சனி, 28 ஜனவரி, 2017

களத்தில் மனித உரிமை ஆணையம்! வசமாக சிக்கி கொண்ட காக்கியும் காவியும்!

முன்னாள் டி.ஜி.பியும் ஜெ. ஆட்சியில் ஆலோசகராக இருந்தவரும் மாநிலத் தகவல் உரிமை ஆணையருமான ராமானுஜத்தின் அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, முதல்வர் மாறினாலும் போலீஸ் இலாகாவைக் கட்டுப்படுத்துவது ராமானுஜம் தான். இதனை ஷீலாபாலகிருஷ்ணன், வெங்கட் ரமணன் மூலமாக செயல்படுத்துகிறார். உளவுத் துறையிலும் ராமானுஜம் ராஜ்ஜியம்தான். அமைதியாக நடந்த போராட்டத்தின் இறுதி நாள் மிகக்கொடூரமாக முடிந்ததற்கு ராமானுஜத்தின் ஆலோசனைகளும் காரணம் என்ற கோபம் டிபார்ட்மெண்ட்டிலேயே இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் மனித உரிமை ஆணையம் மெரினா தாக்குதல் தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது
அமைதிப் பூங்காவை போர்க்களமாக்கி மாபெரும் மக்கள் போராட்டத்தை ரத்தச் சகதியாக்கியுள்ளது தமிழக காவல்துறை. மெரினாவில் கூடிய இளைஞர்களை அப்புறப்படுத்த முதல்நாள் முதலே போலீஸ் எடுத்த முயற்சிகளை கடந்த இதழிலேயே விளக்கியிருந்தோம். ஜனவரி 17-ந் தேதி நினைத்ததை, 23-ந் தேதி நிறைவேற்றியது காவல்துறை.அதிகாலை ஆட்டம் ஆரம்பம்
23-ம் தேதி அதிகாலை சரியாக மூன்று மணி ஐம்பது நிமிடத்திற்கு மெரினாவில் போராட்டம் நடந்த 2 கி.மீ. சுற்றளவில் சுமார் 7000 போலீசார் திடீரென வந்துசேர்ந்தார்கள். போலீசார் தங்களை நெருங்கி வருவதை கண்டார்கள். "காலை வருகிறேன் என' முதல் நாள் பின்னிரவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்ட தங்களது தோழர்களுக்கு, "உடனே மெரினாவுக்கு வாருங்கள்' என மெசேஜ்கள் அனுப்பினர். அவசரமாகப் புறப்பட்டு வந்த போராட்டக்காரர்களைத் தடுக்கும் வகையில், மெரினாவிற்கு வரும் சாலைகள் எல்லாம் போலீசாரின் தடுப்பு அரண்களால் மறிக்கப்பட்டிருந்தன.
இதுவரை போலீசாரின் ஒத்துழைப்போடு ஒரு திருவிழா போல ஒருவாரம் நடந்த போராட்டத்தை நசுக்க முடிவு செய்துவிட்டது தமிழக அரசு''. ஹிப் ஹாப் தமிழா சேனாதிபதி ராஜசேகர் ஆகியோர் உளவுத்துறை வேலையால் அரசியல் தொடர்புள்ள நடிகர்கள் மூலம் உரிய முறையில் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல்வர் ஓ.பி. உட்பட தமிழக அமைச்சர்கள் தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றார்கள். ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடப்பதை நிரந்தரப்படுத்தும் சட்டம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நாம் தடைவிதித்தோம்.
ஆனால் கோபமுற்ற  அரசு காவல்துறையை ஏவிவிட்டுள்ளது'' என காலை 3.50 முதல் 40 நிமிடம் போராட்டக்காரர்கள் மைக்கில் அலறியபடியே இருந்தார்கள்.

கமிஷனர் சார்பில் அறிவுரை டிராமாசரியாக 4.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் உத்தரவு என ஒரு அறிக்கையை போலீசார் போராட்டக்காரர்களின் ஒலிபெருக்கியிலேயே வாசித்தார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை என்கிற போராட்டக்காரர் களின் கோரிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டுவிட் டது. எனவே மெரினாவில் கூடியிருப்பவர்கள் கலைந்து சென்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறை யின் முயற்சிகளுக்கு ஒத்து ழைப்பு கொடுங்கள். இது காவல்துறையின் அறிவுரை என வாசிக்கப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அவசர சட் டம். தமிழக சட்டமன்றத் தில் அது நிறைவேறட்டும். அதற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து நிரந்தர சட்டமாக்கட்டும். அதன்பிறகு நாங்கள் கலைந்து செல்கிறோம் என போராட்டக்காரர்கள் அதே மைக்கை பிடித்து பதில் சொன்னார்கள். இந்த வாக்குவாதம் ஒரு மணி நேரம் நீடித்தது.

படை குவிப்பு
காலை 5.30 மணிக்கு அடிஷனல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர்களான பாலகிருஷ்ணன், சுதாகர், அன்பு ஆகியோர் தலைமையில் கையில் பெரிய லத்திகளு டன் சென்னை அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் உதவி ஆய்வாளர்கள் ஆயிரம் பேர் அணிவகுத்து நின்றார்கள். அவர் களுக்கு பின்பு, கலவரங்களை அடக்குவதற்காக பயிற்சி பெற்ற ஆயுதப்படை போலீசார், தமிழக சிறப்பு படை போலீசார் மற்றும் சென்னை நகரம் முழுக்க உள்ள சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள், உளவுப் பிரிவு போலீசார் மற்றும் போலீசார் என பத்தாயிரம் போலீசார் ஒரே அணியாக அரசுப் பேருந்துகளில் வந்திறங்கினார்கள்."நாங்கள் போராட்டக்காரர்களிடம் பேசி கலைந்து போக வைக்கிறோம். அவர்கள் மீது லத்தி வீசக் கூடாது. துப்பாக்கியால் சுடக்கூடாது என கமிஷனர் ஜார்ஜ் சொல்லியிருக்கிறார்' என பத்திரிகையாளர்களிடம் இணை கமிஷனர் மனோகரன் சொல்லிக் கொண்டிருந்தார். அதற் குள் கடற்கரைக்குள் வெளிச்சம் பரவ ஆரம் பித்தது. "போராட்டக்காரர் களுடன் பேசுகிறோம்' என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் போலீசார் உள்ளே வந்தனர். அவர்கள் வைத்திருந்த சட்ட நகல்களில் முதல்வரின் கையெழுத்து எங்கே? நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசி விட்டு முடிவு செய் கிறோம். எங்களுக்கு ஒருநாள் அவகாசம் தாருங்கள் என்றார் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் களில் ஒருவரான நடிகர் ஆரி.. போலீசார் முன்நோக்கி வரத் தொடங்கினர். கடைசியில் அரைமணி நேரம் என அவகாசம் கேட்டார்.

கர்ப்பிணிக்கு உதைஎதையும் காதில் வாங்காமல் முன்னேறி வந்த போலீசார் கர்ப்பிணியான ஒரு போராட்ட வீராங் கனையின் வயிற்றில் எட்டி உதைத்தனர். கடுமை யான போலீஸ் அடியால் ஐயோ அம்மா என வயிற்றிலிருந்து பீறிட்ட உதிரப் போக்கால் அந்தப் பெண் கதற, போராட்டக்காரர்களுக்கு போலீசா ரின் வேகம் புரிந்தது. அவர்களில் சிலர் கடல் நீரை நோக்கி ஓடத் தொடங்கினர். இதை போலீசாருக்கு தலைமை தாங்கிய இணை கமிஷனர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பிடியுங்கள் என சங்கர் உத்தரவிடுவதற்குள் கடற்கரையைத் தாண்டி கடலுக்குள் பாய்ந்து விட்டார்கள் இளைஞர்கள். கடலுக்குள் பாய்ந்த இளைஞர்களை தாக்க லத்தியுடன் பாய்ந்த போலீஸ் பயிற்சி இன்ஸ்பெக் டர்களில் ஒருவர் சங்கருக்கு தகவல் சொன்னார். உடனே அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடமும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதியிடமும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடமும் தகவல் சொன்னார்.


கடல் அலை நடுவே போராட்டம்போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், எனக்கு ஏற்கனவே கும்பகோணம் மகாமகத்திலும் தாமிர பரணி ஆற்றிலும் அனுபவம் உள்ளது. கடலுக்குள் சென்றால் போராட்டக்காரர்கள் இறந்து விடுவார் கள். அவர்களை அப்படியே விட்டுவிடு என உத்தரவு போட்டிருக்கிறார். போலீசார் கடலில் இருந்து பின்வாங்க கடலுக்குள் போன இளை ஞர்கள் வெற்றி முழக்கமிட, அந்த வெற்றி முழக் கத்தைக் கேட்ட கரையிலிருந்த போராட்டக்காரர் கள் அவர்களை நோக்கி ஓட கடல் அலைகள் நடுவே புதிய போராட்டக்களம் உருவானது.

தேசியகீதமும் போலீஸ் அடியும்அந்த நேரத்திலும் பெரும்பாலான போராட் டக்காரர்கள் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப் படுத்த முயல அதில் ஒருவர் போராட்டக் களத் திற்கு அருகில் இருந்த போலீசாரின் மைக்கில் தேசிய கீதம் பாட ஆரம்பித்தார். அந்த தேசிய கீதத்தைக் கேட்டதும் போலீசார் நிலைகுலைந்து நிற்க, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராட் டக்காரர்கள் போலீசாரின் தாக்குதலால் உதிரப் போக்குடன் தத்திக் கொண்டிருந்த இரண்டு பெண் களையும், கடுமையாக தாக்கப்பட்ட ஒரு மூதாட்டி யையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார்கள். அதற்குப் பிறகு போலீசார் தேசிய கீதத் திற்கு மதிப்பளிக்கவில்லை. சரமாரி அடி, உதைகளு டன் போராட்டக்காரர்களை பிரித்து மேய்ந்தார்கள்.



போராட்டக்காரர்கள் அங்கிருந்து 2 குழுக்க ளாகப் பிரிந்து ஒரு குழுவினர் கடல் அலைகளுக்கு பக்கத்தில் முகாமிட்டுள்ள போராட்டக் குழு வினரை நோக்கியும் இரண்டாவது குழுவினர் போராட்டக்களமான விவேகானந்தர் இல்லத்துக்கு பக்கத்தில் உள்ள நொச்சிக்குப்பம், நடுக்குப்பம், அயோத்திக்குப்பம், மாட்டாங்குப்பம் ஆகிய மீனவர் குடியிருப்புகளை நோக்கியும் ஓடினர்.இதற்கிடையே விவேகானந்தர் நினைவகம் அருகே போலீசாரால் தாக்கப்பட்ட போராட்டக் காரர்களைக் காப்பாற்ற சென்னை நகர் முழுவது மிருந்து திரண்டு வந்த இளைஞர்களை ஐஸ்ஹவுஸ், ராதாகிருஷ்ணன் சாலை, திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை பகுதிகளில் போலீ சார் மடக்கி நிறுத்தினர். இதுதவிர சென்னை நகரம் முழுவதும் 100 இடங்களில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு ஆதரவான மாணவர் கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உதவிக்கரம் நீட்டிய மீனவர்கள்கடலலை நடுவே கூடியிருந்த மாணவர் களுக்கு குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்ததற் காக நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை போலீஸ் லத்தியால் தாக்க... அழுது கொண்டே ஊருக்குள் சென்று உண்மை நிலவரத் தைச் சொல்ல, மாணவர்களுக்காக நியாயம் கேட்டு நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் உடனே மாணவர்கள் குடிப்பதற்கு கேன்களில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தனர். அதையும் போலீஸார் தடுக்க... ஒவ்வொருவரும் படகுகளில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வந்து கொடுத்து போலீஸாரை கடுப்பேற்றினார்கள்.போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்ன கண்ணீர்க்கதைகளைக் கேட்ட மீனவக் குப்பங்களில் வசிக்கும் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், 6 நாட்கள் வன்முறையின்றி நடந்த போராட்டத்தை போலீசார் வன்முறையைப் பயன்படுத்தி ஏன் கலைக்க வேண்டும் என்கிற கோபத்துடன் குப்பங்களிலிருந்து வெளியேறி கடல் அலைகளுக்குப் பக்கத்தில் அணிவகுத்த போராட்டக்காரர்களுடன் இணைந்தனர்.


மீனவர் குடியிருப்புகளுக்குள் கொடுந்தாக்குதல்மாணவர்களும் மீனவர்களும் இணைந்ததால் கடுப்பான போலீஸ், குப்பத்தில் உள்ளவர்களின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. நடுக்குப்பம் பகுதியில் போலீசாருக்கும் குப்பம் மக்களுக்கும் மோதல் முதலில் வெடித்தது. நடுக்குப்பம் மீனவர்கள் போராட்டக்காரர்களுக்கு உதவியதால் அவர்கள்மீது வஞ்சம் தீர்க்க... மீன் மார்க்கெட்டை போலீசார் முற்றிலுமாக  எரித்துச் சாம்பலாக்கினர். அதில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் எரிந்துவிட... போராட்டம் மேலும் வீரியமானது. அதை அடக்க போலீசாரே அங்கு நின்றிருந்த, ஒரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்த னர். இந்தக் காட்சிகளை மீனவ இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட... மீனவக்குப்பங்களில் அடைக்கலம் புகுந்த போராட் டக்காரர்களுடன் அங்குள்ள  இளைஞர்களும் ஒன்றுசேர்ந்து போலீசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.திருவல்லிக்கேணியில் மீனவர் பகுதியில் வீடு வீடாக புகுந்த போலீசார், தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பெண்கள் மீது அத்துமீறி, அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண்கள் செய்தியாளர்களிடம், ""உங்க வீட்ல ஆம்பளைங்க இல்லையா. உங்க ளுக்கு புள்ள கொடுக்கணுமான்னு கேட்குறானுங்க. அவனுங்க போலீசா? கிடையாது. ரவுடி அராஜகம் தான் நடக்குது. கல்ல தூக்கி அடிக்கிறானுங்க. பைக்க உடைக்கிறானுங்க. வயசுப் பொண்ண பிடிச்சு ஜாக்கட்டோட இழுக்குறானுங்க. இது ரொம்ப அராஜகம், இவ்வளவு நாளா இப்படி கிடையாது'' என்றார் ஒரு பெண்மணி. (தலையில் கட்டுப் போட்ட பெண்மணி) ""நாங்க வீட்டுக்குள்ள இருந்தோம். திடீர்ன்னு 17 போலீஸ்காரங்க உள்ள நுழைந்து போடி, வாடின்னு கேட்டானுங்க. ஜாக்கெட்ட பிடிச்சானுங்க. நான் அடிச்சேன். பதிலுக்கு அடிச்சானுங்க. என் வீட்டுக்காரு தூங்கிக்கிட்டு இருந்தாரு. அவரை அடிச் சானுங்க. உள்ள வந்து கதவெல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டாங்க. கருப்பு சொக்கா போட்டிருந்த என் பையனையும், நீல கலர் பனியன் போட்டிருந்த என்னோட இன்னொரு பையனையும், வெள்ளை சொக்கா போட்டிருந்த அவனோட பிரண்ட்டையும் அடிச்சு உதைச்சாங்க. 3 பசங்களும் ஜி.எச்.சில் இருக்காங்க. எனக்கு 8 தையல் போட்டுருக்கு. நான் ஆஸ்பத்திரியில இருக்க முடியாதுன்னு சொல் லிட்டு வந்துட்டேன்'' என்றார் வேதனையுடன்.

திசைதிருப்ப ஒரு தீவைப்புபோராட்டத்தின் வீரியம்  அதிகமாகிக் கொண்டே போனது. டி.வி.யில் இதையெல்லாம் பார்த்த பொதுமக்களின் கோபம் போலீஸ் மீது அதிகமானது. மாணவர்கள் தான் வன்முறையைத் தூண்டினார்கள் எனச் சொல்ல போலீசாருக்கு ஒரு அவசியம் ஏற்பட் டது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்கும் ஒரு நபரின் உதவியை போலீசார் நாடினர் என்கிறார்கள் அஙகுள்ளவர் களே. அந்த கஞ்சா வியாபாரியின் அடியாட் கள் கறுப்பு உடை அணிந்து வந்து ஐஸ்ஹவுஸ்  காவல்நிலையத்தின் பக்கவாட்டில் உள்ள பெசண்ட் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் பைக்குக்கும் ஆட்டோவுக்கும் தீ வைத்தனர். தொடர்ந்து காவல்நிலையத்தின் முன்பு (நடேசன் சாலையில்) வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. உயரதிகாரிகளின் திட்டமிட லில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்குத் தெரியாது. அவர்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள் என்கிறார்கள் உள்விவரமறிந்தவர்கள்.போராட்டக்காரர்களை அடக்குவதற்கு, மெரினா எதிரில் உள்ள விவேகானந் தர் இல்லத்திற்கு சற்று தூரத்தில் உள்ள இந்த காவல்நிலையம் வெகு வாகப் பயன்பட்டது. காவலர்கள் நிறைந்து நின்ற அந்த காவல்நிலை யத்தில் இருந்த வாகனங்களை வெளியார் யாரும் அத்தனை எளிதாகத் தீ வைத்து  கொளுத்த முடியாது என்கிற யதார்த்த உண் மையை மீறி இந்தத் தீவைப்பு நடைபெற்றது.


கண்மூடித்தனமான தாக்குதல்இந்த சம்பவங்களால் போராட்டக்காரர் களை அடக்க அழைத்து வரப்பட்ட போலீசாரின் சிந்தனை திசை மாறியது. கண்ணில் கண்டவர்களை எல்லாம் லத்திகளால் அடிக்க ஆரம்பித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியே கலவரக்காடானது. சென்னை நகரமெங்கும் கலவரக்காடானது. அயோத்திக்குப் பம் நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவி ஒருவரை காவல்துறை தாக்கியது. அதை வீடியோ எடுத்த பாலிமர் தொலைக்காட்சியைச் சேர்ந்த சுரேந்தரை அவரது டி.வி.யின் பெயரைச் சொல் லியே அடித்தனர். அந்தக் காட்சிகளை படமெடுத்த தினகரன் போட்டோகிராபர் அருணையும் தாக்கினர். போலீசாரால் மர்ம உறுப்பில் தாக்குதலுக்குள்ளானாள் ஒரு மாணவி. அங்கிருந்த டி.வி.யின் கேமராமேன், பத்திரிகை புகைப்படக்காரர் ஆகிய மூவரும் மண்டை உடைபட்டு கை, கால்கள் உடைக் கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாட்டாங்குப்பத்தில் அடிஷனல் கமிஷனர் ஷங்கர் தலைமையில் பாய்ந்த போலீசார் ஒவ் வொரு வீடாகப் புகுந்து தாக்கினர். ஜெ. ஆட்சியில் கொடியங்குளத்தில் நடந்ததை நினைவு படுத்துவதைப் போல, மீனவர் வீடுகளில் இருந்தது டி.வி., மோட்டார்சைக்கிள், பீரோ, டியூப்லைட்டுகள் என அனைத்தையும் உடைத்தெறிந்தனர். பெண்கள், இளைஞர்கள் என முப்பது பேரை அடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிசைகளைக் கொளுத்திய காக்கிகள்ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு தீ வைக்கச் சொல்லி துணை கமிஷனர்கள் யுவராஜ், பாஷா ஆகியோர் உத்தரவிட சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க குடிசைகளுக்கு தீவைத்து கடமையாற்றி னார்கள் போலீஸார். இந்தக் காட்சிகளை செய்தியாக்கிய செய்தியாளர்களும் போலீஸ் தாக்குதலுக்குத் தப்ப வில்லை. நியூஸ் 7 பிரபா கரன், சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி.யின் ஜெயக்குமார், பாலிமர் டி.வி.யின் பழனி, ஜெயக் குமார் உட்பட பல செய்தி யாளர்கள் தாக்கப்பட்டனர். அதில் நமது நக்கீரனும் அடக்கம். தீக்கதிரைச் சேர்ந்த லட்சுமிகாந்த் பாரதியின் கேமராவில் இருந்த பதிவுகள் அழிக்கப் பட்டன.இந்தப் போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களி டம் பேசவந்த பிரபல சினிமா நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி யையும் அவருக்கு உதவி யாக வந்த அலெக்ஸ் என்ற மாணவனையும் கடுமை யாகத் தாக்கிய போலீசார் அலெக்சின் மண்டையை உடைத்தனர். ""நான் யாரென்று தெரிந்தே அடித்தார்கள்'' என்கிறார் இமான் அண்ணாச்சி.

கலவர நகரமான சென்னைசென்னை நகரம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களோடு மோதிய போலீசார், சில இடங்களில் போராட்டக்காரர்களிடம் அடியும் வாங்கினார்கள். எழும்பூர் நாயர் சாலையில் இணை கமிஷனர் சந்தோஷ்குமார் காரை போராட்டக்காரர்கள் கொளுத்திவிட்டார்கள். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் கணேசமூர்த்திக்கு பாதுகாப்பாக வந்தவர் ஓடிவிட... அவரது காரை போராட்டக்காரர்கள்  அடித்து நொறுக்கினர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெளியே வரவில்லை. டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஜெ.வின் இசட் பிரிவு பாதுகாப்புப் படையை தனது அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தி பாதுகாத்துக்கொண்டார்.அதே நேரத்தில் மெரினாவில் கடல் அலைக்கு பக்கத்தில் நின்ற போராட்டக் காரர்களை போலீசால் அசைக்கக்கூட முடியவில்லை. 23ஆம் தேதி மதியத்திற்கு மேல்தான் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் நிரந்தர சட்டம்தான் என தெரிவிக் கப்பட்ட விளக்கத்தையும், அதற்கான சான்று களையும் போராட்டக்காரர்கள் ஒத்துக் கொண்டார்கள். அப் பொழுதும் எங்களைத் தாக்கிய போலீசார் மீது என்ன நட வடிக்கை என அவர்கள் கேட்டுக் கொண்டேயிருந் தார்கள்.

நிறைவடைந்த போராட்டம்தாக்கப்பட்ட புலியின் சீற்றத் துடன் இருந்த இளைஞர்களிடம் நீதிபதி அரிபரந்தாமன், தமிழக அரசு நிறைவேற் றிய சட்டம், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான சட்டம் என்று எடுத்துக் கூறினார். வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில், "போராடும் மாணவர்கள் மீது கை வைக்கக்கூடாது' என போலீசுக்கு எதிராக உத்தரவே பெற்றுவந்து மாணவர்களிடம் காட்டினார். இந்த விளக்கங்களை ஏற்ற மாணவர்களும் இளைஞர்களும் 24-ந் தேதி மாலையில் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, கரையேறினர்.  பூந்தோட்டத்தைச் சிதைத்த பூகம்பமாக அறவழிப் போராட்டக் களத்தை அராஜக மயமாக்கியிருந்தது காவல்துறை.

-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த், ஜீவாபாரதி, அருண்பாண்டியன்
படங்கள்: சுந்தர், ஸ்டாலின், அசோக், செண்பகபாண்டியன் நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக