சனி, 7 மே, 2016

டிவி விவாதங்களை தவிர்க்கும் அதிமுக... உப்புமா பகவதர்களின் சொதப்பலால் தலைமை அதிருப்தி

முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதம் என்பது ஆடிக்கொரு முறை அமாவசைக்கு ஒரு முறை நடக்கும். இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்களிடையே போட்டா போட்டியே இருந்ததுண்டு. ஆனால்- சமீபமாக பெருகிவிட்ட தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு தினமும் ஏதோ விவாதம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வருடம் முழுக்க விவாதம் என்பதால் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கான மவுசும் குறைந்துவிட்டது. இதுபோன்ற விவாதம் ஒன்றில் அதிமுக பொறுப்பிலிருந்த நாஞ்சில் சம்பத், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி தோன்றுமளவுக்கு உளறித் தள்ளிவிட்டதால், அவரது பதவி பறிபோனது. அதிலிருந்து அதிமுகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றுவதை முடிந்தவரை தவிர்த்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் பேசுவதற்கு ஆளில்லாததால் தேமுதிகவிலிருந்து ஆளுங்கட்சி அபகரித்த எம்.எல்.ஏ.க்கள், அதிமுக ஜால்ரா அமைப்புகளின் தலைவர்களை வைத்து விவாதங்களை தொலைக்காட்சிகள் ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.

4,000 கோடி ரூபாயை பத்திரமா.....TN தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை..... லக்கலலக லக்கா லக்கானி .


"தலைமைத் தேர்தல் ஆணையம்தான் கண்காணிப் பாக செயல்படுகிறது. தமிழகத் தில் தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. அத னால்தான் 4,000 கோடி ரூபாய் டிரான்ஸக்ஷன் விவகாரத்தை கோட்டை விட்டுள்ளது'' என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அ.தி.மு.க.வின் தேர்தல் பண விநியோகம் எவ்வளவு துல்லியமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்பதை... இந்தியாவில் ஒட்டு மொத்த பண விநியோகத் தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் தமிழ்நாட்டையும் கேரளா வையும் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கிக்கு, இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தொடர்பு இல்லாத கர்நாடகத்திலிருந்து ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத் திருக்கிறது என்கிறது மத்திய அரசின் வட்டாரம்.

தமிழக செல்போன் செக்ஸ் பேச்சு: இனிமை வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்

sex may 7
அன்புள்ள கதலிக்கு’ என்று கால் போடாமல் காதல் கடிதமெழுதி அனுப்பிய காலமெல்லாம் மலையேறிப் போய் இப்பொழுது செல்போன் செக்ஸ் வந்துவிட்டது, (செல்)போன் செக்ஸ் என்றால் என்ன? காம உணர்ச்சியை தூண்டும் விஷயங்களை அப்பட்டமாக போனில் பேசுவதே அல்லது கேட்பதே போன் செக்ஸ்.* இந்தப் பழக்கமுடையவர்கள் தங்களுடைய காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பெரும்பாலும் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். திருமண நோக்கோடு காதலிக்கும் ஜோடிகளுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும் சரி அந்நியர்களுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும்சரி, போன் செக்ஸ் பாப்புலராக இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. சொல்லப்போனால், தற்போது பலர் இதை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள்.

இது ஒரு ரகசிய கூட்டணி... சோ+ மோடி +ஜெயலலிதா... அடிக்கிற மாதிரி அடிப்பேன்.. வலிக்கிற மாதிரி நடிம்மா !

அதிமுக அரசு அப்பட்டமாக தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது...
ஒவ்வொரு ஊரிலும் அதிமுகவினர் வீடுகளில்... கோடி கொடியாக பணம் பதுக்கல்...மக்கள் புகார் தெரிவித்தும்....நடவடிக்கைகள் எடுப்பதில்லை...
புகார் குறித்து பதுக்கல் காரர்களுக்கு தெரிவித்துட்டு....அவர்கள் பணத்தையும் ஆதாரங்களையும் அப்புரப்படுத்தும்வரை காத்திருந்துவிட்டு...பிறகு ஒப்புக்கு ஒரு சோதனை நடக்கிறது...அதிலேயும் சோதனை விவரங்களை யாருக்கும் வெளியிடுவதில்லை
ஜெயாவின் மீதும்...அதிமுகவினர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கவிடாதபடி..............தேர்தல் ஆணையம்....வருமானவரித்துறை...அமலாக்கப்பிரிவு...சி பி ஐ ஆகியவற்றின் கைகளை கட்டிப்போட்டுள்ளது யார் ?
அது யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும் மொடிஜி...
நீங்கள் ஊழலை ஒழிக்கும் அழகு இது தானா ?
ஹரியும் சிவனும் ஒண்ணு...
மோடியும் ஜெயாவும் ஒண்ணு ...
இதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு. 
Damodaran Chennai

ராகுல்: ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

மதுரை: தான் மட்டும் அறிவாளி என நினைக்கும் முதல்வர் தான் ஜெயலலிதா என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் முதல்வர் தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் இன்று தமிழகம் வருகை தந்தார். மதுரையில் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி வணக்கம் என தமிழில் கூறி தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த மேடையில் ஸ்டாலினுடன் இணைந்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி. நாங்கள் இரு கட்சிகளும் ஒரே நோக்கத்துக்காக, ஒரே லட்சியத்துக்காக இணைந்து செயல்படுகிறோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தகுதி போதாதா? - திருமாவளவன் கேள்வி

கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதே தகுதி தான். ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதே விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு தகுதி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய திருமாவளவன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, தமாகா, தேமுதிக கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும்.தமிழக அரசியல் களத்தில் இது முற்றிலும் மாறுபட்ட தேர்தல். அதிமுக, திமுக இருமுனை போட்டி மட்டுமே 50 ஆண்டுகளாக நிகழ்கிறது. இதற்கு எதிராக தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோடியின் ஆட்சி இந்தியாவுக்கு நல்லதல்ல...அருண் ஷோரி( முன்னாள் பாஜக மத்திய அமைச்சர்) கடும் விமர்சனம்


பிரதமர் நரேந்திர மோடி தன்னை மட்டும் முன்னிறுத்தி தனிநபர் அரசை நடத்துகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் செளரி குற்றம்சாட்டியுள்ளார்.
 வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் செளரி, சமீபகாலமாக பாஜகவின் செயல்பாடுகளில் இருந்து விலகியுள்ளார்.
 இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 மக்கள் அளித்த மிகப்பெரிய வாய்ப்பை மோடி வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமராக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருள்போல மக்களைப் பயன்படுத்துகிறார்.

அன்புமணி: உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் ...தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கு இடமில்லை!

நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.: அன்புமணி பேட்டி தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக ஆட்சி அமைக்கும் என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், எங்களது பிரச்சாரம் மக்களிடையே சென்றடைந்துள்ளது. எங்களது டார்கெட் இளைஞர்கள்தான். அவர்களை கவர்ந்துள்ளோம். 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 60 விழுக்காடு பொதுவாக்காளர்கள். அதில் 3ல் இரண்டு விழுக்காடு இளைய வாக்காளர்கள். அவர்களிடம் எங்களுடைய செய்திகள் சென்றடைந்துள்ளது.

சோனியா, ராகுல், மன்மோகன் சிங் காங். தலைவர்கள் கைதாகி விடுதலை

புதுடெல்லி: ஜந்தர்மந்தரில் ஜனநாயகத்தைக் காப்போம் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள். | படம்: பிடிஐ.
முன்னதாக ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: உத்தராகண்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. அதை அணைப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால், உத்தராகண்டிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசை கலைத்து ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆளுங்கட்சி நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மத, மொழி, இனம் மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டப் பார்க்கிறது. இதனால் பழங்குடியினர், தலித் மக்கள் உட்பட சிறுபான்மையின சமூகத்தினர் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

கலவரம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

சென்னை : ''பா.ம.க., துாண்டுதலால், திருமாவளவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், கலவரம் வெடிக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், கொருக்குப்பேட்டையில், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் வசந்திதேவியை ஆதரித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: வெள்ளம் வந்தபோது, வேற்று கிரகவாசி போல் இருந்து விட்டு, அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆர்.கே.நகர் பகுதிக்கு வந்து சென்றார் ஜெயலலிதா. சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஜெயலலிதா தலையின் மீது, கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது.குன்காவின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், ஜெயலலிதா சிறை செல்வது நிச்சயம். அப்படி சிறை சென்றால், தேர்தலில் போட்டியிட முடியாது; அத்துடன் அவரின், அரசியல் சாம்ராஜ்யமே அழிந்து போகும்.

பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கான் "லண்டன் மாநகர மேயராகிறார்"

பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சாதிக் கான் லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். வெள்ளி இரவு சுமார் பத்து மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் சுற்று வாக்குகளில் சாதிக் கான் சுமார் 44 சதவீத வாக்குகளும் அவரை எதிர்க்கும் பிரதான கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் ஜாக் கோல்ட்ஸ்மித் சுமார் 35 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ராகுல் காந்தி இன்று சென்னை மதுரை கோவையில் பிரசாரம்...

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், இன்று ஒரே நாளில், சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் இன்று, தமிழகத்தில் சூறவாளி பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரையில் ராகுல், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
அடுத்து, கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், ராகுல், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.இந்த இரு இடங்களிலும் பேசி முடித்து விட்டு, சென்னைக்கு வரும் ராகுல், மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வானகரத்தில், இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கும், பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், காங்.,தலைவர் இளங்கோவன் பேசுகின்றனர்.- நமது நிருபர்

வெள்ளி, 6 மே, 2016

திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள்

சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது. நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர். முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின. அதன்பின்னர் கிழக்கு மண்டல முடிவுகள் நேற்று வெளியாகின. மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 24 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 

கோயில் அன்னதான திட்டத்தை நிறுத்த திமுக திட்டம் : ஜெயலலிதா

பெருந்துறை,மே 06 (டி.என்.எஸ்) கோயில்களில் நடைபெறும் அன்னதான திட்டத்தை நிறுத்த, திமுக திட்டமிட்டுள்ளது, என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று பெருந்துறையில் நடைபெற்ற பிரசாரா கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கு அறிஞர் அண்ணா உணவகம் மூலம் உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்து ஏமாற்றப் பார்க்கின்றனர். இந்தத் திட்டம் இந்து சமய அறநிலையத் துறை, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும் என திமுக தெரிவித்துள்ளது.

பாலியல்...கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: கொந்தளிக்கும் கேரள மாநிலம்... வீதியில் இறங்கி போராடும் மக்கள்


இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்துவருகிறது. அடுத்தடுத்து ‌அங்கு நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்து""பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: கொந்தளிக்கும் கேரள மாநிலம்... வீதியில் இறங்கி போராடும் மக்கள்" இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்துவருகிறது. அடுத்தடுத்து ‌அங்கு நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்கலாம்... மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றில்

புது தில்லி: தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு  இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது. அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான  வழக்கு இன்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் விகாசிங் தனது விளக்கத்தை எடுத்துரைத்தார்.
அதில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது.  அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.

தே மு தி க, ம ந க கூ ,தா ம க ..... பெயரில் கூட ஒற்றுமைப்பட முடியாத Scrapyaard..(காயலாங்கடை) விகடனின் அலசல்

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!" - என்பது பழமொழி. இதை நம்பித்தான் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். ஏனென்றால் இந்த மகாபாரத யுத்தத்தில் அவர்தான் தர்மர். அப்படித்தான் சொல்கிறார்கள்.
>விஜயகாந்தை தர்மராகவும் வைகோவை அர்ஜுனனாகவும்
, திருமாவளவனை பீமனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், முத்தரசனை சகாதேவனாகவும் உருவகப்படுத்திக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூடு கிளம்பியது. அடுப்புக்கு வெளியேயும் சூடு பரவியது தான் சிக்கலே!  scrapyard

பெங்களூரு வாழத் தகுதியற்ற நகரமா? அதிர்ச்சி ஆய்வு

சுற்றுச்சூழலை முறையாக பேணிக்காக்காததன் விளைவு உலகமெங்கும் சுதந்திரமாய் திரிந்த மனத இனம் இன்று வாழ்வதற்கான இடங்களை அடையாளங்காண வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இயற்கை தரும் எச்சரிக்கைக்கு பெங்களுருவும் தப்பவில்லை. இந்தியாவின் 'சிலிக்கன் வாலி' என்ற புகழ்கொண்ட பெங்களூரு இன்னும் ஐந்து வருடங்களில் அதன் அழகை முற்றிலும் இழந்து வாழத் தகுதியற்ற இடமாக மாறப் போகிறது என அதிர்ச்சி தருகின்றனர் சுற்றுச்சூழலியல் ஆய்வாளர்கள். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் லக்கானி .. இன்றைய மிகப்பெரிய அரசியல்வாதி? நேற்று பிரவீன் குமார்?

விகடன்: தேர்தலில் கண்ணியமாக வாக்களிக்க உறுதிமொழி எடுப்பதற்காக வரும் 10ம் தேதி ஒரு கோடி பேர் பங்கேற்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இது தொர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 100 சதவீதம் கண்ணியமாக வாக்களிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களும் ஓட்டுக்குப் பணம் பெறாமல் நடுநிலைமையோடு சிந்தித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதல்ல நீங்க அந்த   உறுதி மொழியை எடுங்க. நேர்மையாக  பணப்பட்டு வாடாவை  தடுங்க... ஜெயா விசுவாசம் போதும் 

தமிழகமெங்கும் மதுக்கடை மூடும் போராட்டம்: பெண்கள், சிறுவர்கள் மீது போலீஸ் தாக்குதல் -கைதுகள்

tamil.thehindu.com/:அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில் நடைபெற்ற போராட்டத்தின்போது பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
மதுரவாயலில் சின்ன நொளம்பூர் சாலையில், நியாய விலை கடை அருகே
அரசு மதுபான கடை கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ் சாலையில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் இந்த மதுக்கடை அமைந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களால் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது

தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: பிரதமர் மோடி தாக்கு

ஒசூர்: தமிழகத்தில் முதல் முறையாக பா.ஜ., 3வது சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நந்திவாடி பகுதியில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் தேர்தல் வித்தியாசமாக உள்ளது. ஜெ., மீது கோபமானால் கருணாநிதிக்கும், கருணாநிதி மீது கோபம் வந்தால் ஜெ.,வுக்கும் ஓட்டுப்போடுவோம். இதற்கு மாற்று இல்லாததே காரணம். தமிழகத்தில் முதல் முறையாக 3வது சக்தியாக பா.ஜ., வந்துள்ளது. தமிழக மக்கள் சோகமாக உள்ளார்கள். வருத்தமாக உள்ளார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது உதவி செய்தபோது, நான் வந்து உதவினேன். வெள்ள பாதிப்பின்போது கூட பா.ஜ., தொண்டர்கள் உதவி செய்தனர். தமிழகத்தின் நாளுக்கு நாள் நிலை தாழ்ந்து கொண்டே செல்கிறது

திமுகவை ஜெயிக்க விடக்கூடாது... முக்கிய நிர்வாகிகளை முடக்குங்கள் ... அம்மாவின் ஆணை!

விகடன்.com ;மிஸ்டர் கழுகு: ஜெ. ஜாலம்! எனக்கு ஓட்டு போட்டா எல்லாமே ஃப்ரீ... அக்னி நட்சத்திர வெப்பக்காற்று வெளுத்து வாங்குகிறதே??’’ என்றபடி வியர்க்க விறுவிறுக்க நுழைந்​தார் கழுகார். அவருக்காக ஏ.சி-யுடன் சேர்த்து ஏர் கூலரையும் ஆன் செய்தோம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், ஜெயலலிதாவின் அதிரடி தேர்தல் அறிக்கையை விவரிக்க ஆரம்பித்தார்.விருப்பமனு, வேட்பாளர் பட்டியல், பிரசாரம் என தேர்தலில் துள்ளல் பாய்ச்சல் காட்டுவது ஜெ. பாணி. ஆனால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா பதுங்கியிருந்தார். எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, களத்துக்குப்போய்விட்ட நிலையில் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. அ.தி.மு.க மட்டும் கடைசி வரையில் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. தமிழக தேர்தல் வரலாற்றில் தேர்தல் நெருக்கம் வரையில் எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது இல்லை. அ.தி.மு.க-வின் இந்த மௌனத்துக்குப் பின்னால் இருந்தது பயம் மட்டுமே. எல்லாத் தேர்தல் அறிக்கையையும் படித்துப் பார்த்துவிட்டு அதில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்துக்களையும் கோத்து மாயாஜால மாலையைக் கட்டியிருக்கிறார். செல்போன் தொடங்கி ஸ்கூட்டர் வரை மின்சாரம் தொடங்கி செட் ஆஃப் பாக்ஸ் வரை அத்தனையும் ஃப்ரீ. வைஃபை, இன்டர்நெட் லேப்டாப், பேங்கிங் கார்டு, சத்துணவில் காலை சிற்றுண்டி, கோ ஆப்டெக்ஸ் கிஃப்ட் வவுச்சர், லோக் ஆயுக்தா என ஜெ. ஜாலம் காட்டியிருக்கிறார்.’’

பிரியாமணி :இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவே எல்லாரும் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, ஆகவே பெண்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை ப்ரியாமணி. பருத்திவீரன் படத்தின் மூலமாக தேசிய விருது பெற்றவர் ‘முத்தழகு’ ப்ரியாமணி.
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த ப்ரியாணி, தமிழ் மட்டுமல்லாது  மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
விரைவில் ப்ரியாமணி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை ப்ரியாமணியும் தன் பங்கிற்கு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கந்து வட்டி இந்தியன் வங்கி ... கம்யுனிஸ்ட் மகேந்திரனின் வீடு ஜப்தி? மல்லியா ,அதானின்னா கொடுப்பாய்ங்க கேக்கவும் மாட்டாய்ங்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் வீட்டை ஜப்தி செய்வதாக வந்த அறிவிப்பால் ஆடிப்போயிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். 'கல்விக்கடனை செலுத்தவில்லை' எனக் காரணம் சொல்கிறது இந்தியன் வங்கி. இந்தியன் வங்கியில் தன்னுடைய மகளின் கல்விக்காக, 11 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன். மேற்கு மாம்பலத்தில் உள்ள தன்னுடைய வீட்டை லோன் பெறும்போது கணக்குக் காட்டினார். கடந்த மூன்று மாதங்களாக வங்கிக் கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, அவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நிர்வாகம் நேற்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. இதனால் வேதனையில் ஆழ்ந்திருக்கிறார் மகேந்திரன்.

ஆச்சாரியா : சட்டவிரோத பணத்தை அன்பளிப்பாக சசிகலாவுக்கு கொடுத்து பின்பு கடன் என்ற பெயரில் திரும்ப.....அய்யோ அய்யோ புரியல்லியே...

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா அதிரடியான வாதங்களை வைத்தார்.நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடந்து வரும் விசாரணையின் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ய்புள்ளது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தரப்பு வாதங்களுக்கு பதில் அளித்து வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா நேற்று தனது வாதத்தின் போது ஜெயலலிதா சட்டவிரோதமாக வந்த பணத்தை அவரது தோழி சசிக்கலாவுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கனடா அல்பேட்டா மாகாணத்தில் கடும் காட்டுத்தீ... ஊரை காலி செய்யும் போர்ட் மக்முரே மக்கள்

கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600 கட்டுமானங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறுகின்றனர்.

ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் என முடிவு செய்து ....உளவுத்துறை சொன்னதால் ஓட்டுக்கு 1,000 ரூபாய்....


சசிகலாவுக்காக உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர் நப்படேவிடம் ஜெ. தினமும் பேசுகிறார். டெல்லி பத்திரிகையாளர்கள் சிலர் நப்படேவிடம் ""தேர்தல் முடிவு பற்றி ஜெ. என்ன சொல்கிறார்'' என கேட்டபோது... ""தி.மு.க. மூன்றாவது இடத்தில்தான் வரும் என ஜெ. சொன்னார்'' என்றார் நப்படே. ஆனால் "உண்மை நிலவரத்திற்கும் ஜெ. சொல்வதற்கும் எந்தத் தொடர்புமில்லை' என்கிறார்கள் தமிழக போலீஸார்.தமிழக உளவுத்துறையின் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, கடந்தவாரம் ஜெ.வை சந்தித்தார். அவரிடம் ஜெ., தேர் தல் நிலவரம் பற்றி விசாரித்தார். சென்னை மாவட்டம் பற்றி கேட்டபோது ""ஆர்.கே.நகர், ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் அ.தி.மு.க. ஆதரவு நிலை பிரகாசமாக தெரிகிறது'' என்றார்

வடக்கு மண்டல 41 தொகுதிவாரி கருத்து கணிப்பு முடிவுகள் DMK 31,ADMK 10

சென்னை: வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. DMK lead to north Zone, says news7-dinamalar survey வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 31 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 10 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் விவரம் பின்வருமாறு: வேலூர் மாவட்டம்: 
காட்பாடி: அதிமுக - 40.0%, திமுக - 32.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாமக - 4.0%, 
ஆற்காடு: அதிமுக - 41.9%, திமுக - 36.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.3%, பாமக - 4.7%, 
 வேலூர்: அதிமுக - 37.1%, திமுக - 26.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாமக - 9.4 %, 
 அணைக்கட்டு: அதிமுக - 26.4%, திமுக - 25.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.3%, பாமக - 24.3%, 

ஜெயலலிதா ; தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்


சேலம்,: ''தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்,'' என, பெருந்துறையில், முதல்வர் ஜெயலலிதா பேசினார். விலை உயர்வு ஈரோடு, திருப்பூர் மாவட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: 'அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது' என, கருணாநிதி பொய் பிரசாரம் செய்கிறார். அகில இந்திய அளவிலான விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் உள்ளிட்டவைகளால், நாடு முழுவதும் விலை உயர்வு ஏற்படுகிறது.

NDTV அம்பலமாக்கியது: டுபாக்கூர் கம்பனிகளிடம் இருந்து வாங்கிய மிக்சி,கிரைண்டர் ,பேன்,மடிக்கணினி..... கமிஷன்?

ஜெயலலிதா அரசு வழங்கிய ஃபேன், கிரைண்டர், மிக்ஸி போன்றவை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வாங்கவில்லை என்றும், வியாபாரிகளிடமிருந்து வாங்கப்பட்ட தரமில்லாத பொருட்கள் என்று என்டிடிவி தொலைக்காட்சி ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா தனது பிரச்சாரக்கூட்டங்களில் எல்லாம் தனது அரசு ஏராளமான இலவசப் பொருட்களை கொடுத்திருப்பதாக பெருமை பேசிவருகிறார். சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலவசப்பொருட்களை வழங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆனால், அந்தப் பொருட்கள் அனைத்தும் குப்பைக்குப் போய்விட்டதாக பொதுமக்களும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

196 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் : திமுக 124 , அதிமுக 67 பாமக 2, தேமுதிக, பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி..

சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலத்தை போலவே வடக்கு மண்டலத்திலும் திமுகவே அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர்.
 முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து 
தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின. 
அதன்பின்னர் கிழக்கு மண்டல முடிவுகள் நேற்று வெளியாகின. 
 
மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 24 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 
 
இதேபோல தெற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 30 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 24 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வியாழன், 5 மே, 2016

சென்னை Live சோனியா: திமுக ஆட்சியில் ஏராளமான தொழில்கள் தமிழ்நாட்டுக்கு கலைஞர் கொண்டுவந்தார்.. ஆனால் அதிமுகவின் ஆட்சியில் ...?



திமுக ஆட்சியில் ஏராளமான தொழில்கள் தமிழ்நாட்டுக்கு கலைஞர் கொண்டுவந்தார்.. ஆனால் அதிமுகவின் ஆட்சியில் எல்லா தொழில்களும் வேறு வேறு மாநிலங்களை நோக்கி  ஓடி போகின்றன..   சோனியா காந்தியின் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார்
சென்னை தீவுத்திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: சகோதர சகோதரிகளே வணக்கம்.. சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது அதிமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை.  வரலாற்றில் இல்லாத பேரழிவை சந்தித்திருக்கிறீர்கள். இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தார்கள். மக்களே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். வெள்ளத்தை எதிர்த்து போராடிய உங்கள் மன உணர்வை நான் பாராட்டுகிறேன். மக்களே மக்களுக்காக உதவுகிற நிலைக்கு தள்ளிவிட்டது அதிமுக அரசு. 

வடக்கு மண்டலத்தில் 41 தொகுதிகளில் திமுக 31, அதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றும்...news 7 dinamalar

பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு முழு விவரம்: வடக்கு மண்டலம் இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, தினமலர் நாளிதழுடன் இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நேற்று கிழக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இன்று வடக்கு மண்டல முடிவுகள் வெளியாகியுள்ளன.
இன்று, வடக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 தொகுதிகளையும்,
அதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில், 6 தொகுதிகளில் அதிமுகவுக்கும், 7 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்...ம்ம்ம் ஜெயலலிதாவையே உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கிடலாம்ல..

சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடி வரும் நாகேஸ்வரராவை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு‘கொலிஜியம்‘ அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு பல ஆண்டுகளாக இருந்த ‘கொலிஜியம்‘ முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை, பாஜக அரசு அமைத்தது. இந்த முறையை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்தது.எப்போதும் போல ‘கொலிஜியம்‘ முறைப்படி நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிப்பார்கள் என்றும் கூறிவிட்டது.
அந்த தீர்ப்புக்கு பின்னர், 15 மாதங்கள் கழித்து இப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மொத்த விவசாய கடனும் அதானியின் வங்கி கடனும் ஒரே அளவு...

 பிடிஐ பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் குழுமங்களின் கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி, அதானி குழுமத்தின் கடன் மட்டும் ரூ.72,000 கோடி என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பவன் வர்மா தெரிவித்தார். அதாவது அதானி குழுமம் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை ரூ.72,000 கோடி ‘கற்பனை செய்து பார்க்க முடியாத தொகை’ என்று கூறிய பவன் வர்மா, இது நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் கடனுக்குச் சமமான தொகை இது என்று வெடிவைத்தார் “நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி, இதில் 1.4 லட்சம் கோடி 5 நிறுவனங்கள் பெற்றுள்ள தொகையாகும். லாங்கோ, ஜிவிகே, சுஸ்லான் எனெர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், மற்றும் அதானி குழுமம் மற்றும் அதானி மின்சாரம் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்குகிறது. இதில் ‘அதானி குரூப்’ என்று அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றின் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் தொகை மட்டும் ரூ.72,000 கோடி இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஏழுபேர்  அதானி அம்பானி போன்ற குஜராத்திகாரர்கள். 

அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்களால் ஆட்டம் காணும் மக்கள் நல கூட்டணி!

ன்னை: கருத்து கணிப்பு முடிவுகள், பிரசாரத்தில் சோர்வு போன்றவற்றால் மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் உற்சாகம் குறைந்துள்ளது. மக்கள் நல கூட்டணி மதுரையில் மாநாடு போட்டபோது நகரமே குலுங்கும் அளவுக்கு தொண்டர் படை வருகை தந்தது. தேமுதிக கூட்டணி அமைந்த பிறகு நடைபெற்ற வேடல் மாநாட்டிலும் குறை சொல்ல முடியாத கூட்டம் வந்தது. இருப்பினும் சமீபகாலமாக இக்கூட்டணியின் பிரசாரங்கள், தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்த தவறி வருகின்றன.
தனி ஆவர்த்தனம் விஜயகாந்த், வைகோ, முத்தரசன், வாசன் என கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு - விஜயகாந்த் பெருமிதம்

என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவிடம் உள்ளது போல் ஊழல் என்னிடம் இல்லை. கொள்ளையடிக்கும் திறமை இல்லை.நாங்கள் ஆறுகட்சியை சேர்ந்தவர்கள், என்றைக்குமே எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம் தான். எங்கள் ஆட்சி மக்கள் புரிந்துக்கொள்ளும் ஆட்சியாகத்தான் இருக்கும். அதிமுக, திமுக போன்று ரவுடிகளின் உருட்டுக்கட்டை ஆட்சி கிடையாது. நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.அதிமுகவும் - திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

கலைஞர் : திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது, உறுதியானது!

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது, உறுதியானது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஒரே மேடையில் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைமுகம்-திமுக வேட்பாளர் சேகர் பாபு, திரு.வி.க. நகர் தாயகம் கவி, கொளத்தூர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ்-திமுக இடையிலான உறவு ஆழமானது, உறுதியானது என்று தெரிவித்தார்.

சென்னையில் சோனியா ; அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு : சென்னையில் சோனியாகாந்தி பேச்சு சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் கலைஞர் ஆகியோர் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி பேசியபோது, ‘’சென்னையில் உள்ள மக்கள் பெருவெள்ளத்தால் சிக்கித் தவித்தபோது அவர்களுக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலைகளுக்கான காப்பீட்டு தொகையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காப்பீட்டு தொகை 4 வாரங்களில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் உறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி காப்பீட்டு தொகை வழங்கப் படவில்லை.
கடன் பிரச்சனையால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

Free School உயர்தர கல்வியை இலவசமாகவே தரும் ஒரு தனியார் ஸ்கூல் ... ஒரு உத்தமரின் சாதனை

திருச்சியிலிருந்து திண்டுக்கல் போற ரோட்டில் மணப்பாறை கிட்ட பயணம் செஞ்சப்போ இந்த ஸ்கூல பார்த்தேன்,
நல்ல கட்டமைப்போட இருந்த ஸ்கூல்,
ஆனா போர்டுல "ப்ரீ ஸ்கூல்னு" போட்டிருந்துச்சு,.....
ஆச்சர்யத்தோட இறங்கி சுத்தி பார்த்துட்டு பக்கத்துல விசாரிச்சப்போ சொன்னாங்க,
"இந்த ஊருல பிறந்து இப்போ சென்னையில இருக்குற ஒரு தொழிலதிபர் தன்னோட சொந்த ஊர்க் குழந்தைகள் இலவசமா தரமான கல்வி பெறனும்னு சொல்லி, இத ரொம்ப கவனம் எடுத்து கட்டி இருக்கிறார்னு",

அதிமுக, திமுகவுக்கு சவால் விடும் மதிமுக: தூத்துக்குடியில் மும்முனை போட்டி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு ஆளும் கட்சி என்ற பலம் வலு சேர்க்கிறது. அதேநேரத்தில் கடுமையான குடிநீர் பிரச்சினை, படுமோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவை மக்கள் மத்தியில் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விவிடி சிக்னல் மேம்பாலம், 1-ம் கேட்டில் சுரங்கப் பாதை, 2-ம் கேட்டில் மேம்பாலம் போன்ற முதல்வரால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாதது, 4-வது பைப்லைன் திட்டம் இன்னும் முழுமையாக முடிவடையாதது போன்றவை இவருக்கு பாதகமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளை மூட போராட்டம்.... மக்களை அடித்து நொறுக்கிய போலீஸ்


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் கொடூரமாகத் தடியடி நடத்தியதில் பெண்களின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர்.மேலும் பலர் மீது போலீசார் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம் கிடையாது, விவசாயக் கடன்கள் தள்ளுபடி: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-< அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். 2016-ல் மருந்து 2021-க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும. மீனவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது. அவிநாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும். பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும். வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.

Live: சோனியா காந்தி புதுச்சேரியில் நேரடி ஒளிபரப்பு Sonia Gandhi speech at election campaign in Pondicherry

புதுவையை ஆண்டுவரும் என்.ஆர்.காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசு என்றும், தொழில்நகரமாக இருந்த புதுவையில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து: Sonia campaigns in Puducherry -விவசாயிகளுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை -திமுக - காங். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் -மீனவர்களுக்கான திட்டங்களை ஆளும் அரசு, மத்திய அரசு முடக்கி விட்டது -புதுச்சேரியை மற்ற மாநிலங்களுடன் இணைப்பதை காங். எதிர்க்கும் -பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புதுவை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது -புதுச்சேரியின் தனித்தன்மையை பாஜக அரசு ஏற்க மறுக்கிறது -மத்திய அரசின் திட்டங்கள் புதுவை வர மன்மோகன் சிங் தான் காரணம் -புதுச்சேரிக்கு தேவையான ரயில் திட்டங்களை மத்திய பட்ஜெட் தரவில்லை -குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் தரும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது -புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலைக்கூட ஆளும்கட்சி நடத்தவில்லை -

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: தமிழகம், புதுச்சேரிக்கு தனித்தனி அறிக்கை

ஏராளமான சலுகைகள், அளவு கடந்த திட்டங்கள்...வாழ்வா சாவா என்ற அளவில் எல்லையே இல்லாத வாக்குறுதிகள் .   தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கை தான் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. மேலும் நாளை அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை வெளியிட, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக் கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாலைமலர்.com

4 ஐஏஎஸ் அதிகாரிகள் தயாரிக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை?

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அக்குழுவும் 3 முறை கூடியது. ஆனால் அறிக்கை வந்தபாடில்லை. இப்போது, உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து அறிக்கையை பெற்றுக் கொண்ட அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், அதை தலைமை செயலாளர் ஞானதேசிகனிடம் கொடுத்தார். தற்போது அவரது தலைமையில் நிதித்துறை செயலாளர் சண்முகம், சி.வி.சங்கர், வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் தேர்தல் அறிக்கையை தயாரித்தனர். அந்த அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, ஜெயலலிதாவிடம் அவர்கள் வழங்கி விட்டனர். இந்த அறிக்கைதான் வருகிற 6ம் தேதி வெளியாகிறது என்கின்றனர் அதிமுகவினர்.நக்கீரன்.in

2016 அடுத்த முதலமைச்சர் யார்? முகநூல் ஜோதிட கணிப்பு who is next chief minister of tamilnadu?

Sudhakar Chandra  facebook : :nteresting prediction :
2016 who is next chief minister of tamilnadu? Nature of planets says something!
1996 – 2006 – 2016 – election results (libra rasi – thulam rasi) – kalaignar win
1991 – 2001 – 2011 – election results jayalalitha win
The following past dates rasi which gives jayalalitha failures and arrest and resignation that is all are thulam rasi ………
25.3.1989 – thulam rasi – get out of assembly of tamilnadu
7.12.1996 – thulam rasi – jayalalitha arrested 1st time
21.9.2001 – thulam rasi – tansi case jayalaitha arrested and resigned his c.m. post
27.9.2014 – thulam rasi – Karnataka court judgement jayalalitha arrested and lost her c.m. post
2.5.1996 – thulam rasi - assembly election – jayalalitha team and jayalalitha also failed
11.5.2006 – thulam rasi – election result jayalalitha failed
19.5.2016 – thulam rasi - election result jayalalitha team ……………………….?
Nature of numbers what it says?
Jayalalitha birth : 24.2.1948 : (6 – 2 – 4 – 3 )
kalignar birth : 3. 6. 1924 : (3 – 6 – 7 – 7 )
numbers 3 and 7 which present in kalignar birth and fate number that is opposite reaction to jayalalitha who born in number 6 in date and fate is 3
jayalalitha born on number 6 is enemical to number 3 and jayalalithas fate numer 3 (24+2+1948 =30= 3) which is enemical to kalignar fate number 7 like (India = 12 =3 and Pakistan =25 =7)
the dates and fates having number 3 and 7 and fate number 6,7 which gave jayalalitha enemical reaults in past days….So now also same number follows which going to give jayalalitha ………………………. Results? 

சென்னை, புதுச்சேரியில் இன்று சோனியா, ராகுல் பிரசாரம் Sonia and Rahul campaign on May 5 and May 7 ...

தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வரும் காங்., தலைவர் சோனியா, பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மாலையில் சென்னை தீவுத்திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சோனியா ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். Tamil Nadu Congress Party President EVKS Elangovan sonia gandhi share with dias DMK President Karunanidhi on the occasion of Tamil nadu Elections 2016 Campaign Start today Coimbatore and Madurai Sonia Gandhi Election meeting VOC Grounds in Coimbatore and Madurai Chennai Live Telecast therthal Pracharam Sonia Gandhi and Rahul gandhi Speech Online Live Tamil News Channels Sun News, News7, 24×7 News, Captain News,Jaya Plus Lotus News Polimer News Puthiya Thalaimurai; Raj News DD national Social Media Net works Facebook, Twitter, Whats APP and YouTube.

ஏற்கனவே டாஸ்மாக் மூட தொடங்கியாச்சா? வினவு: மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2

karuru-tasmac-shutdown-campaign-3டாஸ்மாக் சாராயத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூகமே சீரழிந்து வருகிறது என்பதை நாடே அறியும். தற்பொழுது தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக உள்ளதால், மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு இறக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு. அதற்கு பலியான கரூர் டாஸ்மாக்கில் சென்ற வாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி, ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா என்று தினம் தினம் டாஸ்மாக்
சாராயத்திற்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் ராயனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 4952) கடையை அகற்றக் கோரி, முதல் கட்டமாக ராயனூர் சுற்றுவட்டாரப் பகுதியான தில்லைநகர், எம்.ஜி.ஆர்.நகர், அன்புநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ராயனூர் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு தமிழக பாஜக எதிர்ப்பு .... ஆனால் மோடி ஆதரவு? பா ஜ க வின் மோடி வித்தை..


நேற்று வந்த நமிதாவுக்கு ரொம்ப மரியாதை ... வருஷக்கணக்க  இருக்கிற இந்த அதிமுக அடிமைகளுக்கு ?
 பொன்.ரா உள்ளிட்ட தமிழக பாஜகவினர் ஜெயாவின் தேர்தல் அத்துமீறல்களை..அராஜகங்களை கடுமையாக சாடுகின்றன அனால் அதே வேளையில் .... மோடியும்...அருண் ஜைட்லியும்... ஜெயாவிற்கு எல்லாவிதமான பாதுகாப்பும் தந்துகொண்டு இருக்கிறார்கள் ...
தலைமை செயலர் முதல் தாசில்தார் வரை எல்லா அரசு அதிகாரிகளும் அதிமுக தேர்தல் பணியை நேரடியாக செய்கின்றார்கள்.. பல்லாயிரம் கோடிகள் காவல்துறை வாகனங்கள்
மூலமாகவே கடத்தப்படுகின்றன...
பறக்கும் படை வருமானவரித்துறையினர் செய்த சோதனைகள் அவற்றில் சிக்கிய ஆதாரங்கள் அழிக்கப் படுகின்றன அல்லது மறைக்கப் படுகின்றன...
இது வரை அவை குறித்து ஒரு கைது இல்லை வழக்கு பதிவு செய்யவில்லை ..............சி பி ஐ விசாரணை இல்லை ...ஏன் ? ஏன் ?< இந்த அக்ரமங்களுக்கு ஜெயாவுக்கு துணை நிற்பது மோடி அரசுதானே !..
ஜெய மோடியின் அனுமதியோடுதான்...மோடியின் துணையோடுதான் இதனை அராஜகங்களை துணிந்து செய்கிறார் என்பது ஊர் அறிந்த செய்தி...
பா.ஜ .க.வில் ... மோடியை விட அதிக செல்வாக்குள்ள பாஜக பெருந்தலைவர்....ஜெயா தான் என்பது யாவரும் அறிந்ததே
வாழ்க ஜனநாயகம்.Damodaran Chennai"facebook

சமஸ்: சுயநலம் ஒன்றையே நோக்கமாக கொண்ட மாணவர்களையே நாம் உருவாக்குகிறோம்....

மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.