சனி, 28 ஜனவரி, 2017

சசிகலாவுக்கு மாநில புரோக்கர் வைகோவும் மத்திய புரோக்கர் சு சாமியும் கூடவே அள்ள அள்ள குறையாத கரன்சியும்..

சென்னை: தமிழர்களை 'பொறுக்கி' என விமர்சித்து வரும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிமுக விவகாரங்களில் அடக்கி வாசித்து வருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக விவகாரங்களில் அதிகம் தலையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என கூறப்பட்டது. அதேபோலத்தான் சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார்; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் ட்விட்டரில் போட்டு பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் எனவும் விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதே நேரத்தில் சசிகலா தரப்பு மீதான விமர்சனங்களை அவர் நிறுத்திவிட்டார். இதற்கு காரணமே சசிகலா தரப்பின் சமாதான முயற்சிதானாம்... ஜெயலலிதா புதைக்கப்பட்டபோது அதிமுகவுக்கு உரிமை கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டி கொடுத்தார். அப்போது அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சுப்பிரமணியன் சுவாமி சீடர்தான் இந்த சமாதான முயற்சிகளுக்கு துணை போனாராம்.
சுப்பிரமணியன் சுவாமியின் ஆசீர்வாதம் பெற்ற அந்த சீடரை சசிகலா நேரில் சந்தித்து 'அடக்கி வாசித்து' ஆதரவு தர சொல்லுங்கள்... குடைச்சல் தர வேண்டாம் என கூறியிருக்கிறார். ஆசீர்வாதம் பெற்ற சீடரின் யோசனையை ஏற்றுக் கொண்டுதான் சுப்பிரமணியன் சுவாமி அதிமுக விவகாரத்தில் அமைதியாக அடக்கி வாசித்து வருகிறாராம். தமிலோனிந்திய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக