வியாழன், 5 மே, 2016

வடக்கு மண்டலத்தில் 41 தொகுதிகளில் திமுக 31, அதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றும்...news 7 dinamalar

பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு முழு விவரம்: வடக்கு மண்டலம் இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, தினமலர் நாளிதழுடன் இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நேற்று கிழக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இன்று வடக்கு மண்டல முடிவுகள் வெளியாகியுள்ளன.
இன்று, வடக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 தொகுதிகளையும்,
அதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில், 6 தொகுதிகளில் அதிமுகவுக்கும், 7 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


இதுபோல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும், வானூர் தனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், புவனகிரி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரண்டாமிடமே கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இதுபோல், காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மூன்றாமிடமே கிடைக்கும் எனவும், அத்தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக