வெள்ளி, 23 ஜூன், 2017

NASA : தமிழக மாணவனின் உலகின் எடை குறைந்த செயற்கைகோளை நாசா அனுப்பியது ... இந்தியாவில் யாருக்குமே தெரியாது!

Vinayaga Murugan ரிஃபாத் ஷரூக் ( Rifath Shaarook ) என்ற தமிழக மாணவர்
உருவாக்கிய உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் நாசா அமைப்பின் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட தகவல் எந்த வடநாட்டு செய்தி ஊடகங்களிலாவது முதன்மை செய்தியாக வந்துள்ளதா? இந்த கேடுகெட்ட அரசின் , அதன் கைப்பாவையாக செயல்படும் ஊடகங்களின் கள்ளமவுனம் எதை காட்டுகிறது? இஸ்லாமியராக இல்லாமல் இவர் ஒரு பிராமணராக பிறந்திருந்தால் இவரை நாடே கொண்டாடியிருக்கும். இந்தியாவின் முதல் சுதந்திரப்போரை தொடங்கிவைத்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள் என்று பல கலை,கலாச்சார நவீனங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மகத்தானது. இப்போதும் ஓர் இஸ்லாமிய பெயர் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளது. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எண்ணற்ற பிராமணர்கள் அமெரிக்கா சென்றார்கள். அடுத்த பத்தாண்டுகளில் கல்விகற்ற மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் பின்னாலேயே அங்கு சென்றார்கள். இப்போதெல்லாம் அங்கு பிராமணர்களுக்கும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும்தான் கடும்போட்டி. திறமைக்கோ, அறிவுக்கோ பிறப்போ,குலமோ ஒரு காரணம் இல்லை. எந்த ஜாதியில் பிறந்தவனும் அறிவில், திறமையில் ஜொலிக்கலாம். இதை பிராமணர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ அமெரிக்கர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.


இப்போது வெளிநாட்டுக்கு சென்ற பிராமணர்கள் பலருக்கும் அங்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் இந்தியாவில் ஒற்றைக்கலாச்சாரம் ஒன்றை கொண்டுவந்து தங்கள் இருப்பை பலமாக நிறுவ முயற்சி செய்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சமீபமாக இங்கு நடக்கும் எல்லா தாக்குதல்களும்.

நான் ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். இன்னும் முப்பதாண்டுகள் ஆனாலும் இந்தியா முன்னேறாது. முன்னேறவும் விடமாட்டார்கள். ஓரளவு வாய்ப்பும், கல்வியும் இருந்தால் நீங்கள் எல்லாரும் தயவுசெய்து உங்கள் திறமையை மதிக்க தெரிந்த ஏதாவது வெளிநாட்டுக்கு சென்றுவிடுங்கள்.
வாழ்த்துகள் பிரதர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக