சனி, 7 மே, 2016

ராகுல் காந்தி இன்று சென்னை மதுரை கோவையில் பிரசாரம்...

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், இன்று ஒரே நாளில், சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் இன்று, தமிழகத்தில் சூறவாளி பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரையில் ராகுல், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
அடுத்து, கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், ராகுல், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.இந்த இரு இடங்களிலும் பேசி முடித்து விட்டு, சென்னைக்கு வரும் ராகுல், மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வானகரத்தில், இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கும், பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், காங்.,தலைவர் இளங்கோவன் பேசுகின்றனர்.- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக