வெள்ளி, 23 ஜூன், 2017

பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம் பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச விண்கல் தினம் வரும் ஜூம் 30-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டனிலுள்ள பெல்ஃபாஸ்ட் பல்கலைகழகத்தின் ஆலன் ஃபிட்ஸ்சிம்மன்ஸ் கூறும்போது, "விண்கல் பூமியை தாக்குமா என்ற கேள்வியைவிட இது எப்போது நடக்கப் போகிறது என்ற கேள்வி மட்டுமே தற்போது உள்ளது. எப்போது அந்த விண்கல் பூமியை தாக்கும் என்று கூற இயலாது. ஆனால் நிச்சயமாக பூமியை அந்த விண்கல் தாக்கவுள்ளது.
தற்போது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பூமிக்கு அருகிலுள்ள விண்கற்களை கண்டறிவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த விண்கற்கள் நம்மைத் தாக்கும் முன் அவற்றின் அச்சுறுத்தலை நாம் அறிந்து கொள்வது முக்கியம்.
விஞ்ஞானிகள் தினமும் பூமிக்கு அருகே உள்ள விண்கற்களை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலனவை ஆபத்தானவை அல்ல. சில நேரம் ஆபத்தான விண்கற்களும் பூமியை நோக்கி வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவற்றை பற்றி தெரிந்து கொண்டால்தான் நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க முடியும்" என்றார்.tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக