வியாழன், 5 மே, 2016

100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம் கிடையாது, விவசாயக் கடன்கள் தள்ளுபடி: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-< அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். 2016-ல் மருந்து 2021-க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும. மீனவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது. அவிநாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும். பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும். வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.


மீனவர்களுக்கு தனித்தனி வீடுகள் கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.  வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக