சனி, 28 ஜனவரி, 2017

பத்மவிருதுக்கு ஏன் சிபார்சு தேவை? பட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கேள்வி?

jwala_gutta6661எனக்கு ஏன் பத்ம விருது கிடைக்கவில்லை? இதற்கு நான் தகுதியற்றவளா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா.
குடிமக்களுக்கான தலைசிறந்த விருதாக பாரத ரத்னாவும் அதற்கு அடுத்த நிலை விருதுகளாக "பத்மவிபூஷண்', "பத்மபூஷண்', "பத்மஸ்ரீ' ஆகியவையும் விளங்குகின்றன. இதில் தலா ஏழு பத்மவிபூஷண், பத்மபூஷண், 75 பத்மஸ்ரீ விருதுகள் பெற தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. "வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரு பிரிவுகளாக மேற்கண்டவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் வழங்குவார்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியல்களில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவின் பெயர் இல்லை. இதையடுத்து அவர் கொதித்தெழுந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பத்ம விருதுகளுக்காக ஒரு சாதனையாளர் எதற்காக விண்ணப்பிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடைமுறைகள் அவ்வாறுதான் உள்ளன. எனவே நானும் விண்ணபித்தேன்.
என் சாதனைகளுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் பத்ம விருதுப் பட்டியலில் என் பெயர் இல்லாதது கண்டு வருத்தமடைந்துள்ளேன்.
விருதுகளின் பின்னால் நான் செல்லவில்லை. இத்தனை வருடங்கள் நாட்டுக்காக அதிக பங்களிப்பு செய்துள்ளதால் விருதுக்கு விண்ணப்பிக்கக்கூட தயங்கினேன். ஆனாலும் விண்ணப்பித்தேன். பத்ம விருதுக்கு நான் மூன்றாவது முறையாக விண்ணப்பித்துள்ளேன். ஆனால் எந்த விருதும் கிடைக்காததில் மனம் உடைந்துள்ளேன். சிபாரிசுக் கடிதம் இருந்தால் தான் பத்ம விருது கிடைக்குமா?
கலப்பு இரட்டையர் போட்டிகளில் நான் உலகளவில் 6-ம் நிலை வீரராக இருந்துள்ளேன். மகளிர் இரட்டையரில் 10-ம் இடம் பிடித்துள்ளேன். இருந்தும் எனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
யாரும் கண்டுகொள்ளாத சமயத்தில் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில் நான் ஒரு பாதை வகுத்துள்ளேன். இந்நிலையில் நான் எதற்காக இந்த விருதுக்கு விண்ணப்பிக்கவேண்டும்? சிபாரிசுக் கடிதம் கோரவேண்டும்?
எனக்கு ஏன் பத்ம விருது கிடைக்கவில்லை? நான் வெளிப்படையாகப் பேசுவதாலா? எனக்கென்று ஒரு கருத்து உள்ளதாலா? ஏன் எனக்கு மட்டும் இந்த விருது இதுவரை கிட்டவில்லை?
இனியும் இந்த விருதுக்காக நான் விண்ணப்பிக்கவேண்டுமா என்றுகூட தெரியவில்லை. இதற்கு நான் தகுதியற்றவளா? என் சாதனைகள் போதாது என்றால் வேறெந்த சாதனை இந்த விருதுக்கு உரியது? என்று ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார்  தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக