வெள்ளி, 23 ஜூன், 2017

சசிகலாவிடம் தம்பிதுரையை தூதுவிட்ட பாஜக ... விரைவில் ரிலீஸ்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக >தனது வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை அறிவித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவை கேட்டு வருகிறது பாஜக.இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதாலும், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீது வழக்குகள் உள்ளதாலும் அவர்களை சென்று சந்தித்து ஆதரவு கேட்டால் தேவையில்லாத கருத்துக்கள் எழும் என்பதால் பாஜக சார்பில் அதிமுக மக்களவை தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் அதிமுகவின் ஆதரவை கோரினர்.இதனையடுத்து தனது கட்சி தலைமையை சந்திக்க நேற்று பெங்களூர் சிறைக்கு சென்றார் தம்பிதுரை. ஏற்கனவே சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரன் உள்ளிட்ட பலரும் காத்திருக்க சசிகலா முதலில் அழைத்தது தம்பிதுரையை தானாம்.சிறையில் சசிகலாவை பார்த்ததும் தம்பிதுரை கண் கலங்கிவிட்டாராம். தம்பிதுரை கண் கலங்குவதைப் பார்த்து சசிகலாவின் கண்களிலும் கண்ணீர் வந்ததாகவும் தகவல்கள் வருகிறது.


ஒருவழியாக கண்ணீரை கட்டுப்படுத்திய சசிகலா எப்போ வந்தீங்க? என முதலில் பேச ஆரம்பித்திருக்கிறார். அதன் பின்னர் தம்பிதுரையும் அவருக்கு பதில் அளித்துவிட்டு தான் பாஜக சார்பில் கொண்டு வந்த செய்தியை சசிகலாவிடம் கூறிவிட்டு அவர்கள் அளித்த விளக்கத்தையும் கூறியுள்ளாராம்.தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருக்கும் போதே சசிகலா முதல்வராக வர வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் தம்பிதுரை. கட்சியும், ஆட்சியும் ஒருவரது கையில் தான் இருக்க வேண்டும் எனவே சசிகலா முதல்வராக வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிவந்தார். 

தன்னுடைய மக்களவை உறுப்பினர் லெட்டர் பேடிலேயே சசிகலா முதல்வராக வேண்டும் என அறிக்கை வெளியிட்டு சசிகலா மீதான தனது பாசத்தை அளித்தெளித்த தம்பிதுரை தற்போது அவரை சிறையில் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டார்.வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக