சனி, 28 ஜனவரி, 2017

சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் ! "பத்மாவதி" படப்பிடிப்பில் சங்பரிவார் ?

பத்மாவதி' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.
பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

ஜல்லிகட்டு போராட்ட முறை ! காங்கிரஸ் பாஜகவுக்கு கடும் பீதியை கிளப்பியுள்ளது ... தமிழக தலைவர்களுக்கு டெல்லியில் முதல் முறையாக கிடைக்கும் மரியாதை!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலை வர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி கடந்த 17-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 23-ம் தேதி வரை 7 நாட்கள் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்ற னர். சென்னை மெரினா கடற் கரையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டனர். இதனால் ஒட்டு மொத்த தமிழகமே ஸ்தம்பித்தது. ஆங்கிலம், இந்தி மட்டுமல் லாது நாடு முழுவதும் மாநில மொழி தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்ட காட்சிகள் இடைவிடாது ஒளிபரப்பப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எப்போதும் தமிழகத்தை பெரிதாக கண்டுகொள்ளாத பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்தப் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?


ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்கிறார் தோழர் ராஜு. vinavu

மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு?


புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. வாபஸ் நடவடிக்கை: இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: 'கறுப்புப் பணத்தைஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. சிக்கல்: இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.  ஒரு திட்டம்..., நூறு அறிவிப்புகள். அங்க சுற்றி, இங்க சுற்றி கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்தாகி விட்டது. இதை மக்களை வாட்டி வதைக்காமலே செய்திருக்க முடியுமே. சரிங்க. பிடிபட்ட கருப்புப் பணம், கள்ளப்பணம், கணக்கில் வராத பணம் எவ்வளவு என ஏன் இவ்வளவு நான் ஆகியும் தெளிவா சொல்ல முடியலை...? ஆக மொத்தம் காங்கிரஸ்காரன் அரசியல்ல காசு பார்த்தான்னு சொல்லிகிட்டே இவங்க காசுல அரசியல் பண்ணிட்டாங்க. அம்பது நாள்ல நிலைமை சரியாகும்ன்னு சொல்லிகிட்டே கிட்டத்தட்ட எல்லா வணிகமும் படுக்கற அளவுக்கு நிலைமையை வெற்றிகரமா மோசமாக்கிட்டோம். ஜெய்ஹிந்த் கூவுங்கோ எல்லோருமே சேர்ந்து

பெண்களிடம் படுமோசமாக நடந்து கொண்ட காவலர்கள் .. பல சட்டப் பிரிவுகளில் மோசமான குற்றங்கள்

வ.உ.சி.மைதானத்திற்கு காலை 7.45-க்கே வந்திறங்கினார் சிட்டி கமிஷனர் அமல்ராஜ். மாணவர்கள் கலையாததால், அவர் செல்ஃபோனில் கொடுத்த டைரக்ஷன்படி, வெறியுடன் பாய்ந்தது போலீஸ். மைதானத்தில் இருக்கும் மாணவர்களின் மண்டை உடையும் தகவல் கேட்டு, அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் குதித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த மாநகர துணை கமிஷனர் லட்சுமி தலைமையிலான காக்கிகள் படை, லத்தியால் லாடம் கட்டி, மாணவர்களை கல்லூரிக்குள்ளேயே விரட்டி, வெளிக்கேட்டைப் பூட்டிவிட்டது. வ.உ.சி. மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள், காந்திபுரம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.ஐ.யின் ஆறுமுகமும் விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் குதிக்க, போலீசின் வெறி அதிகமானது... பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை.

களத்தில் மனித உரிமை ஆணையம்! வசமாக சிக்கி கொண்ட காக்கியும் காவியும்!

முன்னாள் டி.ஜி.பியும் ஜெ. ஆட்சியில் ஆலோசகராக இருந்தவரும் மாநிலத் தகவல் உரிமை ஆணையருமான ராமானுஜத்தின் அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, முதல்வர் மாறினாலும் போலீஸ் இலாகாவைக் கட்டுப்படுத்துவது ராமானுஜம் தான். இதனை ஷீலாபாலகிருஷ்ணன், வெங்கட் ரமணன் மூலமாக செயல்படுத்துகிறார். உளவுத் துறையிலும் ராமானுஜம் ராஜ்ஜியம்தான். அமைதியாக நடந்த போராட்டத்தின் இறுதி நாள் மிகக்கொடூரமாக முடிந்ததற்கு ராமானுஜத்தின் ஆலோசனைகளும் காரணம் என்ற கோபம் டிபார்ட்மெண்ட்டிலேயே இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் மனித உரிமை ஆணையம் மெரினா தாக்குதல் தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது
அமைதிப் பூங்காவை போர்க்களமாக்கி மாபெரும் மக்கள் போராட்டத்தை ரத்தச் சகதியாக்கியுள்ளது தமிழக காவல்துறை. மெரினாவில் கூடிய இளைஞர்களை அப்புறப்படுத்த முதல்நாள் முதலே போலீஸ் எடுத்த முயற்சிகளை கடந்த இதழிலேயே விளக்கியிருந்தோம். ஜனவரி 17-ந் தேதி நினைத்ததை, 23-ந் தேதி நிறைவேற்றியது காவல்துறை.அதிகாலை ஆட்டம் ஆரம்பம்
23-ம் தேதி அதிகாலை சரியாக மூன்று மணி ஐம்பது நிமிடத்திற்கு மெரினாவில் போராட்டம் நடந்த 2 கி.மீ. சுற்றளவில் சுமார் 7000 போலீசார் திடீரென வந்துசேர்ந்தார்கள். போலீசார் தங்களை நெருங்கி வருவதை கண்டார்கள். "காலை வருகிறேன் என' முதல் நாள் பின்னிரவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்ட தங்களது தோழர்களுக்கு, "உடனே மெரினாவுக்கு வாருங்கள்' என மெசேஜ்கள் அனுப்பினர். அவசரமாகப் புறப்பட்டு வந்த போராட்டக்காரர்களைத் தடுக்கும் வகையில், மெரினாவிற்கு வரும் சாலைகள் எல்லாம் போலீசாரின் தடுப்பு அரண்களால் மறிக்கப்பட்டிருந்தன.
இதுவரை போலீசாரின் ஒத்துழைப்போடு ஒரு திருவிழா போல ஒருவாரம் நடந்த போராட்டத்தை நசுக்க முடிவு செய்துவிட்டது தமிழக அரசு''. ஹிப் ஹாப் தமிழா சேனாதிபதி ராஜசேகர் ஆகியோர் உளவுத்துறை வேலையால் அரசியல் தொடர்புள்ள நடிகர்கள் மூலம் உரிய முறையில் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல்வர் ஓ.பி. உட்பட தமிழக அமைச்சர்கள் தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றார்கள். ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடப்பதை நிரந்தரப்படுத்தும் சட்டம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நாம் தடைவிதித்தோம்.

போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியை விமர்சிப்பது தேச துரோகம்? நிர்மலா சீதாராமன் காவிரிக்காக கர்நாடகா பக்கம் நின்ற flashback பாருங்க!

சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இந்திய பிரதமர் மோடியை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.; இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களில் சிலர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு தேசத்தோட பிரதமருக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. சென்னை மாணவர்கள் போராட்டத்தில் சில தேசதுரோக சக்திகள் நுழைந்து கலவரமாக மாற்றியுள்ளது.

பன்னீர்செல்வமே உங்களை விமரிசிக்கவே கூடாதா? பாரதிராஜா

மெரினாவில் போராடுவதற்கு ரொம்ப வருசமா தடையிருக்கிறது.; அதற்கு முன்னால் பன்னீர் அரசு ஒன்றை தெளிவுபடுத்தனும். சென்றவாரம் நடந்த 7நாள் போராட்டத்திற்கு யார் எந்த அமைப்பு என்ன விசயத்திற்காக அனுமதி கேட்டார்கள். இதற்கு காவல்துறை அனுமதியளித்ததா இல்லையா. அனுமதியில்லையென்றால் அது சட்டமீறல்தானே. மெரினாவில் இதற்கு முன்னால் ஈழ பிரச்சினைக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக நம் தோழர்கள் மீது போலீஸ் வழக்கு தொடுத்துள்ளது. ஆக இந்த போராட்டத்துக்கு மட்டும் எப்படி 6நாள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.?  அதுவும் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தான் மெரினாவில் போராட வேண்டும் என்ற விதி ஏதும் உள்ளதா மற்றும் மோடி ஓபிஎஸ் ஆகியோரை எதிர்த்தும் தமிழ் தேசிய கருத்தியலை பேசக்கூடாது என்ற சட்டவிதி ஏதும் உள்ளதா.? ;இவைகளை கொஞ்சம் விளக்கவும் பன்னீர் அவர்களே…நன்றி பாரதிராஜா( டைரக்டர்)லைவ்டே

சசி தரூர் கைதாகலாம் ! மனைவி சுனந்தா மரணம் கொலை? சந்தேகம்? சிக்கியது ஆதாராம்!


முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், 2 முறை திருமணமாகி விவாக ரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010–ம் ஆண்டு, ஆகஸ்டு 22–ந்தேதி காதல் மணம் செய்தார். ஆனால், திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசிதரூர்–சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இருவரிடையே கலகங்கள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.< இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில்,   2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17–ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இதில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

வேளாசேரி ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகரையும் (டி டி ஆர்) அடித்து உள்ளே தள்ளிய போலீஸ் ..

போலீசின் அடிக்கு டிடிஆரும் தப்பவில்லை; ஜெயாவிடம் பரிசு, இப்போது சிறையில்! மெரினா போராட்டத்தை முடிப்பதற்காக போலீஸ் நடத்திய வன்முறைகளைத் தொடர்ந்து, திடீரென மின்ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் டி.டி.ஆர். ஆகப் பணியாற்றும் மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பிரேமானந்தன், ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிகாரிகள் வீட்டுக்குச் செல்லும்படி சொல்ல, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நடந்ததை நேரில் பார்த்த அவரின் தாய், கண்ணீருடன் விவரிக்கிறார். "போலீஸ்காரங்க கும்பலா எங்க ஏரியாக்குள்ள வந்தாங்க. தெருவில இருந்த வண்டிய எல்லாம் ஒடச்சுட்டு வந்தாங்க. அப்போதான் என்னோட பையன் வீட்டுக்கு வந்தான். வண்டிய போலீஸ்காரங்க அடிக்கப் போறாங்கனு தள்ளிப்போய் நிறுத்த... அவன அங்கவந்த போலீஸ்காரங்க முரட்டுத்தனமா அடிச்சாங்க.

கம்பளா எருது சவாரி தடை நீக்க கோரி மங்களூரில் பிரமாண்ட போராட்டம் Massive protest in Mangaluru against ban on Kambal


coastal Karnataka joined hands with the Dakshina Kannada-Udupi Kambala Samithi to form a human chain in protest against the ban on Kambala, the traditional buffalo slush track race, in Mangaluru on Friday.மங்களூரு: ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பளா எனப்படும் எருமை ரேஸ் நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரகணக்கான மாணவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டான கம்பளா எனப்படும் எருமை மாட்டு பந்தையம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் எருமை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கம்பளா போட்டி நடத்த தடைவிதித்து உத்தரவிட்டனர். பீட்டா தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சசிகலாவுக்கு மாநில புரோக்கர் வைகோவும் மத்திய புரோக்கர் சு சாமியும் கூடவே அள்ள அள்ள குறையாத கரன்சியும்..

சென்னை: தமிழர்களை 'பொறுக்கி' என விமர்சித்து வரும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிமுக விவகாரங்களில் அடக்கி வாசித்து வருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக விவகாரங்களில் அதிகம் தலையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என கூறப்பட்டது. அதேபோலத்தான் சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார்; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் ட்விட்டரில் போட்டு பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் எனவும் விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதே நேரத்தில் சசிகலா தரப்பு மீதான விமர்சனங்களை அவர் நிறுத்திவிட்டார். இதற்கு காரணமே சசிகலா தரப்பின் சமாதான முயற்சிதானாம்... ஜெயலலிதா புதைக்கப்பட்டபோது அதிமுகவுக்கு உரிமை கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டி கொடுத்தார். அப்போது அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சுப்பிரமணியன் சுவாமி சீடர்தான் இந்த சமாதான முயற்சிகளுக்கு துணை போனாராம்.

ஸ்டாலின் கடும் எச்சரிக்கை : மீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்!


மீனவ மக்கள் தாக்கப்பட காரணமானவர்களை தண்டிக்கவும், நிவாரணத் தொகை வழங்கவும், தீக்கிரையாக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை மீண்டும் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் திங்கள் கிழமையன்று மீனவர்களை ஒருங்கிணைத்து திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை காவல்துறையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்த காரணத்தினால், காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ள நடுக்குப்பம், அயோத்திகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். மேலும், அப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு சொந்தமான பொருட்களும், நடுகுப்பம் மீன் மார்க்கெட்டும் அடித்து உடைத்து, எரிக்கப்பட்டு இருந்ததை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு இருக்கிறோம். குறிப்பாக, நடுகுப்பம் மீனவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மீனவ மக்கள் எல்லாம் மிகுந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை: அமைச்சர்களோ, கலெக்டர்களோ ஆறுதல்கூட சொல்லவில்லை: பேரவையில் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில்27-01-2017 வெள்ளிக்கிழமை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: தற்கொலை செய்து மாண்ட விவசாயப் பெருங்குடி மக்களின் கிராமங்களுக்கு இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்களோ அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களோ ஒரு ஆறுதல் சொல்வதற்கு கூட செல்லவில்லை என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. அதை தான் இங்கு எங்களுடைய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, இறந்த விவசாயிகள் 17 பேர் என்று இங்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். தயவுகூர்ந்து அதையாவது வேகப்படுத்தி, விரைவுபடுத்தி அவர்களுக்கான நிவாரண உதவியை வழங்குவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அஞ்சலி சர்மா : ஜல்லிகட்டு தடை வழக்கை திரும்ப பெறமுடியாது


ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின்னர் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்ற சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, விலங்குகள் நல வாரியத்தின் வக்கீல் அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது, அதனால் அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்,

போயசின் லேடஸ்ட் பஜனை : சின்னம்மா முதல்வர் ஆகணும்! ... என்னை சீஎம் ஆக்கிடு நடராஜன் பஜனை


ஜெயலலிதா இறந்த அந்த இரவில்கூட லேசாக கண்ணை மூடியபடி உட்கார்ந்திருந்த சசிகலா, கடந்த புதன்கிழமை இரவு முழுமையாகத் தூங்கவில்லை. தூக்கம் வராமல் கார்டனில் இங்கும் அங்குமாக நடந்தபடியே இருந்தார் என்கிறார்கள்.’’
‘‘அவர் தூக்கத்தைப் பறித்தவர் யார்’’?
‘‘நடராஜன் தரப்பிலிருந்து சசிகலாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘இவ்வளவு சிக்கல் இருக்கும்போது நீங்கள் முதல்வராக ஆவது சரியாக இருக்காது. அதனால நடராஜனை முதல்வராக்கிடலாம்.’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு நடராஜனே சசிகலாவிடம் பேசினாராம். ‘சொத்துக்குவிப்பு வழக்குல என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரியாது. அதனால நீ முதல்வராக வேண்டாம். தீர்ப்பு எதுவும் தப்பா வந்தால் பதவி போயிடும். என்னை முதல்வராக்கிடு. எல்லா பிரச்னைகளையும் நான் பாத்துக்குறேன். சொத்துக்குவிப்பு வழக்குல தீர்ப்பும் சாதகமாக வர்ற மாதிரி பாத்துக்குறேன்’ என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார். சசிகலா எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அதனால்தான் அன்று இரவு முழுவதுமே தூங்கவே இல்லை என்று சொல்கிறார்கள்.

காவல்துறை :மெரினாவில் போராட்டம் நடத்த தடை... எல்லாம் பயமயம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. காவல் துறை அறிவிப்பு ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொழுது போக்கிற்காக மெரினாவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும். மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamalar

விரைவில் உள்ளாட்சி தேர்தல் .தேர்தல் ஆணையாளர் உயர்நீதி மன்றத்தில்! தெறிக்க விடலாமா?

சென்னை: வரும் ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் வரை தள்ளிப்போகும் என்பதை ஏற்க முடியாது என்றும் , இது தொடார்பான விசாரணையில் தேர்தல் ஆணையம் வரும் 31 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணையை தெரிவிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தினமலர்

பத்மவிருதுக்கு ஏன் சிபார்சு தேவை? பட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கேள்வி?

jwala_gutta6661எனக்கு ஏன் பத்ம விருது கிடைக்கவில்லை? இதற்கு நான் தகுதியற்றவளா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா.
குடிமக்களுக்கான தலைசிறந்த விருதாக பாரத ரத்னாவும் அதற்கு அடுத்த நிலை விருதுகளாக "பத்மவிபூஷண்', "பத்மபூஷண்', "பத்மஸ்ரீ' ஆகியவையும் விளங்குகின்றன. இதில் தலா ஏழு பத்மவிபூஷண், பத்மபூஷண், 75 பத்மஸ்ரீ விருதுகள் பெற தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. "வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரு பிரிவுகளாக மேற்கண்டவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் வழங்குவார்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறுமிகள் பெண்களுக்கு எச்சரிக்கை ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்களிடம் கவனமாக இருங்கள் .

உங்கள் பெயரோடு ஜி யும் சேர்த்து அழைப்பவர்களிடம் கவனமாக இருங்கள்
ஆளுநர் மாளிகையா ..அந்தபுரமா ... பிரம்மச்சாரியமா .. காம சாஸ்த்திரம்மா.. #RSS தந்த அற்புத முத்துக்கள் #eversex ஷண்முகநாதனா (or) #freesex ராதா ராஜனா .
பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை! ;
 மேகாலயா கவர்னர் சன்முகநாதன் பாலியல் புகாரை அடுத்து ராஜினாமா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிக மூத்த தலைவர், அதனின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். RSS அமைப்பில் உள்ள பிரச்சாரக்குகள் பலரைப் போல திருமணம் செய்துகொள்ளாதவர் என்ற செய்தி வந்திருக்கிறது!இவரைப் போன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றது!குடும்பம் இருந்தால், அமைப்பில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை என்று சொல்லப்பட்டாலும், சாமியார்கள் பாணியில் ரகசியமாக சல்லாபத்தில் ஈடுபட வசதியாக அவர்கள் பிரம்மச்சரிய வாழ்க்கையை வாழ்கின்றனர். பிரச்சாரத்திற்கு போகிற, வருகிற இடத்தில் போக்குவரத்தை வைத்துக்கொள்வார்கள்!இருப்பவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு பல வீடு!
பேரில் மட்டும்தான் ஸ்வயம். ஆனால் கூடித்தான் கும்மாளம் போடுகிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவராக இருந்த வீர் சாவர்க்கர் ஒரு ஒரின சேர்க்கையாளர் என சொல்லப்படுவதுண்டு!

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பசுவதை தடுப்பு மனு தள்ளுபடி .. அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு மனுவை உச்சநீதிமன்றம்///

Cant ban cow slaughter in every state:SC டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் பசு வதையை தடை செய்ய கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் மனுதாரர் கூறுகையில், "பசுவதைக்கு தடை உள்ள மாநிலங்களில் இருந்து மாடுகள், கால்நடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு தடை செய்யப்படாத மாநிலங்களில் வைத்து கொல்லப்படுகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்" என கூறினார்.

ஜல்லிகட்டு போராட்டம் கண்ணை திறந்துள்ளது .. யார் யார் எவர் எவர் ?


நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள். கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதே போலத்தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும் வருகிறார்கள். எப்படி வரலாறு தொண்டைமானை காறி உமிழ்கிறதோ அதே போல இவர்களையும் வரலாறு காறி உமிழும். போராட்டக்காரர்கள் துரோகிகளுக்கு தந்த செருப்படியைப் பாருங்கள் பகிருங்கள். வினவு

ஜெயலலிதாவை வரலாறு விடுதலை செய்யாது? பெண்ணரசியா? இம்சை அரசியா? நடுநிலை வரலாறுதான் இன்றைய தேவை!

ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது. ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்) உண்மையை, நியாயத்தைக் கொண்டு ஒரு விசயத்தை நிரூபிக்க முடியாத போது, நம்பிக்கை என்ற அம்சத்தை முன்னிறுத்தி, அதனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றுவது மதவாதிகளின் குயுக்தி. அதுபோல, ஜெயாவின் அரசியல் வாழ்வை, நடவடிக்கைகளைப் பெண் என்ற பாதுகாப்பான அம்சத்தை முன்னிறுத்தி ஆராதிக்கும் போக்கு தமிழகத்தின் பொதுவெளியில் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்படுகிறது.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார். ஆனால், ஜெயலலிதாவோ தன்மான உணர்ச்சியையும் அறிவு உணர்ச்சியையும் தமிழகத்திலிருந்தே துடைத்தெறிந்துவிட வேண்டும் என்பதை மூர்க்கமான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டவர். தன் காலில் விழுபவனை, தன்னிடம் கையேந்தி நிற்பவனை ரசித்து மகிழ்ந்த வக்கிர புத்தி கொண்ட அவர், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடங்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டு வரை சுமத்திச் சிறையில் தள்ளிய சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்.

கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !

Vellaiyanல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து மெரினாவில் சுமார்  200 மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டமாக விரிவடைந்து, மக்கள் போராட்டமாக உருவெடுத்து தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. இது வெறும் காளைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல் காவிரி பிரச்சனை முதல் அமெரிக்க கோக் மற்றும் பெப்சி போன்ற உயிர்கொல்லி பானங்களை தடை செய்ய வேண்டும் என போராட்டத்தின் கோரிக்கைகள் விரிவடைந்தன. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் கோக், பெப்சியை தடை செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகளை எதிரொலித்தனர். அதன் விளைவாக தமிழகத்தின் மிக முக்கிய வணிகர் அமைப்புகள் இனி கோக், பெப்சியை விற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன. திரு. த.வெள்ளையன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை  ஜனவரி 26 முதலும், திரு விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரும் மார்ச் 1 ந்தேதி முதலும் கோக்,பெப்சியை விற்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பது கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனக்களுக்கும், அவற்றை இங்கே கொண்டு வந்து நிறுவிய மத்திய – மாநில அரசுகளுக்கும் விழுந்த செருப்படி.

போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் ! ஆர்ப்பாட்டம்.. மக்கள் அதிகாரம் அமைப்பு


PP Notice Slider
ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,
தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.
ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.

கம்பளா போராட்டம் .. வாட்டாள் நாகராஜ் : கம்பளா போட்டியில் எருமைகள் துன்புறுத்த படுவதிலை


நாடு முழுவதும் காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை சித்ரவதை செய்வதாக பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய மாணவர்கள் புரட்சி ஏற்பட்டது. இதேப்போன்று தற்போது கம்பளா என்ற எருமை மாடுகளை வைத்து சேற்றில் வீர விளையாட்டுகளை கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்படும். இந்த விளையாட்டுக்கும் பீட்டா அமைப்பு தடை வாங்கியது.
இது தொடர்பாக கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கம்பளா என்பது சேற்றில் எருமைகளை வைத்து விளையாடுவது அவ்வளவுதான் மற்றபடி சித்ரவதை எதுவும் நடைபெறுவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் : போராட்டத்தில் ஒசாமா படம் .. பன்னீரூ ஆர் ஆர் எஸ் ஆளாகிட்டார்டாய் .. சசியால இனி ஒண்ணும் பண்ண முடியாது!

போராட்டக்களத்தில் பின்லேடன் படத்தோடு இருந்ததற்கு ஆதாரம் கிடைத்து இருப்பதாக முதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டசபையிலேயே அறிவித்து இருக்கிறார். அந்தப் படம் இதுதான். இதில் உள்ள வாகன நம்பரை வைத்து ஆர்.டி.ஓ.விடம் பெற்ற தகவல்படி வாகன உரிமையாளர் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளர் ராஜி என்பது தெரிய வருகிறது. குழப்பம் விளைவித்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து கலவரம் விளைவிக்கும் நோக்குடன் இப்படி சுற்றித் திரிந்தது தெரிய வருகிறது. உரிய ஆதாரங்கள் முதல்வரின் தனிப் பிரிவில் குடுக்கப்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார் முதல்வர்? நடவடிக்கையா? மிக்சரா? முகநூல் பதிவு

போலீஸுக்கு நிவாரணமாம்... ஜோர்ஜ் என்கின்ற குட்கா மாமூல் சேட்டன் அறிவிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, சென்னை மெரினாவில் அறவழியில் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. ஆறு நாட்களாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளித்த காவலர்கள் இறுதியில் மக்கள் மீது தடியடி நடத்தினர்.
பெண்கள், கர்ப்பிணிகள், மாணவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்களை காவல் துறையினர் தூக்கிச்சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில், சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டுவது போன்ற வீடியோக்கள் வைரலாகின.

தமிழ்நாடு மாணவர்கள் வழியில் கர்நாடக மாணவர்கள்! போராட்டத்தில் குதித்தனர்!


கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிவபெருமானின் மறு அவதாரமாகக் கருதப்படும் கத்ரி மஞ்சுநாதாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும்வகையில், அறுவடைக் காலத்தில் விவசாயிகள் எருதுகளைப் பூட்டி சேறும், சகதியுமான நிலத்தில் ஓடவிடுவதுண்டு. இதில் வெற்றிபெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்படுவதுண்டு.
இந்த எருதுப் போட்டி, பாரம்பரிய விளையாட்டாக 'கம்பாலா' என மாறியது. இதில் ‘புக்கரே கம்பாலா’, ‘பலே கம்பாலா' என இரு வகையுண்டு. பலே கம்பாலா, 900 ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது. இதையடுத்து நடத்தி வந்த மற்றொரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பீட்டா மற்றும் விலங்கு நல அமைப்பினர் இதையெதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபோது, கம்பாலா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறை : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!


ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து, பதில் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிரந்தரச் சட்டம் கோரி சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றன. அமைதியான முறையில் நடைபெற்றுவந்த இந்தப் போராட்டம் இறுதி நாட்களில் கலவரமாக மாறியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் இந்தக் கலவரத்தில் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

எது தேசவிரோதம் ?அரசை விமர்சிப்பதை, கேள்வி கேட்பதை, காவல்துறையின் அத்துமீறலை – அராஜகத்தை தட்டிக்கேட்பது?

g-rமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 2017 ஜனவரி 26,27 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலையும் – பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதையும் – மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நாடு தழுவிய அளவிலும் – தமிழகத்திலும் போராடும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்று முத்திரைக் குத்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுகிறதா? சிபிஐ சந்தேகம்!

Mutharasanthetimestamil ; தமிழ்நாடு காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர் சோடிசாயி, துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் சென்னையில் கடந்த 25ம் தேதி பத்திரிக்கையர்களை சந்தித்து தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சியையும், ஆழமான ஐயப்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. அமைதியாக நடந்த போராட்டம் அமைதியாக முடிந்து விடாமல் வன்முறையைத் தோற்றுவித்த காவல்துறை, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து திசை திருப்பித் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மாணவர்கள் மீதான தடியடி ஏன்? ஸ்டாலின் கேள்விக்கு ஒ.பி.எஸ். பதில்.. வழக்கமான வழ வழ கொளகொள ..;

நக்கீரன் :சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது 23ஆம் தேதி போலீசார் தடியடி நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், 2009ம் ஆண்டில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பேசிய அவர், கடந்த 17ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைப்பெற்றது. 22ஆம் தேதியே போராட்டக்காரர்கள் விலகுவதாக தெரிவித்தார்கள்.

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விலியுறுத்தினர். தேச விரோத, சமூக விரோத கும்பல்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பினர். முல்லைப் பெரியாறு, தனித் தமிழ்நாடு என கோரிக்கை எழுந்தது. குடியரசு தினத்தை சீர்குலைக்க சமூக விரோத கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த போராட்டத்தின்போது குறைந்த பட்ச பலத்தை மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தினர் என்றார்.   மாணவர்கள்

ஜல்லிகட்டு அனைத்து வழக்குகளும் இம்மாதம் 31 தேதி விசாரிக்கப்படும் .. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 31ம் தேதி, விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம், கியூப்பா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால், அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் சண்முகநாதன் ஒரு ஆர் எஸ் எஸ் மன்மத ராஜன்

இளம்பெண்கள் கிளப் 11 விவகாரங்கள்... மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் அம்மாநில ராஜ்பவனை எப்படியெல்லாம் இளம்பெண்கள் கிளப்பாக மாற்றி வைத்திருந்தார் என பரபரப்பான கடிதத்தை ஆளுநர் மாளிகை ஊழியர்களே ஜனாதிபதி, பிரதமருக்கு பக்கம் பக்கமாக எழுதி By: Mathi Published: Friday, January 27, 2017, 10:14 [IST] Subscribe to Oneindia Tamil ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் சல்லாப லீலைகள் குறித்து பக்கம் பக்கமாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் சண்முகநாதனின் படுக்கை அறை வரை இளம்பெண்கள் சுதந்திரமாக சென்று வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு நீட் நுழைவு தேர்வுக்கு எதிரான சட்டம் !தமிழக அரசு முடிவு !

இவனுங்க தான் அனுமதி கொடுத்தானுங்க இப்ப இவனுங்களே எதிர்த்து சட்ட திருத்தமாம்... அதுக்கு அனுமதிக்காமலே இருந்திருக்கலாமே... எது எப்படியோ நீட் தேர்வுமுறை தடுத்து நிறுத்தப்பட்டால் சந்தோசம்! இனி இப்படித்தான் எல்லாமே? 

செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற காலக்கெடு நீட்டிப்பு! ரிசர்வ் வங்கி ஆலோசனை!

செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் மாதம் இறுதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு மேலும் ஒரு வாய்ப்பு தர ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
இதனால், அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியத நிலையில், காலக்கெடு விரைவாக முடிவடைந்தது. இதனையடுத்து, மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

நக்கீரன் கூறியது போலவே நடந்திருக்கிறது?

கடந்த இதழில், "அவசர சட்டத்திருத்தம் தயார் செய்து , அதற்கு மத்திய அரசின் முக்கிய துறைகளின் அனுமதியை பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த எந்தச் சிக்கலும் இனி எப்போதும் வராதபடிக்குத்தான் திருத்தம் செய்திருக்கிறோம். நீதிமன்றத் தடைகளை அது தாண்டுகிறதா என்பதைப் பொறுத்தே மத்திய அரசின் உண்மையான முகம் தெரியும்' என அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதாக எழுதியிருந் தோம். தமிழக அரசின் அவசர சட்ட திருத்தத்தின் முன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்ட வடிவம் பெற்றிருக்கிறது. நாம் எழுதியிருந்தது போலவே, ஜல்லிக்கட்டு என்பது மிருக வதையாகாது என விலக்கு அளிக் கப்பட்ட பட்டியலில் ஜல்லிக் கட்டை சேர்த்திருக்கிறது தமிழக அரசு.

ஜல்லிகட்டு வெற்றி .. பவுல் கேம் ஆடிய போலீஸ் மோடி ஆர் எஸ் எஸ் ...

ஜெ
யலலிதா செய்ய மறுத்த சட்ட நடவடிக்கையை மாணவர்களின் போராட்டம் காரணமாக டெல்லிக்கு விரைந்து சாதித்திருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். மத்திய அரசின் முழுமையான தயாரிப்பில் உரு   வான சட்டம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரப் பாதுகாப்பளிக்கும் என சட்ட வல்லுநர்கள் சொல்லும்படி சாதித்து வந்திருக்கிறார் முதல்வர். ஆனால்,  சட்டம் இயற்றியும் அதற்கான பெருமையைப் பெற முடியாமல் இருப்பதால் அதிருப்தியில் இருக்கிறார்.இதுகுறித்து உள்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்த போது, ""டெல்லி செல்வதற்கு முன்பு சசிகலாவை சந்தித்துவிட்டுச் செல்லு மாறு முதல்வர் பன்னீருக்கு கார்ட னிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. அதைப் புறக்கணித்துவிட்டும், பிரதமருடனான சந்திப்பின்போது தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க எம்.பி.க்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆலோசனையைக் கண்டுகொள்ளாமலும் ஓ.பி.எஸ். செயல்பட்டதில் கார்டனுக்கும் செம கடுப்பு.

மார்கண்டேய கட்ஜு : குடியரசு சுதந்திர தினங்கள் ஏன் கொண்டாடவேண்டும் ? இங்கு கொண்டாடுவதற்கு என்ன பெருமை இருக்கிறது?

What is there to celebrate about? has poverty been abolished in India? Has unemployment been abolished? No? Then what are the celebrations, parades and flag hoisting about?” he said. “I regard it as a cruel farce and an insult to my people to celebrate when over 75% of the 1.25 billion Indians are living in horrible poverty,” he wrote.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை எதற்காக கொண்டாட வேண்டும்? என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பதாவது:-
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாட என்ன காரணம் இருக்கிறது? இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? வேலையின்மை தீர்ந்து விட்டதா? நம் மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்கின்றார்களா, அவர்களுக்கு சுகாதாரம், சிறப்பான கல்வி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றதா?

திருநாவுக்கரசர் :தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம் .. ராகுல் வர்ற நேரம் இவரு காங்கிரசை விட்டு போயிடாம இருக்கணுமே?


உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு நீக்கம், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில் , 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் மூலம் பணத்தின் மதிப்பை மட்டுமல்ல, நாட்டின் மதிப்பையே பிரதமர் மோடி இழக்கச்செய்துள்ளார். அவரது தவறான நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி 1.5 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் தேக்கநிலை ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. அனைத்துத் தரப்புமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவி வேஷ்டியோடு வந்தவரை அனுமதிக்க மறுத்த கேரளா ஸ்டார் ஹோட்டல்


கேரளாவில் காவி வேஷ்டியை அணிந்து வந்தவரை ஆட்டோ டிரைவர் என்று நினைத்து உணவகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரி என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்குமுன் தனது நண்பர்களுடன் மடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது, அவர்கள் காவி வேஷ்டி அணிந்து சென்றனர். பின்னர், அருகிலிருந்த 'வொயிட் டேமெர்' என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்றுள்ளனர்.
அங்கு, ஹரி காவி வேஷ்டி அணிந்திருந்ததால் ஆட்டோ டிரைவர் என்று நினைத்து அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இருப்பினும், ஹரி ஹோட்டலின் உரிமையாளருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவரும் அதே பதிலை அளித்துள்ளார்.

பொன்னார்: "மெரீனா வன்முறைக்கு திமுக தூண்டுதல்" போன்னாருக்கு திமுக மீது காழ்ப்புணர்ச்சி : திருமாவளவன்


மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை நடந்ததற்கு திமுக தூண்டுதல் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது, அவருக்கு திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அப்படி கூறலாம். என திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:-
குடியரசு தினத்துக்கான ஒத்திகை நடத்த, மெரினா கடற்கரைச் சாலை தேவை என்பதற்காகவே, திட்டமிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டத்தை கலைத்துள்ளது காவல்துறை. முதலில் மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை துவங்கியபோது, அரசு அவர்களை அனுமதித்து விட்டு, அரசு விரும்பாத போது விரட்டி அடித்து உள்ளது. மீண்டும் மாணவர்கள் எந்த காரணத்துக்காகவும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காகாவே இந்த அடக்குமுறை தாக்குதல் திட்டமிட்டு நடந்துள்ளது.  (பொன்னரின் மரமண்டைக்கு : திமுக தற்போது அந்த அளவு  துடிப்புள்ள கட்சியா என்னா? இப்போதெல்லாம்  தளபதியிடம் கேட்டுதான் யாரும் மூச்சு விட முடியும் .சுயமாக அங்கு ஒரு தூசி துரும்பு கூட அசையாது.  அது இப்ப ஒரு அழகான பெர்மனன்ட் பிக்சர் பட் நாட் எ மூவி . இப்படியே எல்லாம் சென்றலைஸ்  பண்ணி பண்ணி ஒரு வழியயிடும்ல.  அம்மாவின் சென்றலைஸ் அரசியலை அப்படியே நம்ப தம்பியும்  பாலோ பண்றாருல்ல?  ) 

கருப்பு பூனைப் படையின் அணிவகுப்பு! இவிங்கலும் அப்படியே தீவிரவாதிங்க மாதிரியே உடுத்திக்கிராய்ங்க?


புதுடெல்லி ராஜபாதையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக கருப்பு பூனைப் படைப்பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர்.
நாட்டின் 68-வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், அபுதாபி இளவரசரும் குதிரைப் படை அணிவகுக்க ஒரே காரில் விழா மேடைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் பீரங்கி குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான சிறப்பு விருதுகளை வழங்கினார். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருது, அசாமைச் சேர்ந்த ஹவில்தார் ஹங்பான் தாதாவுக்கு வழங்கப்பட்டது. விருதினை அவரது மனைவி சேசன் லோவாங் தாதாவிடம், குடியரசு தலைவர் வழங்கினார்.

தமிழக காக்கிச் சட்டைகளுக்கு காவி சட்டையே பொருத்தம்? ஏவல் துறை பக்கா ரவுடி துறையாகிவிட்டது

amalraj-715x400
ஏ. பாக்கியம் ஏ. பாக்கியம்ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். மேலும், ஏதாவது மெசேஜ் அனுப்புவது என்றால் அவரைக் கேட்டுக் கொண்டு, அவரது அனுமதி பெற்றுவிட்டுத்தான் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தொனியிலும் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்று குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இந்த போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்கள் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளத்திலும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமல்ராஜ் மற்றும் ஜார்ஜின் கருத்துக்கள் அவர்களைப் பொருத்தவரை நியாயமானதுதான்.

ஜல்லிகட்டுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது

புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் விதமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால், அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி ஷர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. விலங்குகள் நல வாரியம் சார்பில், அது போன்று ஏதேனும் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக வாபஸ் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டிலோ அல்லது நாட்டின் எந்த கோர்ட்டிலாவது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வழக்கு தொடர வேண்டும் என்றால், வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்றும் வழக்கறிஞருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாலைமலர்

உபி சட்டசபை தேர்தல் .. காங்கிரஸ் சமாஜவாடி (அகிலேஷ்) கூட்டணி .105 தொகுதிகள் காங்கிரசுக்கு, 298 சமாஜவாதி ...


லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ்,
ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 11-ந் தேதி நடைபெறுகிறது. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் பிளவு உருவானது. இதை ஈடு செய்ய காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இதையடுத்து இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 298 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், 105 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.