வெள்ளி, 27 ஜனவரி, 2017

பசுவதை தடுப்பு மனு தள்ளுபடி .. அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு மனுவை உச்சநீதிமன்றம்///

Cant ban cow slaughter in every state:SC டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் பசு வதையை தடை செய்ய கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் மனுதாரர் கூறுகையில், "பசுவதைக்கு தடை உள்ள மாநிலங்களில் இருந்து மாடுகள், கால்நடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு தடை செய்யப்படாத மாநிலங்களில் வைத்து கொல்லப்படுகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்" என கூறினார்.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாடுகளை கடத்துவதற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு, அனைத்து மாநிலங்களையும், பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்தது. டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் பசு வதையை தடை செய்ய கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக