சனி, 28 ஜனவரி, 2017

அஞ்சலி சர்மா : ஜல்லிகட்டு தடை வழக்கை திரும்ப பெறமுடியாது


ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின்னர் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்ற சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, விலங்குகள் நல வாரியத்தின் வக்கீல் அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது, அதனால் அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்,
அஞ்சலி தாக்கல் செய்த மனு உரிய அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்டது என தெரியவந்தது. இதனால், விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் மனுவை உடனடியாக வாபஸ் பெறக்கோரி அஞ்சலிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இதுகுறித்து, பேசிய அஞ்சலி சர்மா, தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை, இது 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனு தான். மேலும், வாரியத்தின் அனுமதியில்லாமல் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால்,வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. ஆகையால், அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என அஞ்சலி சர்மா,   தெரிவித்ததாக கூறப்படுகிறது. லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக