சனி, 7 மே, 2016

ராகுல்: ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

மதுரை: தான் மட்டும் அறிவாளி என நினைக்கும் முதல்வர் தான் ஜெயலலிதா என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் முதல்வர் தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் இன்று தமிழகம் வருகை தந்தார். மதுரையில் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி வணக்கம் என தமிழில் கூறி தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த மேடையில் ஸ்டாலினுடன் இணைந்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி. நாங்கள் இரு கட்சிகளும் ஒரே நோக்கத்துக்காக, ஒரே லட்சியத்துக்காக இணைந்து செயல்படுகிறோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

தலைவர்கள் முட்டுக்கட்டை நாட்டிலேயே தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்திருக்கக் வேண்டும். ஆனால், இங்கிருக்கும் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். இதனால் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஜெயலலிதா பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் மக்களை சந்திக்கும் முதல்வர்களாக இருந்தனர்.ஆனால், தற்போதைய முதல்வர் யாரையும் சந்திப்பதில்லை. உலகிலேயே தான் மட்டும் தான் அறிவாளி என நினைக்கும் முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார்.
முடங்கிய முதல்வர் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ஒரு முதல்வர் தமிழகத்துக்கு தேவையில்லை. வெள்ள பாதிப்பின் போது மக்களை சென்று சந்திக்காத முதல்வர் தேவையில்லை. வெள்ள பாதிப்பின் போது, மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் டெல்லியில் இருந்து இங்கு வந்தேன். ஆனால், ஜெயலலிதா மக்களை சந்திக்கவில்லை.
மதுக்கடைகளால் பாதிப்பு மதுக்கடைகளால் தேனி மாவட்ட சிறுமி ஆதரவற்றவாரக மாறியிருக்கும் அவல நிலை இங்கு உருவாகியுள்ளது. மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 6800 மதுக்கடைகள் உள்ளன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வாங்கும் ஆட்சியாளர்கள் எதிர்கட்சிகளை நசுக்கும் சக்தியாக அதிமுக விளங்குகிறது. தமிழகம் பின்தங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளது. தமிழகத்துக்கு முதலீடுகள் வரவில்லை, ஏனெனில் இங்கு தொழில் தொடங்க வேண்டுமெனில் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், தமிழகம் வளர்ச்சியடையவில்லை என்றார்.
நிலமற்ற விவசாயிகள் காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி கனவுகண்ட மாநிலம் இதுவல்ல. நிலமற்ற விவசாயிகள் நிறைந்திருந்த மோசமான மாநிலமாக தமிழகம் உள்ளது. 60 சதவிகித தலித் மக்கள் நிலமற்ற ஏழைகளாக உள்ளனர். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. தமிழகத்தை முதல் மாநிலமாக வளர்ச்சியடையச் செய்வோம்.
விவசாயிகளுக்கு பென்சன் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், வேலை தேடி தமிழ்நாட்டு இளைஞர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லத் தேவையில்லை. விவசாயிகள் பெற்ற கடனை எல்லாம் நாம் ரத்து செய்வோம் 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு ரூ. 2000 பென்சன் தரப்படும்.
ஊழலற்ற அரசு அமைப்போம் இலவசங்களை கொடுத்து மது மூலம் வருமானத்தை பறித்துக் கொண்டார் ஜெயலலிதா என்று குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம். ஊழலில் ஊறிப்போன இந்த மாநிலத்தில் ஊழலற்ற ஒரு அரசை தருவோம் என்றும் தெரிவித்தார்.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக