சனி, 7 மே, 2016

அன்புமணி: உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் ...தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கு இடமில்லை!

நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.: அன்புமணி பேட்டி தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக ஆட்சி அமைக்கும் என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், எங்களது பிரச்சாரம் மக்களிடையே சென்றடைந்துள்ளது. எங்களது டார்கெட் இளைஞர்கள்தான். அவர்களை கவர்ந்துள்ளோம். 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 60 விழுக்காடு பொதுவாக்காளர்கள். அதில் 3ல் இரண்டு விழுக்காடு இளைய வாக்காளர்கள். அவர்களிடம் எங்களுடைய செய்திகள் சென்றடைந்துள்ளது.

அன்புமணியால் மட்டுமே பூரண மதுவிலக்கை கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்தபோது போலியோ ஒழிப்புக்காக நான் பாடுபட்டேன். ஜனாதிபதி என்னை அழைத்து பாராட்டினார். 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்தேன். அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக நான் இருந்தபோது லயோலா கல்லூரி ஒரு சர்வே எடுத்தது. அதில் தமிழகத்தில் இருந்து சென்ற 13 அமைச்சர்களில் அன்புமணி சிறந்தவர் என்று சர்வே சொன்னது. அப்போது இருந்த அமைச்சர்களில் 4 சர்வதேச விருதுகளை பெற்றேன் என்றார்.

கேள்வி: வரும் சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் உங்களுடைய ஆதரவு யாருக்கு? பதில்: இன்றைக்கு தேர்தல் நடந்தால் நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நாங்கள் ஆட்சிக்கு வரப்போகிறோம். தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. உறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வருகிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம், இளைஞர்கள், விவசாயிகள், நெசவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு உள்ளது. திமுக அதிமுக வேண்டாம். புதிய ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக