார் 5% முதல் 28% வரை உயர்த்தப்படவிருப்பதாகவும், தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு பெற்ற 589 பொருட்களில் 509 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சசிகலாவிடம் தம்பிதுரையை தூதுவிட்ட பாஜக ... விரைவில் ரிலீஸ்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக >தனது வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை அறிவித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவை கேட்டு வருகிறது பாஜக.இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதாலும், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீது வழக்குகள் உள்ளதாலும் அவர்களை சென்று சந்தித்து ஆதரவு கேட்டால் தேவையில்லாத கருத்துக்கள் எழும் என்பதால் பாஜக சார்பில் அதிமுக மக்களவை தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் அதிமுகவின் ஆதரவை கோரினர்.இதனையடுத்து தனது கட்சி தலைமையை சந்திக்க நேற்று பெங்களூர் சிறைக்கு சென்றார் தம்பிதுரை. ஏற்கனவே சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரன் உள்ளிட்ட பலரும் காத்திருக்க சசிகலா முதலில் அழைத்தது தம்பிதுரையை தானாம்.சிறையில் சசிகலாவை பார்த்ததும் தம்பிதுரை கண் கலங்கிவிட்டாராம். தம்பிதுரை கண் கலங்குவதைப் பார்த்து சசிகலாவின் கண்களிலும் கண்ணீர் வந்ததாகவும் தகவல்கள் வருகிறது.

பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம் பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச விண்கல் தினம் வரும் ஜூம் 30-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டனிலுள்ள பெல்ஃபாஸ்ட் பல்கலைகழகத்தின் ஆலன் ஃபிட்ஸ்சிம்மன்ஸ் கூறும்போது, "விண்கல் பூமியை தாக்குமா என்ற கேள்வியைவிட இது எப்போது நடக்கப் போகிறது என்ற கேள்வி மட்டுமே தற்போது உள்ளது. எப்போது அந்த விண்கல் பூமியை தாக்கும் என்று கூற இயலாது. ஆனால் நிச்சயமாக பூமியை அந்த விண்கல் தாக்கவுள்ளது.

உபி . புகார் கொடுக்க சென்ற பெண்ணை படுக்க அழைத்த போலீஸ் .. இருவரால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணை ..

The rape survivor told TOI, "My ordeal began soon afterwards. Whenever I approached SI Jai Prakash Singh seeking arrest of the accused, he would say he first wanted to have sex with me. He even called up on my mobile phone and invited me to visit him in his room alone.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவரை சமீபத்தில் இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்க அவர் காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. புகார் கொடுக்க சென்ற தன்னை சப்-இன்ஸ்பெக்டர் படுக்கைக்கு அழைத்ததை தான் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்< ஆனால் அவருடைய வீடியோவை பார்த்த எஸ்பி அலுவலக அதிகாரிகள் அந்த வீடியோவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் குரல், வீடியோவில் இருந்த குரலுடன் ஒத்து போகவில்லை என்றும், இருப்பினும் அந்த பெண்ணின் புகார் மீது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது. வெப்துனியா

வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்!

வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்!மின்னம்பலம்: ராஜஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தங்கள் வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்

பொருள்கள்  வழங்கப்படும் என்று அண்மையில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரேஷன் மூலம் உணவு தானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள தசுவா மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரேஷனில் உணவு தானியம் வழங்குவதற்காக, ராஜஸ்தான் அரசு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ‘நான் மிகவும் ஏழை’ என்று எழுதியுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயல் ஏழைகளை அவமானம் அடையச் செய்துள்ளதாக அந்த மக்கள் நேற்று ஜூன் 22ஆம் தேதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.  குவாலியர் அரசகுடும்ப வாரிசு இன்று பாஜகவின் ஜனநாயக அரசியல்வாதியாக மாறினாலும் பழைய ராஜகுடும்ப கொடூர குணங்கள் அழியவில்லை.  இவர் ஆரவல்லி மலைபிரதேச சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர். அதைவிட லலித் மோடியின் முறைகேடுகளுக்கு துணைபோன வரலாறும் உடையவர்.ஏழைகளின் மனதை புண்படுத்துவது இவர்களுக்கு விளையாட்டு

லஞ்சம் கேட்ட பொறியியலாளர் கேமேராவில் சிக்கினார் .. இளைஞன் அதிரடி

kavkavikavi  ஊராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக
போயிருந்தேன்.. சின்னதா 600 சதுர அடியில் வீடு. ஆய்வாளர் ஏற இறங்க பார்த்தார்.. ஒரு செல் நம்பரை கொடுத்து,இவர் கட்டிட பொறியாளர், இவரைப் பார்த்துட்டு வாங்க என்றார்..
 "ஏன்" என்றேன்.. அவர் உங்களது டாக்குமெண்ட்களை சரி செய்து தருவார் என்றார்..
"ஐயா., ஒரு நிமிடம்.. எல்லாம் சரியாக உள்ளது.. மேலும்,
ஐந்து பைசா லஞ்சமாக கொடுக்க மாட்டேன்" என்றேன்..
அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு, "பணத்தை செலுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்" என்றார்..
ஒரு வாரத்தில் ஆரம்பித்து 37 முறை நகராட்சிக்கு சென்று வந்துவிட்டேன்.,
38 முறையாக சென்றேன், ஆய்வாளர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.,
"ஐயா, ஒரு வாரம் கழித்து வரட்டுங்களா" என்றேன் முந்திக் கொண்டு, வேறு வழியே இல்லாமல், சான்றை எடுத்து நீட்டினார்..
வாங்கிக் கொண்டு, ஒரு டிவிடியை அவரிடம் கொடுத்தேன்..
"என்ன இது" என்றார்...

தமிழக காவல்துறையினர் குடும்பத்துடன் முதல்வரை சந்திக்கத் திட்டம்!

தமிழக காவல்துறையினர் குடும்பத்துடன் முதல்வரை சந்திக்கத் திட்டம்!காலையில் எழுந்து நியூஸ் வெப் சைட்டைப் படிக்கும் பலரும்,எப்போதும் நம் நாட்டில் கொலை, கொள்ளை, குற்றம் எனும் செய்திகள் தான் நடக்கின்றனவா? என சலித்துக்கொள்வார்கள் .
ஆனால், இதைக்கட்டுப்படுத்த நாள்தோறும் காவல் நிலையம், சிறை, நீதிமன்றம் என அலைந்து திரிந்து கஷ்டப்படும் போலீஸ்காரர்கள் செய்யும் வேலை, குற்றம் நடக்காமல் சமாளிக்கும் பாங்கு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடும் உழைப்பு ஆகியவை வாங்கும் ஊதியத்துக்கும் மேலான,போலீஸ்காரர்களின் ரெகுலர் பணியாகிவிட்டது.
ஒவ்வொரு தினமும் ஊருக்காக, நம் மக்களுக்காக கண்ணுறங்காமல் பணியாற்றும், பல பொறுப்பான போலீஸ் அதிகாரிகளுக்கு, ஒரு நாளைக்கு ஓய்வு என்பதே வெறும் 8 மணி நேரம் தான். இவர்களுக்கென்று சரியான விடுமுறை நாட்கள் கிடையாது. பெரும்பாலான போலீஸ் பணிசெய்யும் அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதே, தற்போது உள்ள சூழலில் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

வியாழன், 22 ஜூன், 2017

நிதீஷ் குமார் சொந்த மாநில தலித் வேட்பாளர் மீரா குமாருக்கு எதிராக வாக்களிப்பாரா? பாஜக ஆதரவு மறுபரிசீலனை?

Lakshmi Priya  டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிலையில் நிதீஷ்குமார், மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முப்படைகளின் தலைவர், ஆளுநர்களை தேர்வு செய்பவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் தேர்வு உள்ளிட்ட மிக பெரிய பதவிகளை தேர்வு செய்யும் மிகப் பெரிய பொறுப்பு ஜனாதிபதிக்குத்தான். அவர் மத்தியில் ஆளும் கட்சியின் ஆலோசனையின் பேரில் செயல்படுபவர் என்றாலும் கூட அவசர நிலை, 356 உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அவரால் மட்டுமே பயன்படுத்த முடியும். 
அத்தகைய நாட்டின் உயர் பதவியை வகித்து வரும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதி முடிவடைகிறது.
பாஜக தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரை எந்தவித எதிர்ப்பும் இன்று அனைத்து கட்சிகளும் ஆதரித்து போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக கடுமையாக யோசித்து வந்தது.

GST வரி.. மத்திய அரசை நோக்கி பணம் ஆறாக ஓடும் .. தமிழ்நாட்டுக்கு திருவோடுதான்

Literacy percentage and HDI have pushed Digital India in Tamilnadu to more extend than other states. TN
also have 2nd most number of internet users in India.
Damodaran : மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குகிறது...
அது எப்படி இருக்கு தெரியுமா ?
ஒரு கொள்ளைக்காரன் கொடுமைக்காரன் பிள்ளைகளை பிடிச்சிக்கிட்டுப்போயி ...அந்த குழந்தைகளை...கண்ணை பிடுங்கி கைய ஒடச்சு காலை ஒடச்சு ஊனமாக்கி பிச்சை எடுக்கவைப்பான்.
அவர்கள் பிச்சை எடுத்து கொண்டு வந்த காசில்....அந்த பிள்ளைகளுக்கு இரண்டு இட்லி வாங்கி கொடுத்து விட்டு மிச்ச காசில் அவன் சுகபோகமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வான் ...
ஆனால் அந்த குழந்தைகளை அவன்தான் கருணையோடு சோறு போட்டு வளர்ப்பதாக வெளியில் சொல்வான்

அதே கதைதான்....இங்கும் மாநில அரசுகளிடம் வாரியாக பறித்துக்கொண்டு போகிற பணத்தில் இருபது சதம் கூட மாநில அரசுகளுக்கு கொடுப்பதில்லை.
மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் தான் மாநில அரசுகள் வாழ்கின்றன என்ற அவப்பெயர் வேறு...
வானதி சீனிவாசன் வெங்காய நாயுடு கேலி நக்கல் பேசுகிறார்கள்...
மக்கள் ஊமையாக இருக்கும் வரை அவர்கள் காட்டில் நல்ல மழைதான்.
GST வரியால்...தமிழ்நாட்டின் வரி வருவாய் பாதியாக குறையும்...
அத்தியாவசிய பொருள்கள் கூட முப்பது சதம் விலை உயரும்
மத்திய அரசு கையில் பணம் ஆறாக ஓடும்.

பிகார் ..நிதீஷ்குமார் அரசு பெரும்பான்மை இழக்கும் அபாயம் ... மீராகுமாருக்கு ஆதரவு வழங்க லாலு கோரிக்கை


NDTV :  New Delhi:  Sushil Modi, the BJP's most senior leader in Bihar today told NDTV that leaders from within Chief Minister Nitish Kumar's government had helped him expose what he has alleged are corrupt land deals worth hundreds of crores by Lalu Yadav and his family. Lalu Yadav is Nitish Kumar's ally and his two sons are ministers in the Bihar government.

"I can't name names but yes, we couldn't have sustained this expose on Lalu's benami properties for over 80 days without the help of JDU leaders," said Mr Modi, who has furnished reams of documents which he says prove that the Yadavs acquired benami property worth Rs. 1,000 crore using shell companies. The allegations are being investigated by the tax department, which has this week charged six members of the family, including Lalu's son and Bihar's Deputy Chief Minister Tejashwi Yadav, with owning benami property.

திமுகவை குறிவைத்துள்ள பாஜக ... குடியரசு தேர்தல் முடிந்ததும் வேட்டை ஆரம்பமாம்

mathi சென்னை: ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுகவைப் போல
திமுகவையும் சிதைப்பதற்கான வியூகங்களில் பாஜக முழுவீச்சில் களமிறங்கும் என்கின்றன டெல்லி தகவல்கள். இதை எதிர்கொள்ள திமுக தலைமையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில்தான் கால் வைக்க முடியாத ஒரு மாநிலமாக இருந்து வருகிறது. அதிமுக, திமுக ஆகியவற்றின் வாக்கு வலிமையாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பத்தோடு பதினொன்றாக மட்டுமே பாஜக இருந்து வருகிறது.
தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுகவை மறைமுகமாக பாஜக கபளீகரம் செய்துவிட்டது. என்னதான் பல அணிகளாக அது சிதைந்தாலும் ஒட்டுமொத்தமாக பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது.
 அதேநேரத்தில் இப்படி கபளீகரம் செய்தாலும் அதிமுக தொண்டர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

ஜெயலலிதா எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா எடப்பாடி அரசு ஆதரவு ..

புதுடில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடும்
எதிர்ப்பு  தெரிவித்த அணைகள்
பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது. 5,300 அணைகள் மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் உள்ள, 5,300 அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், நிர்வகிக்கவும் இந்த சட்டம் உதவும். ஆனால், அப்போது அந்த முயற்சி எடுபடவில்லை. அதன் பிறகு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இது குறித்த வரைவு மசோதா மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

யோகாவால் உலக பருவ நிலை மாற்றம் கொண்டுவரலாம்... அம்பானி அதானி மல்லியாக்களின் பினாமிகள் பிரகடனம்


சங்கிகளை லேசாக சுரண்டினாலே போதும். அவர்களுக்கு உள்ளே இருக்கும் மங்கிகளை வெளியே கொண்டு வந்து விடலாம்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் 21.06.2017 அன்று நடைபெற்ற விவாதத்தில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணனின் சீட்டுக்கு அடியில் குண்டூசி வைத்து விட்டார் தோழர் மதிமாறன். மிருகம் வெளியே வந்து விட்டது.
யோகா – கலையா, மத அரசியலா என்பது தலைப்பு.
நாராயணன்தான் பேசத் தொடங்கினார். ஐநா சபையில் மோடி பேசினாராம். பருவ நிலை மாற்றம் புவி சூடேறுதலை தடுக்கலாம். மூலம், பவுத்திரம் உள்ளிட்ட சகலவிதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம். எங்களிடம் மருந்து இருக்கிறது. உலகத்துக்கே வழிகாட்ட தயாராக இருக்கிறோம் என்று பொளந்து கட்டினார். இந்தியாவில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்றார் நாராயணன். அடுத்து பெருமாள்மணி. அவருக்குப் பெயர் யோகா ஆதரவாளராம். மதமாகவும் பார்க்கலாம், கலையாகவும் பார்க்கலாம் என்று வழுக்கினார். நெறியாளர் நெல்சன் சேவியர் நெருக்கிய பிறகு, அது கலைதான் என்றார். அப்புறம் நீண்ட நேரம் வழுக்கி விட்டு, கடைசியில் நெருக்கிப் பிடித்த பின், மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

மீராகுமாருக்கு கிடைத்த யானை பலம்? மாயவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு!

லக்னோ: ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்க்கட்சிகளின்
வேட்பாளரான மீராகுமாரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று மாயாவதி தெரிவித்தார்.அடுத்த மாதம் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்தரவர் என்பதால் அவருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ராம்நாத்துக்கு ஆதரவு தர ஒப்புக் கொண்டன.

கொலை நடக்கும் முன் கோடநாட்டில் பூஜை?

ஊட்டி: 'கோடநாடு பங்களாவில், கொலை சம்பவம் நடப்பதற்கு முன், பூஜை நடந்தது' என, இரு குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவில் இருந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில், ஏப்., 24ல், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த பங்களாவின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, பலர் நுழைந்து கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டனர். இதில், தொடர்புடையதாக கேரளாவைச் சேர்ந்த, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், சமீர் அலி, ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி ஆகியோருக்கு, வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர், ஜாமின் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி ஆகியோர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், 'நாங்கள் கேரளாவில் உள்ள வீடுகளில் உள்ள தீய சக்திகளை விரட்டும் பணிகள், சிறப்பு பூஜைகளை செய்து வந்தோம். 'கோடநாடு பங்களாவில், சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும்' என, நிர்வாகத்தை சார்ந்தவர்கள், எங்களை இங்கு அழைத்து வந்தனர்.

சுப.உதயகுமாரன் அர்னாப் கோஸ்வாமி மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு .. பிரஸ் கவுன்சிலில் ..

 பிரஸ் கவுன்சிலில் அர்னாப் மீது சுப.உதயகுமாரன் புகார்!

ரிபப்ளிக் டிவி ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் அவதூறு செய்தியை ஒளிபரப்பி தனது குடும்பத்தாரை தொந்தரவு செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளதாக ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மீது சுப.உதயகுமாரான் நேற்று ஜூன் 21ஆம் தேதி இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு சக்தி திட்டத்துக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமாரன் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைமைக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ரிபப்ளிக் டிவியைச் சேர்ந்த அர்னாப் ரஞ்சன் கோஸ்வாமி மற்றும் அவரது சக பணியாளர்கள் ஸ்வேதா மற்றும் சஞ்ஜீவ் ஆகியோர் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் வன்மத்துடன் தொந்தரவு செய்துள்ள சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி ஸ்வேதா சர்மா என்பவர் நாகர்கோயிலில் உள்ள எனது வீட்டுக்கு வந்து தன்னை இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.