வெள்ளி, 6 மே, 2016

NDTV அம்பலமாக்கியது: டுபாக்கூர் கம்பனிகளிடம் இருந்து வாங்கிய மிக்சி,கிரைண்டர் ,பேன்,மடிக்கணினி..... கமிஷன்?

ஜெயலலிதா அரசு வழங்கிய ஃபேன், கிரைண்டர், மிக்ஸி போன்றவை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வாங்கவில்லை என்றும், வியாபாரிகளிடமிருந்து வாங்கப்பட்ட தரமில்லாத பொருட்கள் என்று என்டிடிவி தொலைக்காட்சி ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா தனது பிரச்சாரக்கூட்டங்களில் எல்லாம் தனது அரசு ஏராளமான இலவசப் பொருட்களை கொடுத்திருப்பதாக பெருமை பேசிவருகிறார். சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலவசப்பொருட்களை வழங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆனால், அந்தப் பொருட்கள் அனைத்தும் குப்பைக்குப் போய்விட்டதாக பொதுமக்களும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் என்டிடிவி தொலைக்காட்சி இந்த பொருட்கள் வாங்கப்பட்ட விதம் குறித்து ஆதாரங்களை சேகரித்தது. அப்போது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லெனோவா லேப்டாப் மட்டுமே சீனத் தயாரிப்பு என்று தெரியவந்துள்ளது.
ஆனால், இலவசப் பொருட்களில் மிக அதிகபட்சமாக சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி வினியோகிக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைதான் தரமற்றவை.
இந்த பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் உற்பத்தி நிறுவனங்களின் பெயர்களே இல்லை. அதற்குபதிலாக வரிசை எண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு உணவுப்பொருள் வினியோகக் கழகம் இந்தப் பொருட்களை பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கடுமையான விதிகளுக்கு உட்பட்டு பெற்றதாக கூறியது. விலையை மட்டும் கவனிக்காமல், நிறுவனத்தின் உற்பத்தித் திறன், அவற்றின் வங்கிக்கணக்கு விபரங்கள், கடந்தகால செயல்பாடுகள் ஆகியவற்றை விசாரித்தே பொருட்கள் வாங்கப்பட்டதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பொருட்கள் வாங்கியதாக அவர்கள் 15லிருந்து 20 கம்பெனி பெயர்களை அவர்கள் கூறினார்கள். அந்தப் பெயர்களில் சுமார் 12 பெயர்களை என்டிடிவி சோதித்துப்பார்த்து. ஃபேன் வினியோகித்ததாக கூறப்படும் சில நிறுவனங்களில் இரண்டு மட்டுமே உருப்படியான் நிறுவனமாக இருந்தது.
ஹைதராபாத்தில் உள்ள யாஷ் இண்டர்நேஷனல் மற்றும் ஏரோவேர் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களே அவை. ஆனால், இரண்டுக்கும் இயக்குனர் ஒருவராக இருந்தார்.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தை ஆய்வு செய்ததில் பலதரப்பட்ட ஃபேன்களை அவர்கள் உற்பத்தி செய்வது தெரியவந்தது. நிறுவனத்துடன் என்டிடிவி குழு பேசியபோது, தமிழக அரசுக்கு ஃபேன் வினியோகித்ததை அவர்கள் உறுதி செய்தனர்.
ஆனால், மற்ற பெயர்கள் இப்படி அல்ல. உதாரணத்துக்கு சென்னையைச் சேர்ந்த அருணாச்சலா இம்பெக்ஸ் மற்றும் பாரத் அக்ரி இண்டர்நேஷனல் டிரேடிங் லிமிடெட் ஆகியவை மிக்ஸி மற்றும் ஃபேன் வினியோக ஒப்பந்தத்தை பெற்றுள்ளன.
வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு கொண்ட அருணாச்சலா டிரேடிங்கும் மற்றும் பாரத் அக்ரியும் தங்களை வியாபார நிறுவனங்களாக கூறிக்கொண்டு மிக்ஸி, ஃபேன் போன்ற பொருட்களை உற்பத்தியாளரிடம் இருந்து பெற்று மாநில அரசுக்கு வினியோகித்துள்ளன.
“நாங்கள் பருப்பு வகையிலிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள், ஜியோமெட்ரி பாக்ஸ்கள் வரை வியாபாரம் செய்வதாக அருணாச்சலா டிரேடர்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாரிடமிருந்து இந்தப் பொருட்களை பெற்றீர்கள் என்று என்டிடிவி கேட்டதற்கு பாரத் அக்ரி பதில் சொல்ல மறுத்துவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வினியோகக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, சில பொருட்களை வினியோகிக்கும் உரிமை உற்பத்தியாளர்களுடன் பார்ட்னராக இருந்த வியாபாரிகளுக்கும் தரப்பட்டது என்று கூறினார்கள். மிக்ஸி, ஃபேன் ஆகியவை அனைத்தும் சீனத் தயாரிப்புப் பொருட்கள் என்பது தெரியவந்தது.
ஆனால், கிரைண்டர் மட்டும் கோயம்புத்தூர் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் கிரைண்டர்கள் தென்னிந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உண்மைகளை இப்போதாவது கண்டறிந்து சொல்ல வேண்டும் என்ற தைரியம் என்டிடிவி நிறுவனத்துக்கு வந்ததே. அந்தமட்டில் சந்தோஷம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக