சனி, 24 ஜூன், 2017

டயனா மரணம் ஒரு ஆணவ கொலை / கௌரவ கொலை !

stanley.rajan. இங்கிலாந்து இளவரசி டயானவினை நாங்கள் தான் கொன்றோம்,
நாட்டுக்காகவும் அரச குடும்பத்திற்காகவும் கொன்றோம் ; பிரிட்டன் உளவுதுறை தலைவர்
டயானா இறந்து கிட்டதட்ட 20 வருடம் ஆகின்றது, உலக மக்களிடம் பெரும் அபிமானம் பெற்றிருந்த டயானா, இங்கிலாந்து மக்களாலும் நிரம்ப நேசிக்கபட்டார். அவரது விபத்து ஆரம்பம் முதலே சர்ச்சை, இப்பொழுது உளவுதுறை தலைவரே அரச குடும்பத்திற்காக கொன்றதாக‌ ஒப்புகொண்டிருக்கின்றார், ஆக டயானா கொல்லபட்டிருக்கின்றார் எவ்வளவு பெரும் அபிமானம் பெற்றவர் டயானா? ஆனால் எங்காவது இந்த விஷயம் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கின்றதா என்றால் இல்லை
பிரிட்டனிலும் அறவே இல்லை, ஏன்?
பிரிட்டானியருக்கு டயானா பிடிக்கும், ஆனால் அரச குடும்பத்தின் மீதான மரியாதை அதனை விட அதிகம்
டயானா தேவசேனைதான், ஆனால் ராணி எலிசபெத் சிவகாமி தேவி, அந்த ராஜ குடும்பத்தின் மீதான மக்கள் அபிமானம் அப்படி
எப்படியோ பிரிட்டனின் இளவரசி ஒரு எகிப்து இஸ்லாமியனை திருமணம் செய்வதை விட செத்துபோகலாம் என கொல்லபட்டிருக்கின்றார்
கவுரவ கொலை உலகில் எல்லா இடங்களிலும் நடக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக