வியாழன், 5 மே, 2016

4 ஐஏஎஸ் அதிகாரிகள் தயாரிக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை?

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அக்குழுவும் 3 முறை கூடியது. ஆனால் அறிக்கை வந்தபாடில்லை. இப்போது, உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து அறிக்கையை பெற்றுக் கொண்ட அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், அதை தலைமை செயலாளர் ஞானதேசிகனிடம் கொடுத்தார். தற்போது அவரது தலைமையில் நிதித்துறை செயலாளர் சண்முகம், சி.வி.சங்கர், வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் தேர்தல் அறிக்கையை தயாரித்தனர். அந்த அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, ஜெயலலிதாவிடம் அவர்கள் வழங்கி விட்டனர். இந்த அறிக்கைதான் வருகிற 6ம் தேதி வெளியாகிறது என்கின்றனர் அதிமுகவினர்.நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக