வியாழன், 5 மே, 2016

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: தமிழகம், புதுச்சேரிக்கு தனித்தனி அறிக்கை

ஏராளமான சலுகைகள், அளவு கடந்த திட்டங்கள்...வாழ்வா சாவா என்ற அளவில் எல்லையே இல்லாத வாக்குறுதிகள் .   தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கை தான் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. மேலும் நாளை அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை வெளியிட, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக் கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக