வெள்ளி, 23 ஜூன், 2017

3 அதிமுக எம் எல் ஏக்கள் ஸ்டாலினை சந்தித்தனர் .. கருணாஸ்,அன்சாரி,தனியரசு ...

அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ், தனியரசு ஆகியோருடன் தமிமுன் அன்சாரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையின் அவையிலேயே வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பகிர்ந்துகொண்ட தமிமுன் அன்சாரி, 14 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசினேன். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

அரசியல் வேறுபாடு இல்லாமல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அந்த அடிப்படையில் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோருடன் அவையில் அனைவரும் இருக்குபோது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தோம். ஸ்டாலின் சப்போர்ட் செய்வதாக கூறினார்.
சபாநாயகரிடமும் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி மனு அளித்துள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்கும்போது, அதிமுக கூட்டணியில் உள்ள நீங்கள் ஆதரவு கிடையாது என கூற காரணம் என்ன?
ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக் கூடியவர் சகிப்புத்தன்மை, பரந்துபட்ட மனம், ஜனநாயக பார்வை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த அடிப்படையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாரை நாங்கள் ஆதரிக்கிறோம்.
சபாநாயகராக இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியவர். அதிமுக பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதுஒரு தவறான முடிவாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார். -வே.ராஜவேல்
நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக