வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு வெற்றி .. பவுல் கேம் ஆடிய போலீஸ் மோடி ஆர் எஸ் எஸ் ...

ஜெ
யலலிதா செய்ய மறுத்த சட்ட நடவடிக்கையை மாணவர்களின் போராட்டம் காரணமாக டெல்லிக்கு விரைந்து சாதித்திருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். மத்திய அரசின் முழுமையான தயாரிப்பில் உரு   வான சட்டம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரப் பாதுகாப்பளிக்கும் என சட்ட வல்லுநர்கள் சொல்லும்படி சாதித்து வந்திருக்கிறார் முதல்வர். ஆனால்,  சட்டம் இயற்றியும் அதற்கான பெருமையைப் பெற முடியாமல் இருப்பதால் அதிருப்தியில் இருக்கிறார்.இதுகுறித்து உள்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்த போது, ""டெல்லி செல்வதற்கு முன்பு சசிகலாவை சந்தித்துவிட்டுச் செல்லு மாறு முதல்வர் பன்னீருக்கு கார்ட னிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. அதைப் புறக்கணித்துவிட்டும், பிரதமருடனான சந்திப்பின்போது தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க எம்.பி.க்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆலோசனையைக் கண்டுகொள்ளாமலும் ஓ.பி.எஸ். செயல்பட்டதில் கார்டனுக்கும் செம கடுப்பு.


இந்தச் சூழலில்தான், ஜல்லிக்கட்டுக்கான தடையை அகற்றும் வகையில் சட்டப்பாது காப்புக்கான வழியை ஏற்படுத்தித்தருமாறு பிரதமரிடம் வலியுறுத்தி சாதித்தார் பன்னீர். சென்னை திரும்பிய முதல்வரை கார்டனுக்கு வரவழைத்து வறுத்தெடுத்தது கார்டன். "அவசர சட்டத் திருத்தம் சட்டமன்றத்தில் சட்டவடிவம் பெற்றதும் அதன் நகலை மாணவர்களிடம் ஒப்படைக்கும்போது சின்னம்மா (சசிகலா)  கையால் கொடுக்க வேண்டும்' என முதல்வருக்கு உத்தரவு போட்டார் தினகரன்.

 மேலும், அலங்காநல்லூர் வாடிவாசல் திறப்பு விழாவில் சசிகலாவும் இருக்க வேண்டுமென வலியுறுத்தி  னார்."அரசாங்கத்தில் எந்த பதவியிலும் இல்லாத சின்னம்மாவை அழைத்துப்போனால் எதிர்மறை விமர்சனங்கள் வரும்' என மென்மையாக மறுத்து, தானே வாடிவாசலைத் திறக்கும் ஆர்வத்துடன் கிளம்பினார் முதல்வர்.

தமிழர்களின் உரிமையை மீட்டெடுத்ததில் தங்கள் பங்களிப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என கார்டன் தரப்பில் தினகரன், நடராஜன் ஆகியோர் ஆலோசிக்க, அதன்படியே நடந்து முடிந்திருக்கிறது'' என்று விவரித்தனர் அதிகாரிகள்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர்கள், அலங்காநல்லூர் வாடிவாசலை திறந்து வைப்ப தற்காக 21-ந்தேதி இரவு மதுரை சென்ற முதல்வரிடம் மக்களின் எதிர்ப்புணர்வை எடுத்துச் சொன்னார் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ். அப்போ தனக்குப் பக்கத்திலிருந்த  அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயக்குமாரை காட்டி, "இவர்களை அழைத்துக்கொண்டு போய் மக்களை சமாதானம் செய்யுங்க. ஜல்லிக்கட்டு நடந்தாக வேண்டும்' என சொல்லிவிட்டு படுக்கப் போய்விட்டார் முதல்வர். 

அவர்களாலும் போகமுடியவில்லை.
பொறுப்பு டி.ஜி.பி. ராஜேந்திரனை தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார் பன்னீர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தொடர்பு கொள்ள முதல்வர் முயற் சித்தபோது அவரது லைன் கிடைக்கவேயில்லை. அப்போது முதல்வரை தொடர்புகொண்டு பேசிய கவர்னர், "நாளைக்கு சட்டமன்றம் கூடும் போது போராட்டக்காரர்களால் சட்டம்- ஒழுங்கிற்கு ஏதேனும் பங்கம் வரவிருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருக்கிறார். முதல்வரோ, "அவசர சட்டத்தின் முன்வடிவு நிறைவேறியதும் மாணவர்கள் சமாதானமாவார்கள்' என சொல்லி யிருக்கிறார். 

அத்துடன் நிற்காமல், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்ட உயரதிகாரிகளை அழைத்து, கவர்  னரின் சந்தேகம் குறித்துப் பேசியுள்ளார்   முதல்வர். மாணவர்களோடு கலந்திருக்கும் பல குழுக்களின் நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கின்றன. பிரதமர், முதல்வர் மற்றும் சசிகலா மேடம் ஆகியோரை தரக்குறைவாக பேசுகின்றனர்.. அவர்களை பெசன்ட்நகர் புள்ளி தரப்பே அனுப்பி வைத்திருக்கிறது. அப்புள்ளிக்கு நெருக்கமான தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களின் இயக்கத்திலிருக்கும் இளைஞர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிவரும் செலிபிரிட்டிகள் சிலரையும் உளவுத்துறை வளைத்துவிட்டது. இவர்கள் மூலம் சட்டம்- ஒழுங்கிற்கு பிரச்சனையை ஏற்படுத்தி உங்கள் அரசுக்கு நெருக்கடி தரத் திட்டமிடுகிறார்கள்' என சொல்ல அப்-செட்டாகி விட்டார் முதல்வர். "என்னிடமிருந்து உத்தரவு வராமல் எதையும் செய்யக்கூடாது' என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்'' என்று விவரித்தனர் அதிகாரிகள் தரப்பினர்.<முதல்வருக்கு நெருக்கடி தரும் விதத்தில், 23-ந்தேதி விடியற் காலையிலிருந்து போராட்டக்காரர் கள் மீது தனது கொடூரங்களைக் காட்டத்துவங்கியது காவல்துறை.
 
;இது குறித்து பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் நாம் விசாரித்த போது, "பெசன்ட்நகர் பிரமுகரும் அவரது மைத்துனரும் எடுத்த ஆக்ஷன்களுக்கு காவல்துறை ஆடியது. 23-ந் தேதி அதிகாலையில் ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்தனர். 
அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கிறது' என சட்டமன்றத்தில் கவர்னர் உரை வாசித்தபோது, சென்னையில் பல இடங்கள் தீப் பிடித்து எரிந்தன. இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்றத்தான் சினிமா செலிபிரிட்டிகளையும்  "ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் சில அமைப்பினரையும் தங்கள் பக்கம் வளைத்து, போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டனர்; போராட்டம் திசை மாறுகிறது' என்றெல்லாம் சொல்லவைத்தது உளவுத்துறை'' என சுட்டிக் காட்டினார்கள் 

நேர்மையான அதிகாரிகள் சிலர்.சட்டமன்றத்தில் கவர்னர் உரை முடிந்து அவரை அனுப்பி வைத்துவிட்டு தனது அறைக்கு அவசரம் அவசரமாக வந்த முதல் வர் ஓ.பி.எஸ். கடும் கோபத்தில் இருந்தார். 
உள்துறை மற்றும் டி.ஜி.பி. உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை அழைத்துப் பேசிய அவர், "எந்த உத்தரவையும் நான் போடாத நிலையில், எப்படி இந்த ஆக்ஷனில் இறங்கி னீர்கள்? காவல்துறைக்கு அமைச்சர் நானா? இல்லை வேறு யாரோவா?' என கொந்தளித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.!

இந்த நிலையில், தமிழக கலவரத்தை அறிந்து அதிர்ச்சி யடைந்த மத்திய அரசு, மத்திய  உள்துறை மூலம்  தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவிடமும் தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமும் விளக்கம் கேட்டிருக்கிறது. 
கலவரத்தின் பின்னணி குறித்து விசாரணையை நடத்தியிருக்கிறார் கவர்னர் வித்யா சாகர்ராவ்.>-இரா.இளையசெல்வன்</  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக