வெள்ளி, 23 ஜூன், 2017

எம்ஜி... யார் ? எமெர்ஜென்சி மிசா சட்டத்தை கட்சி பொதுக்குழுவில் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே இந்திய தலைவர்

மிசா (எமெர்ஜென்சி) சட்டத்தை ஆதரித்து கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் போட்ட ஒரே வீராதிவீரர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் மட்டும்தான். இந்திராகாந்தி புலிகளுக்கு பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தவரைக்கும் அதே புலிகளுக்கு தண்ணி வைத்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுள்ள ராஜீவ் வந்ததும் அமெரிக்க ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்தசாரதிக்கு புலிகளை திட்டி பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர். பாஜகவின் கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் தான் ஜெயலலிதா. இன்று அந்த பாரம்பரியம் அதிமுகவில் தொடர்கிறது.
என்ன ஜெ நீட் போன்ற தமிழகத்தில் அவர் செல்வாக்கை பாதிக்கும் விஷயங்களிலாவது கொஞ்சம் இறுக்கமாக இருந்தார். இப்போதிருக்கும் அடிமைகள் ஒட்டுமொத்தமாக படுத்தே விட்டார்கள்.

மற்றபடி அதிமுக என்பதே டெல்லி முதலாளிகளால் திமுகவை காலி செய்ய ஆரம்பிக்க வைக்கப்பட்டதுதான். ஆனால் அந்தக் கணக்கு தப்பாகப் போய் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது என்பதால் அதிமுக எனும் அடியாள் இங்கு முதலாளி ஆகிவிட்டார். மற்றபடி அதிமுக தலைமை யார் மாறினாலும் டெல்லியிடம் இருக்கும் பழைய பயமும், விசுவாசமும் அப்படியேதான் இருக்கும்.  நன்றி கிளிமூக்கு அரக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக