வெள்ளி, 6 மே, 2016

ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் என முடிவு செய்து ....உளவுத்துறை சொன்னதால் ஓட்டுக்கு 1,000 ரூபாய்....


சசிகலாவுக்காக உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர் நப்படேவிடம் ஜெ. தினமும் பேசுகிறார். டெல்லி பத்திரிகையாளர்கள் சிலர் நப்படேவிடம் ""தேர்தல் முடிவு பற்றி ஜெ. என்ன சொல்கிறார்'' என கேட்டபோது... ""தி.மு.க. மூன்றாவது இடத்தில்தான் வரும் என ஜெ. சொன்னார்'' என்றார் நப்படே. ஆனால் "உண்மை நிலவரத்திற்கும் ஜெ. சொல்வதற்கும் எந்தத் தொடர்புமில்லை' என்கிறார்கள் தமிழக போலீஸார்.தமிழக உளவுத்துறையின் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, கடந்தவாரம் ஜெ.வை சந்தித்தார். அவரிடம் ஜெ., தேர் தல் நிலவரம் பற்றி விசாரித்தார். சென்னை மாவட்டம் பற்றி கேட்டபோது ""ஆர்.கே.நகர், ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் அ.தி.மு.க. ஆதரவு நிலை பிரகாசமாக தெரிகிறது'' என்றார்

சத்தியமூர்த்தி."ஈரோடு முத்து சாமி எப்படி' என ஜெ. கேட்க, ""அவர் ஜெயித்து விடுவார் என மாவட்ட உளவுத்துறையினர் சொல் கிறார்கள்'' என்ற சத்திய மூர்த்தியிடம் மதுரை, கோவை, கன்னியாகுமரி பற்றி கேட்க, "அனைத் திலும் போராட்டம்தான்' என சத்தியமூர்த்தி பதில் சொல்ல, மவுனமாக எந்த ரியாக்ஷனும் காட்டாத ஜெ., மக்கள் நலக் கூட்டணி மற்றும்  பா.ம.க. பற்றி கேட்டார் ""மக்கள் நலக் கூட்டணிக்கு திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயிலில் பிரகாச மாக இருக்கிறது. வைகோ மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சாரங்கள் எடுபடவில்லை. பா.ம.க.வின் வேட்பாளர்கள் ஓட்டுக்களைப் பிரிக்கிறார்கள். அந்தத் தொகுதி களில் தி.மு.க., அ.தி.மு.க.வினர்தான் வெற்றிபெறுவார்கள்'' என்ற சத்திய மூர்த்தியிடம், ""ஒட்டுமொத்தமாக உங்களது கணிப்பு என்ன?'' என ஜெ. கேட்க... ""காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது'' என்றார். "தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும்' என கேட்டதற்கு... ""தி.மு.க. கூட்டணிக்கு 110 தொகுதிகள், அ.தி.மு.க.வுக்கு 90 இடங்கள், பா.ம.க.வுக்கு வாய்ப்புள்ள தொகுதிகள் தவிர்த்து, மற்றவற்றில் கடும்போட்டி'' எனச் சொன்னார். ""இதற்கு என்ன காரணம்'' என ஜெ. கேட்க, ""அ.தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்பது நிரந்தரம் இல்லை என்ற சூழல் நிலவியது. அதனால் அ.தி.மு.க. வேட்பாளர்களிடம் பணம்  செலவு செய்வதில் தயக்கம் காட்டியதோடு, வாக்கு கேட்கப் போவதற்கும் தயங்கினார்கள். அதனால் பெரிய அளவிற்கு சுணக்கம் ஏற்பட்டி ருக்கிறது'' என்ற சத்தியமூர்த்தியிடம் கோபத்தில் வெடித்தார் ஜெ. "பண விநியோகத்தில் உளவுத் துறை சரியாக ஒத்துழைக்கவில்லை' என்ற கோப வார்த்தைகளும் வெளிப்பட்டதாம். ஜெ.வுக்கு பண விநியோகத்தில் பக்கபலமாக செயல்பட்ட சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரை மே-1ந் தேதி தேர்தல் கமிஷன் அதிரடியாக மாற்றியது. 2014 பாராளுமன்றத் தேர்த   லில் பண விநியோகத்தை வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் செய்து முடித்தவர் ராஜேந்திரன். இப்போது ராஜேந்திரன், திரிபாதி, தாமரைக்கண்ணன் ஆகிய மூவரும்தான் பண விநியோக நெட் வொர்க்கை கவனித்து வந்தார்கள் என்கிறது காவல்துறை மேல் மட்டம். இந்த மூவரில் தற்பொழுது பதவியில் இருக்கும் வடக்கு மண்டல ஐ.ஜி.யான தாமரைக்கண்ணன் மூலம் "வட மாவட்டங்களில் பண விநியோகத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என கார்டன் உத்தரவிட்டது.
இதுபற்றி பண விநியோகத்திற்கு பொறுப் பேற்றுள்ள அ.தி.மு.க. குழுவினர் நம்மிடம் விளக்கினார்கள். ""கடந்த வாரத்தில் ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் என முடிவு செய்து ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு பத்துகோடி என முடிவு செய்திருந்தது அ.தி.மு.க. தலைமை. கட்சிக்கான நிலைமை சரியில்லை என உளவுத்துறை சொன்ன தால் ஓட்டுக்கு 1,000 ரூபாய் தரலாம் என முடிவு செய்தது. பா.ம.க. பெல்ட்டில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே மிகக்கடுமையான போட்டி நிலவும் திருப்பத்தூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆரணி, போரூர், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் போன்ற தொகுதிகளில் ஓட்டுக்கு 1500 ரூபாய் தரலாம் என முடிவு செய்தது. இந்தப் பணம் கட்சிக்காரர் களான தொழிலதிபர்கள், கல்லூரி அதிபர்களிடம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நான்கு இடத்தில் பணத்தை பாது காப்பாக வைக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் வீரமணி போட்டி யிடும் ஜோலார் பேட்டை தொகுதி யில்தான் முதல் பண விநியோகம் தொடங்கியுள்ளது. வீரமணிக்கு நெருக்கமான ஏழுமலை என்பவருக்குச் சொந்த மான கூரை வீட்டில் பணம் வைக்கப்பட்டுள் ளது. தினமும் அங்கிருந்து கோடியூர் என்ற இடத்தில் உள்ள இரண்டு பெட்ரோல் பங்க்குகளுக்கு எடுத்து வரப்பட்டு அங்கி ருந்து தினமும் மாலை கட்சிக்காரர்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டிருந்தது. இரவில் கட்சிக் காரர்களுக்கு வழங்கப்படும் பணத்தை, விடியற்காலை 4 மணி தொடங்கி 6 மணிக் குள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாசல் தெளித்து கோலம் போடும் பெண்களிடம் பணக் கவரை தருகிறார்கள். "மகாலட்சுமி வீட்டுக்கு வந்த காலை வேளையில் வரும் பணத்தை வேண்டாம் என சொல்லாதீங்க... இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க' என தரப்படும் பணத்தை தவிர்க்க முடியாமல் வாங்கிக்கொள்கிறார்கள் பொதுமக்கள் என அ.தி.மு.க.வின் பண விநியோகத்தைப் பற்றி விளக்கினார்கள் அ.தி.மு.க.வினர்.""பெட்ரோல் பங்க்கிலிருந்து பணம் விநியோ கம் செய்யப்படுவது, அதற்குப் பக்கத்திலேயே தினமும் காரை நிறுத்தி சோதனை செய்யும் தேர்தல் பறக்கும் படை போலீசுக்கு நன்றாகவே தெரியும். வட மாவட்டங்களில் ஐ.ஜி. தாமரைக் கண்ணன் டீம் ஃப்ரீயாக பண விநியோகத்தில் ஈடுபடுவதால் அங்கிருந்துதான் தென் மாவட் டங்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது.சமீபத்தில் வேலூரிலிருந்து எஸ்.பி.  பகலவன் நியமித்த டீம் ஒன்று திருவண்ணாமலை, திருக்கோவிலூர், மடப்பட்டு வழியாக ஒரு தனியார் பேருந்தில் 100 கோடி ரூபாய் கொண்டு சென்றார்கள். அந்தப் பேருந்தை இரண்டு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தார்கள். அந்த பறக்கும் படையிடம் ஐ.ஜி. தாமரைக்கண்ணனும், எஸ்.பி.பகலவனும் போனில் பேச... சல்யூட் அடித்து நூறு கோடி ரூபாயை அனுப்பி வைத்தார்கள்'' என்கிறார்கள் வேலூர்க்காரர்கள்.""பண விநியோகத்தில் அ.தி .மு.க.விற்கு கை கொடுக்கும் தாமரைக் கண்ணன், அவருக்குக் கீழ் இயங்கும் வேலூர் எஸ்.பி. பகலவன், காஞ்சிபுரம் முத்தரசி, திருவள்ளூர் எஸ்.பி. சாம்சன், கடலூர் எஸ்.பி. விஜயகுமார் உட்பட வட மாவட்ட எஸ்.பி.க்கள் படையுடன் வட மாவட்டங்களில் பண விநியோகத்தைக் கவனித்தார்கள். இவர்கள் மூலம் தென் மாவட்டங்களுக்கும் பணம் போகிறது'' என்கிறது கார்டன் வட்டாரம்.
தேர்தல் கமிஷன் அதிரடியாக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி., கலெக்டர்கள் என அதி காரிகளை மாற்றுவதற்குக் காரணம், டெல்லியில் உள்ள சர்மா என்கிற இணை தலைமைத் தேர்தல் ஆணையாளர்தான் என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் பேசிய சர்மா, ""தமிழக தேர்தலில் பண விநியோகம் மும்முர மாக உள்ளது. அதை அனுமதிக்க முடியாது''  என கடுமையாகப் பேசினார். அவர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு தமிழகத்தில் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிகாரிகளும்   பண விநியோகம் பற்றி அளிக்கும் புகார்களை உடனுக்குடன் சொல்வதோடு, அதுபற்றி மத்திய உளவுத்துறை அளிக்கும் அறிக்கைகளைக் கொடுக்கிறார். அதன் அடிப்படையில் நஜீம் ஜைதி அதிகாரிகளை மாற்றுகிறார். இதெல்லாம் டெல்லி உத்தரவு'' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சொல்லிவருகிறார் என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதி காரிகள்.தேர்தல் டி.ஜி.பி. யாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட, இவ ரிடம்தான் போலீசார் ரிப்போர்ட் தரவேண்டும் என தேர்தல் ஆணை     யம் உத்தரவிட்டது. அதுபோல உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக கரன் சின்ஹாவை நியமித்து, அவ ரிடமும் ரிப்போர்ட் தர உத்தர விட்டது. கரூர், திருவாரூர், திருவண்ணாமலை, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சென்னையின் புதிய கமிஷனரான அசுதோஷ் சுக்லாவும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவும் நியமிக்கப் பட்டனர்.
டி.கே.ராஜேந்திரன், திரிபாதி போன்ற தோதான அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பந்தாடியதால் செம கடுப்பான ஜெயலலிதா, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மூலம், தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என மனு கொடுக்கச் செய்தார் ஜெ. கடைசி அஸ்திரமான பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை ஜெ.வை டென்ஷனாக்கினாலும், புது ரூட்டுகள் ஆராயப்படுகின்றன.""பண விநியோகத்திற்கான வழிமுறை கடினமாகிவருவதால் அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது. சோனியா, மோடி போன்ற தேசிய தலைவர்கள் வரும் நேரத்தில் தேர்தல் அறிக்கை வெளி            யிட்டு பரபரப்பு ஏற்படுத்தலாமா? என யோசித்து வரும் ஜெ., தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் ரத்து, கொள்முதல் விலை அதிகரிப்பு, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு ஆகியவற்றோடு வீட்டுக்கு ஒரு சிலிண் டர், வீட்டுக்கு  சமையல் பாத்திரங்கள்... என தேர்தல் அறிக்கையில் சேர்க்க ஆலோசனை நடந்தது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

-தாமோதரன் பிரகாஷ்,ராஜா
அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக