வியாழன், 22 ஜூன், 2017

GST வரி.. மத்திய அரசை நோக்கி பணம் ஆறாக ஓடும் .. தமிழ்நாட்டுக்கு திருவோடுதான்

Literacy percentage and HDI have pushed Digital India in Tamilnadu to more extend than other states. TN
also have 2nd most number of internet users in India.
Damodaran : மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குகிறது...
அது எப்படி இருக்கு தெரியுமா ?
ஒரு கொள்ளைக்காரன் கொடுமைக்காரன் பிள்ளைகளை பிடிச்சிக்கிட்டுப்போயி ...அந்த குழந்தைகளை...கண்ணை பிடுங்கி கைய ஒடச்சு காலை ஒடச்சு ஊனமாக்கி பிச்சை எடுக்கவைப்பான்.
அவர்கள் பிச்சை எடுத்து கொண்டு வந்த காசில்....அந்த பிள்ளைகளுக்கு இரண்டு இட்லி வாங்கி கொடுத்து விட்டு மிச்ச காசில் அவன் சுகபோகமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வான் ...
ஆனால் அந்த குழந்தைகளை அவன்தான் கருணையோடு சோறு போட்டு வளர்ப்பதாக வெளியில் சொல்வான்

அதே கதைதான்....இங்கும் மாநில அரசுகளிடம் வாரியாக பறித்துக்கொண்டு போகிற பணத்தில் இருபது சதம் கூட மாநில அரசுகளுக்கு கொடுப்பதில்லை.
மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் தான் மாநில அரசுகள் வாழ்கின்றன என்ற அவப்பெயர் வேறு...
வானதி சீனிவாசன் வெங்காய நாயுடு கேலி நக்கல் பேசுகிறார்கள்...
மக்கள் ஊமையாக இருக்கும் வரை அவர்கள் காட்டில் நல்ல மழைதான்.
GST வரியால்...தமிழ்நாட்டின் வரி வருவாய் பாதியாக குறையும்...
அத்தியாவசிய பொருள்கள் கூட முப்பது சதம் விலை உயரும்
மத்திய அரசு கையில் பணம் ஆறாக ஓடும்.

பிரிட்டிஷ் காரன் ஆண்டபோது கூட மக்களிடம் கொஞ்சமாவது கருணை காட்டினான்.சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டான்...
ஆனால் இன்று மோடி அரசு மக்களை வாட்டி வதை சர்வாதிகார ஆட்சி காட்டு தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது....
அவர்களை யார் தட்டிக்கேட்க முடியும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக