வெள்ளி, 6 மே, 2016

தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: பிரதமர் மோடி தாக்கு

ஒசூர்: தமிழகத்தில் முதல் முறையாக பா.ஜ., 3வது சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நந்திவாடி பகுதியில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் தேர்தல் வித்தியாசமாக உள்ளது. ஜெ., மீது கோபமானால் கருணாநிதிக்கும், கருணாநிதி மீது கோபம் வந்தால் ஜெ.,வுக்கும் ஓட்டுப்போடுவோம். இதற்கு மாற்று இல்லாததே காரணம். தமிழகத்தில் முதல் முறையாக 3வது சக்தியாக பா.ஜ., வந்துள்ளது. தமிழக மக்கள் சோகமாக உள்ளார்கள். வருத்தமாக உள்ளார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது உதவி செய்தபோது, நான் வந்து உதவினேன். வெள்ள பாதிப்பின்போது கூட பா.ஜ., தொண்டர்கள் உதவி செய்தனர். தமிழகத்தின் நாளுக்கு நாள் நிலை தாழ்ந்து கொண்டே செல்கிறது


தற்போது எந்த கட்சி ஜெயிக்கும் என்பது முக்கியமில்லை. தமிழகத்தை யார் காப்பாற்றுவர்கள் என்ற முக்கிய விஷயத்தை வைத்து தான் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் காரணமாக தமிழகம் முற்றிலும் பாதித்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற, இளைஞர்களை கா்பபாற்ற இந்த முறை பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் நாங்கள் லஞ்சத்தை அனுமதிக்க மாட்டோம். இன்று இருக்கும் அரசியல்வாதிகள் லஞ்சம் லாவணியத்தில் மூழ்கியுள்ளனர். அதை பற்றி கவலைப்படுவதில்லை. இன்று பா.ஜ.,வின் ஆட்சி 2 வருடத்தில் லஞ்சம் ஊழல் என்ற புகார் இல்லை.சிலர் லஞ்சத்தோடு இணைத்து வாழ்ந்து கொண்டுள்ளனர். நம் மனதில் நியாயமான விஷயமிருந்தால் லஞ்சம் ஒழித்து கட்ட முடியும்.

கடந்த காலத்தில் பத்திரிகையை பார்த்தால் கோடிகணக்கில், லட்ச கணக்கில் லஞ்சம் ஊழல் செய்தி வந்தது. இரண்டு ஆண்டுகளாக இது போன்ற செய்தி வருவதில்லை
காங்., அரசில் ரூ.1.76 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் லட்சகணக்கான பணம் ஊழலாக போனது. பா.ஜ.,அரசுக்கு வந்த பின் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக செல்வதில்லை அனைவருக்கும் நினைத்தநேரத்தில் நிலக்கரி கிடக்கிறது. நியாயமான முறையில் நிலக்கரி உற்பத்தி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. லஞ்சத்தை ஒழித்து நாட்டை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நிலக்கரி ஏலம் மூலம் கிடைக்கும் பணம் ஏழைகளுக்கு செல்கிறது. 2ஜி ஊழலில் தொடர்புடையவர்கள் தமிழகத்திலிருந்து டில்லிக்கு வந்தவர்கள். 2ஜி 3ஜியில் ஊழல் செய்தது காங்கிரஸ் தான். 2ஜி 3ஜி ஏலம் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் முறையான ஏலம் மூலம் அலைக்கற்றை விற்பனை செய்யப்படுகிறது.

நான் ஆட்சிக்கு வந்த புதிதில் அதிக முதல்வர்கள், சரியாகஉரம் கிடைப்பதில்லை எனக்கூறி கடிதம் எழுதினர். உரத்தின் மீதான கட்டுப்பாடு வந்த பின்னர் உரம் கேட்டு கடிதம் எழுதுவதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் உரம் சரியாக சென்று கொண்டுள்ளது. கள்ளச்சந்தையில் உரம் வாங்கும் நிலையை மாற்றியுள்ளோம். உரத்தில் உள்ள முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது. காஸ் மானியம் வழங்குவதில் ரூ.21 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. காஸ் மானிய பணம் நேரடியாக வழங்கப்பட்டு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த மழையும் பா.ஜ.,வை ஜெயிக்க வைக்க ஆசி வழங்கவே வந்துள்ளது.

அரசு வேலைக்கு இடங்களை விற்று அரசியல்வாதிகளுக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டது. தற்போது இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது.அரசு வேலை கிடைப்பதில் முறைகேடு ஒழிக்கப்பட்டது தகுதி அடிப்படையில் வேலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். அரசு வேலைக்கு நேர்காணல் இல்லைஎன்று நிலையை ஒழித்துள்ளோம். ஓட்டைகள் அடைக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் வேலை செய்ய விடுவதில்லை. தமிழக மக்களின் ஆசி இருக்கும் வரை பயப்பட மாட்டேன். பின்வாங்க மாட்டேன்.

கடந்த ஆட்சியில் இருப்பவர்களை ஊழல்வாதிகள் என இத்தாலியில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும். முந்தைய ஆட்சியாளர்களின் இத்தாலிய உறவினர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஊழல் வெளிவந்துள்ளது.ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கான வங்கிக்கதவுகள் திறக்கப்பட்டன. மக்கள் இந்த முறை பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக்கூறினார்  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக