சனி, 28 ஜனவரி, 2017

போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியை விமர்சிப்பது தேச துரோகம்? நிர்மலா சீதாராமன் காவிரிக்காக கர்நாடகா பக்கம் நின்ற flashback பாருங்க!

சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இந்திய பிரதமர் மோடியை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.; இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களில் சிலர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு தேசத்தோட பிரதமருக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. சென்னை மாணவர்கள் போராட்டத்தில் சில தேசதுரோக சக்திகள் நுழைந்து கலவரமாக மாற்றியுள்ளது.
எனவே அவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் மற்றும் அவரது உடமைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது அரசு உரிய விசாரணை நடத்தி குற்றம் நிருபிக்கப்பட்டால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக