சனி, 28 ஜனவரி, 2017

சசி தரூர் கைதாகலாம் ! மனைவி சுனந்தா மரணம் கொலை? சந்தேகம்? சிக்கியது ஆதாராம்!


முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், 2 முறை திருமணமாகி விவாக ரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010–ம் ஆண்டு, ஆகஸ்டு 22–ந்தேதி காதல் மணம் செய்தார். ஆனால், திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசிதரூர்–சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இருவரிடையே கலகங்கள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.< இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில்,   2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17–ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இதில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்கள் ஆய்வுக்‍காக அனுப்பி வைக்‍கப்பட்டன. இதனை ஆய்வு செய்த அமெரிக்‍க புலனாய்வு அமைப்பான FBI மற்றும் AIIMS நிறுவனம் தங்களுடைய அறிக்‍கைகளை, வழக்‍கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்‍ குழுவுக்‍கு இரண்டு வாரங்களுக்‍கு முன்பு அனுப்பிவைத்தன.
இவற்றை ஆராய்வதற்காக புதிய மருத்துவக்‍ குழு அமைக்‍கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டெல்லி, சண்டிகர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சுனந்தா புஷ்கரின் மடிக்‍கணினி பதிவுகளை ஆராய சிறப்பு புலனாய்வுக்‍ குழு நடவடிக்‍கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சுனந்தா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னரே சுனந்தா புஷ்கரின் மரண மர்ம முடிச்சு அவிழ்க்‍கப்படும் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுனந்தா புஷ்கரின் மா்ம முடிச்சு அவிழ்ந்தால் சசிதரூர் கைது செய்யவும் படலாம் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக