சனி, 28 ஜனவரி, 2017

கம்பளா எருது சவாரி தடை நீக்க கோரி மங்களூரில் பிரமாண்ட போராட்டம் Massive protest in Mangaluru against ban on Kambal


coastal Karnataka joined hands with the Dakshina Kannada-Udupi Kambala Samithi to form a human chain in protest against the ban on Kambala, the traditional buffalo slush track race, in Mangaluru on Friday.மங்களூரு: ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பளா எனப்படும் எருமை ரேஸ் நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரகணக்கான மாணவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டான கம்பளா எனப்படும் எருமை மாட்டு பந்தையம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் எருமை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கம்பளா போட்டி நடத்த தடைவிதித்து உத்தரவிட்டனர். பீட்டா தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


.இந்நிலையில் மங்களூருவில் உள்ள பல்ேவறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி ஜோதி சர்க்கிளில் இருந்து கம்பனகட்டா பகுதி வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பளாவை நடத்த கோரியும், பீட்டாவை தடைசெய்ய கோரி கோஷங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர். ஜல்லிக் கட்டு போராட்டத்தில் தமிழக மாணவர்கள் கோஷமிட்டதை போன்றே, ‘‘வேண்டும், வேண்டும் கம்பளா வேண்டும். தடை செய், தடை செய் பீட்டாவை தடை செய்’’ என கோஷ்மிட்டனர்.

தமிழக வழியை கர்நாடக மாணவர்களும் பின்பற்ற தொடங்கியது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கம்பளாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி பிப்ரவரி 18ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

சட்ட திருத்தம் கொண்டு வர சித்தராமையா முடிவு

இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடைவிதித்தது. ஆனால், இந்த தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் செய்தது. இதேபோல, கர்நாடகாவில் கம்பளா விளையாட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்த தடைக்கு எதிராக பிப்ரவரி 6ம் தேதி நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டம் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டப்பேரவையில் அனுமதி பெற்றபின்னர், கம்பளாவுக்கு எதிராக சட்டம் முழுவதும் ரத்தாகிவிடும். எனவே, கம்பளா விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதை தவிர்க்கவேண்டும்’’ என்றார்  tamilthehindu
Residents of coastal Karnataka joined hands with the Dakshina Kannada-Udupi Kambala Samithi to form a human chain in protest against the ban on Kambala, the traditional buffalo slush track race, in Mangaluru on Friday. Various leaders who spoke on the occasion made a clear attempt to distinguish between Kambala and Jallikattu, stating that not a single death, either of animal or human being, had occurred during the conduct of Kambala. Kambala does not involve violence and animal rights activists should have understood this before moving the court, Dakshina Kannada MP Nalin Kumar said. Hundreds of people cutting across political parties, caste and religion gathered in large numbers on the main roads of the city to form the human chain. Responding to the call by the All College Students Union, students left their schools and colleges to participate in the protest. Holding placards in support of Kambala, they chanted “We want Kambala.” Kambala Samithi president Barkuru Shantharama Shetty said Kambala has been the traditional sport of coastal Karnataka and had a history of over one thousand years. When the Tamil Nadu government can legalise Jallikattu, why can’t the Karnataka government take a similar action, he asked. Samith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக