வெள்ளி, 6 மே, 2016

ஜெயலலிதா ; தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்


சேலம்,: ''தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்,'' என, பெருந்துறையில், முதல்வர் ஜெயலலிதா பேசினார். விலை உயர்வு ஈரோடு, திருப்பூர் மாவட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: 'அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது' என, கருணாநிதி பொய் பிரசாரம் செய்கிறார். அகில இந்திய அளவிலான விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் உள்ளிட்டவைகளால், நாடு முழுவதும் விலை உயர்வு ஏற்படுகிறது.

இந்த கொள்கைகள் அனைத்தும், மத்திய அரசு நிர்ணயிப்பதாக உள்ளது. இருப்பினும், மக்களை பாதுகாக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து, ஏழை - எளிய மக்களை,
அ.தி.மு.க., அரசு காப்பாற்றி வருகிறது.
டீசல், பெட்ரோல் விலை சர்வதேச அளவில் குறைந்தபோதும், அதன் மீதான கலால் வரியை அதிகரித்து, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. ஆனால், இதுவரை தமிழக அரசு, அதன் மீதான வரியை உயர்த்தவே இல்லை. மூடுவிழா நடத்த திட்டம் 'அம்மா' உணவகத்தால், தி.மு.க.,வினரின் ஓட்டல்களும், அம்மா குடிநீர் திட்டத்தால், தி.மு.க.,வினரின் மினரல் வாட்டர் நிறுவனங்களும் பாதிக்கப்படுவதால், அவற்றுக்கு மூடுவிழா நடத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
சிமென்ட் குறைந்த விலையில் வழங்கப்படும் திட்டம், சலுகை விலையில் மருந்து வழங்கும் திட்டம் உள்ளிட்டவை, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் இல்லை. எனவே, தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து
விடாதீர்கள். ஊழல் கூட்டணியான தி.மு.க., - காங்., அணியினர் ஓட்டு கேட்க வந்தால், விரட்டி அடியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சலுகை கணக்கு ஒரு முறை செலவு

மொபைல் போன் - ரூ.2,000 கோடி
விவசாய கடன் தள்ளுபடி - ரூ.5,500 கோடி
செட்டாப் பாக்ஸ் - ரூ.1,500 கோடி
ஸ்கூட்டர் - ரூ.45,000 கோடி
மொத்தம் - ரூ.54,000 கோடி


ஆண்டு செலவு

இலவச இன்டர்நெட் - ரூ.204 கோடி
பரிசு கூப்பன் - ரூ.1,000 கோடி
காலை சிற்றுண்டி - ரூ.600 கோடி
ஆவின் பால் - ரூ.8,858 கோடி
மின்சாரம் - ரூ.1,180 கோடி
தங்கம் - ரூ.148 கோடி



ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் - ரூ.11,990 கோடி
5 ஆண்டுகளுக்கு மொத்தம் - ரூ. 59,950 கோடி
ஆக மொத்தம், ஐந்தாண்டுகளில், 1.14 லட்சம் கோடி ரூபாய்க்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஏறத்தாழ 2 கோடி ரேஷன்
கார்டுகள் உள்ளன. அதன்படி, ஒவ்வொரு கார்டுக்கும் ஏறத்தாழ 11,000 ரூபாய்க்கான சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும், ஐந்தாண்டு களுக்கு கிடைக்கும். தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக